Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிக மைலேஜ்... குறைந்த டிராக்... ஆடி A4-ன் அசத்தல் அஸ்திரம்!

 

இந்தியாவில் தான் அதிகளவில் விற்பனை செய்யும் காரான A4-ன் அடுத்த தலைமுறை B9 மாடலை, Premium Plus & Technology எனும் இரண்டு வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தியுள்ளது ஆடி நிறுவனம். இன்று மாலை சென்னை, லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் நடிகை ராதிகா ஆப்தே இதை லான்ச் செய்கிறார்.

இவற்றின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள் முறையே 38.10 லட்சம் மற்றும் 41.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இது மெர்சிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ் C 200 மற்றும் ஜாகுவார் XE கார்களைவிட குறைவு என்றாலும், பிஎம்டபிள்யூ 3-சிரீஸ் 320i காரைவிட சற்று அதிகம்தான். இப்போதைக்கு 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் களமிறங்கியிருக்கிறது ஆடி A4.150bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், 7 ஸ்பீடு இரட்டை க்ளட்ச் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆடியின் பிரபலமான 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை விரைவில் A4-ல் எதிர்பார்க்கலாம். 25மிமீ அதிக நீளம், 16மிமீ கூடுதல் அகலம், 12மிமீ உயர்த்தப்பட்ட வீல்பேஸ் என புதிய A4-ன் அளவுகள் அதிகரித்திருந்தாலும், பழைய காரைவிட புதிய காரின் எடை 95-120 கிலோ வரை குறைந்துள்ளது. எனவே முன்பைவிட சிறிய இன்ஜினைக் கொண்டிருக்கும் புதிய A4-ன் பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் (0-100கிமீ: 8.5 விநாடிகள்) என ஆடி தெரிவித்துள்ளது. எனவே இதன் அராய் மைலேஜான 17.84kmpl, போட்டியாளர்களைவிட அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அதிகபட்சமாக 210கிமீ வேகம் செல்லக்கூடிய புதிய A4-ன் வெளிப்புறத்தில் ஹெட்லைட் - டெயில் லைட் - 17 இன்ச் அலாய் வீல்கள் தவிர அதிரடியான மாற்றங்கள் இல்லாவிட்டாலும், உட்புறம் Q7 காரை நினைவுபடுத்தும்படி மாடர்ன்னாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே Virtual Cockpit போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர், Touchpad உடனான MMI இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், Apple CarPlay மற்றும் Android Auto முலம் மொபைல்களை இணைக்கும் திறன், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், கீ மெமரி, வுட் ஃபினிஷ் கேபின், லெதர் இருக்கைகள், சன்ரூஃப், 8 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, வயர்லெஸ் போன் சார்ஜர் எனப் பல சிறப்பம்சங்கள் இருப்பது வரவேற்கத்தக்கது. 0.25 Drag கொண்டுள்ள புதிய A4, ஆடி இதுவரை தயாரித்துள்ள A4 கார்களில் ஏரோடைனமிக்கான மாடல் ஆகும்.

-ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ