Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹுண்டாய் எலீட் ஐ20-ல் 6 ஏர் பேக் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்!

 

தனது பிரிமியம் ஹேட்ச்பேக்கான எலீட் ஐ20-ல், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலை, விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய்.

DUAL VTVT தொழில்நுட்பத்துடன் கூடிய 1.4 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் - 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்புடன் வரும் இந்த கார், 100bhp பவர் மற்றும் 13.5kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேட்டிக் எலீட் ஐ20 காரை, ஏற்றுமதிக்காக ஏற்கனவே ஹூண்டாய் இங்கு தயாரித்து வருவதை இங்கு சொல்லியாக வேண்டும். Magna வேரியன்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட எலீட் ஐ20 வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டச் ஸ்கிரின் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரிவர்ஸ் கேமரா, அலாய் வீல் போன்ற சிறப்பம்சங்கள் இதில் இருக்காது என்பது நெருடல். ஆனால் ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல்கள், 1ஜிபி ஸ்டோரேஜுடன் ஆடியோ சிஸ்டம், இரண்டு காற்றுப்பைகள் போன்ற வசதிகள் இருப்பது ஆறுதல். ஹோண்டா ஜாஸ் மற்றும் மாருதி சுஸூகி பெலினோ ஆகிய ஹேட்ச்பேக்குகளின் CVT ஆட்டோமேட்டிக் மாடல்களுடன் போட்டியிடப்போகும் எலீட் ஐ20 ஆட்டோமேட்டிக், பெரிய இன்ஜினைக் கொண்டிருப்பதால் நான்கு மீட்டர் கார்களுக்கான கலால் வரி விலக்கு கிடைக்காது. எனவே மேலே சொன்ன கார்களைவிட இதன் விலை சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் எலீட் ஐ20-ன் டாப் வேரியன்ட்டான Asta (O)-வில் 6 காற்றுப்பைகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட்டின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள், முறையே 7.76 லட்சம் (பெட்ரோல்) மற்றும் 8.85 லட்சம் (டீசல்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக ஃபோர்டு ஃபிகோவுக்கு அடுத்தபடியாக, ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் 6 காற்றுப்பைகள் கொண்ட காராக ஹூண்டாய் எலீட் ஐ20 இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட முதல் தலைமுறை ஐ20 காரிலே, 6 காற்றுப்பைகள், பின்பக்க டிஸ்க் பிரேக், டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை இருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராகுல் சிவகுரு

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ