Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்று புதிய பைக்குகளை களமிறக்குகிறது ஹீரோ!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப், தான் விற்பனை செய்யும் பேஷன் ப்ரோ (100சிசி), சூப்பர்  ஸ்ப்ளெண்டர்  (125சிசி), அச்சீவர் (150சிசி) ஆகிய பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட மாடல்களை, வரும் பண்டிகை காலத்தில் களமிறக்க முடிவு செய்துள்ளது. இதில் சூப்பர் ஸ்ப்ளெண்டர் மற்றும் பேஷன் ஆகிய பைக்குகளில் ஹீரோவின் ஸ்பெஷல் i3s தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. 

 

பேஷன் பைக்கின் விற்பனை குறைந்து வருவதால், ஸ்டார்ட்-ஸ்டாப் பயன்படுத்தி பைக்குக்குப் புத்துணர்ச்சி அளிக்க முன்வந்துள்ளது ஹீரோ. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 100சிசி செக்மென்ட்டில் ஹீரோ அசைக்க முடியாத முன்னிலையுடன் திகழ்ந்தாலும், 125சிசி செக்மென்ட்டில் ஹீரோவுக்கும், ஹோண்டாவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. எனவே மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்ப்ளெண்டர் மூலம் விற்பனையில் முன்னிலை பெறுவதற்கு ஹீரோ தயாராவது தெரிகிறது. இதுதவிர நீண்ட நாட்களாக பெரிய அளவில் மாற்றங்களின்றி விற்பனை செய்யப்படும் அச்சீவர், முற்றிலும் புதிய அவதாரத்தில் வெளியாக இருக்கிறது.எனவே பஜாஜ் மற்றும் யமஹாவின் கோட்டையாக இருக்கும் 150சிசி செக்மென்ட்டில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஹீரோ நம்புகிறது. மேலும் வரும் 4 மாதங்களில், தான் விற்பனை செய்யும் வாகனங்கள் அனைத்தையும் BS-IV மாசு விதிகளின்படி தயாரிக்கும் எண்ணத்தில் ஹீரோ இருக்கிறது. பொதுவாகவே பண்டிகை காலமான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவது வாடிக்கை. இதன் வாயிலாக அந்த வருடம் முழுதும் விற்பனையில் உச்சத்தைத் தொட முடியும் என்பது அவர்களது நம்பிக்கை.

- ராகுல் சிவகுரு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close