Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெடித்துச் சிதறிய பேஸ்புக் செயற்கைக்கோள்! (வீடியோ)

பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது. அந்த செயற்கைகோளின் பெயர் ஆமோஸ்-6. இதனை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், அது திடீரென வெடித்துச் சிதறியதால், அதிர்ச்சியில் இருக்கிறது பேஸ்புக்.

நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் வகையில் இந்த ஆமோஸ்-6-ஐ உருவாக்கியது பேஸ்புக். இணையத்தை மேம்படுத்தும் செயற்கைகோள்களை எடுத்துச்செல்வதே பால்கான்-9 இன் வேலை. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு “யுடெல்சாட் என்னும் பிரெஞ்சு தகவல்தொழில்நுட்ப செயற்கைகோள் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளியில் இருந்து இணைய சேவையை அளிப்பது பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டம். இதற்காக ஆமோஸ்-6 என்னும் செயற்கைகோள் மூலம் அந்த கனவு நிறைவேற்றப்படும்” என அறிவித்தார் மார்க்.

அதன்படி, ஆமோஸ்-6 செயற்கைகோள் தயாரிக்கும் பணி, சில மாதங்களுக்கு முன்னரே துவங்கியது. அதை விண்ணில் செலுத்துவதற்காக உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள 'கேப்கனவெரல்' மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள் நேற்று நடந்து கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது. விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தற்போது ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மார்க் ஸக்கர்பேர்க், பல்வேறு மக்களுக்கு பலன் அளித்திருக்க வேண்டிய இத்திட்டம், இந்த விபத்தால் தோல்வி அடைந்திருப்பதால், தான் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அதே வேளையில் பேஸ்புக்கின் மற்ற தொழில்நுட்ப திட்டமான 'அக்யூலா' மூலம் தங்களின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பணி செய்வோம் என தெரிவித்துள்ளார்.

 

வெடித்துச் சிதறிய வீடியோ..

 

 

- ஜெ.சாய்ராம்.
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ