Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலைவன மணலை, வளமாக்கிய சீனர்கள்!

ந்தியாவில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசியை, செயற்கையாக உருவாக்கி 'பிளாஸ்டிக் அரிசி' என உலகையே அதிரவைத்த சீனர்கள், தற்போது புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். மணலை மண்ணாக்கும் புதிய தொழில்நுட்பத்தைத்தான் கண்டறிந்துள்ளனர். இது என்னடா பெரிய விஷயம் என்கிறீர்களா? சாதாரண மணலில், பெரும்பாலான தாவரங்கள் முளைக்காது. ஆனால், மணலை வளமான மண்ணாக மாற்றிய பிறகு அந்த மண்ணில் வளம் கூடியுள்ளது. சாதாரணமாக மண்ணில் விளையும் பயிர்கள் அனைத்தும், மணலில் இருந்து மாற்றிய மண்ணிலும் விளைந்தன. இப்படி சீனாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள 1.6 ஹெக்டேர் பரப்பளவினை கொண்ட 'உலன் புக்' பாலைவனத்தை நல்ல வளமான மண்கொண்ட விவசாய பூமியாக மாற்றியிருக்கிறார்கள். இந்த நிலத்தில் நெல், மக்காச்சோளம், தக்காளி, தர்பூசணி, சூரிய காந்தி அருமையான விளைச்சலை தந்துள்ளதாக, ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

     இது பற்றி பேசிய ஆய்வுக்குழுவின் தலைவர், யி ஜிஜியன், "பாலை நிலங்களை விலை நிலங்களாக மாற்றும் இந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் சீன ஆராய்ச்சியாளர்கள். இதனை, சீனாவின் சாங்கிங் ஜியோட்டாங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு தாவரங்களில் உள்ள 'செல்லுலோஸ்'-ஐ பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளனர். செல்லுலோஸிலிருந்து வெளிவரும் பசையானது மணலோடு சேர்க்கும் போது நீர் மற்றும் ஊட்டச் சத்துக்களை தக்க வைத்துக் கொள்வதோடு தாவரங்கள் தாங்கி வளர்வதற்கான சூழலையும் பெறுகிறது. இந்த தொழில் நுட்பமானது பாலைகளை தாவரங்கள் வளருவதற்கேற்ற நல்ல நிலங்களாக மாற்ற உதவி புரியும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு புதிதாக மாற்றப்பட்ட நிலங்களில் வாழும் தாவரங்களின் நீர் தேவை சாதாரண நிலங்களில் வாழும் தாவரங்களைப் போன்றே உள்ளது. மேலும், குறைந்த உரங்களின் மூலம் இந்த நிலங்களில் அதிக விளைச்சல் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைவான மழை உள்ள பகுதிகளில் இதை சோதனை செய்த போதும் தாவரங்கள் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பையே இந்த நிலங்கள் பெற்றுள்ளது. மணல் நிலங்களை நல்ல வளமான நிலங்களாக மாற்ற 22,500 முதல் 40,500 யான் ($3,373 - $6071) ஒரு ஹெக்டேருக்கு செலவாகும்" என ஆய்வுக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீத நிலங்கள் பாலைவனங்களாக உள்ளது. மேலும் நல்ல நிலங்களும் 35 சதவீதம் கெட்டுவிட்டன. (2014 நிலவரப்படி). இவ்வாறு நிலங்கள் பாலைவனங்களாக மாறுவதால் அதிக மண் அரிப்பு போன்றவை அவ்வப்போது ஏற்படுகிறது. அதிகபட்சமாக ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு & காஷ்மீர், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலும் பாலை நிலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- மு.முருகன்.
(மாணவப் பத்திரிகையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

சிவாஜி குறித்து எம்.ஜி.ஆரின் சிலாகிப்பு! #HBDSivaji #NadigarThilagam
placeholder

ல பெண்களைக் கெடுத்துப் பொய் சொல்லும் பாத்திரம் அது. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் மக்களைத் தன்பால் இழுக்கு மளவுக்கு, ‘ஆங்கிலப் பாணி’ என்று உயர்த்திச் சொல்லப்படும் தகுதியோடு நடித்துப் புகழ்பெற்றார். இன்று, வேறு கோணங்களில் நின்று பார்ப்பவர்கள் சிலர், “ஆங்கிலப் படங்களைப் பார்த்து, அந்தப் பாத்திரங்களைப் போலவே, அந்தப் பாணியிலேயே நடிக்கிறார்’ என்று கூறுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் (‘திரும்பிப் பார்’ படமெடுத்த காலத்தில்) சிவாஜி அவர்கள் அதிக ஆங்கிலப் படங்களை எப்படிப் பார்த்திருக்க முடியும்? இப்போது ஆங்கிலப் படங்களில் நடிக்கும் நடிகர்கள் அப்போது எங்கே இருந்தார்கள்? இப்போது வருகிற படங்களைப் போல் அப்போது வருவதுண்டா? ஏற்று நடிக்கும் பாத்திரங்களுக்கு அவர் அற்புதமான மெருகேற்றி ஒப்புயர்வற்று நடிக்கும் போது, அந்த நடிப்புக்குப் பிறப்பிடமான பயிற்சியையும், தேர்ச்சியையுமல்லவா நாம் போற்ற வேண்டும்.

உங்க ஏரியா எப்படி இருக்கு? உள்ளாட்சி சர்வே முடிவுகள்..!

MUST READ