Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுசூகி ஜிக்ஸர் புது வேரியண்ட்: ரேஸ் கொடி கிராஃபிக்ஸுடன்!

தனது பிரபலமான 155சிசி பைக்கான ஜிக்ஸர் மற்றும் ஜிக்ஸர் SF பைக்கில், SP எனும் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது சுஸூகி.

Matt Fibroin Grey, Glass Sparkle Black (AR4) எனும் இரண்டு நிறங்கள் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் உடன் கிடைக்கும் இந்த பைக்குகளின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலை, முறையே 80,726 ரூபாய் மற்றும் 88,857 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரேஸ் கொடி டிஸைனில் க்ராஃபிக்ஸ், SP லோகோ மற்றும் Decals, சிவப்பு Pin-Stripe உடனான அலாய் வீல்கள், சிவப்பு நிற இருக்கை, க்ளியர் லென்ஸ் LED டெயில் லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. குறைவான எண்ணிக்கையில் ஸ்போர்ட்டியாகக் காட்சியளிக்கும்படி தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக்குகளில் மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இல்லை. இதனுடன் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஜிக்ஸர் SF-Fi பைக்கை, MotoGP கலரில் சில டீலர்களில் சுஸூகி களமிறக்கியுள்ளது. பொதுவாகவே, பண்டிகை காலங்களில் கார்/பைக் விற்பனையில் எழுச்சி இருக்கும் என்பதால், வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஸ்பெஷல் எடிஷன்கள், ஃபேஸ்லிஃப்ட் அல்லது முற்றிலும் புதிய பைக்குகளை, வாகனத் தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

-ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ