Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஜினியிடம் பிடித்தது இது.. ஆடியில் பிடித்தது இது..! - ராதிகா ஆப்தே

இந்தியாவில் ஆடியின் டாப் செல்லரான A4 காரின் 9வது தலைமுறை மாடலை, சென்னையில் ''கபாலி'' புகழ் நடிகை ராதிகா ஆப்தே அறிமுகப்படுத்தினார். அப்போது புதிய A4 காரைத் தனது 5வது ஆடி காராக வாங்கியுள்ள சுரேஷ் என்பவருக்கு, காருக்கான சாவியை அவர் வழங்கினார். மெர்சிடீஸ் பென்ஸ் சி-கிளாஸ், ஜாகுவார் XE, பிஎம்டபிள்யூ 3-சிரீஸ் ஆகிய கார்களுடன் போட்டியிடும் ஆடி A4 காரின் சென்னை எக்‌ஸ் ஷோரும் விலை, 39.02 லட்சத்தில் துவங்குகிறது. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் களமிறங்கியிருக்கிறது ஆடி A4.150bhp பவர் மற்றும் 25kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், 7 ஸ்பீடு இரட்டை க்ளட்ச் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பைவிட சிறிய இன்ஜினைக் கொண்டிருக்கும் புதிய A4-ன் எடை, பழைய காரைவிட 95 கிலோ குறைந்துள்ளதால், பெர்ஃபாமென்ஸ் சிறப்பாக இருக்கும் (0-100கிமீ: 8.5 விநாடிகள்) என ஆடி தெரிவித்துள்ளது. புதிய A4 காரின் முக்கியமான சிறப்பம்சங்கள் பின்வருமாறு; 

முழுக்க LED பல்புகளைக் கொண்ட ஹெட்லைட்-டெயில் லைட் 

முப்பரிமாண க்ரோம் க்ரில் மற்றும் சன்ரூஃப்

Virtual Cockpit போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர்

Touchpad உடனான MMI இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

பாதுகாப்புக்காக 8 காற்றுப்பைகள், ABS, EBD, Tyre Pressure Monitoring system

Apple CarPlay மற்றும் Android Auto, ரிவர்ஸ் கேமரா

3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்

புதிய ஆடி A4 காரை அறிமுகப்படுத்துவதற்காக, சென்னை வந்திருந்த நடிகை ராதிகா ஆப்தேவிடம் இரு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பதில்களும் இங்கே!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், கபாலி படத்தில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். எங்களுக்கு ரஜினிகாந்த் பற்றி தெரியாத விஷயம் எதாவது தாங்கள் சொல்ல முடியுமா?

கபாலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான், அவரது பிறந்தநாள் வந்தது. பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பற்றி ரஜினியிடம் கேட்ட போது, ''எனக்கு பிறந்தநாள் கொண்டாடும் பழக்கம் இல்லை. நான் எப்போது பெரிய நடிகன் ஆனேனோ, அப்போது முதலாகத்தான் எனது பிறந்தநாளைக் கொண்டாடத் துவங்கினேன். ஏனெனில் வாழக்கையில் பெரிதாகச் சாதித்துவிட்டு பிறந்தநாள் கொண்டாடுவது எனக்குச் சரியெனப் படுகிறது' என்றார். எவ்வுளவு உயரம் போனாலும், ரஜினியின் அந்த தன்னடக்கம்தான் என்னை மிகவும் கவர்ந்தது. 

நீங்கள் அறிமுகப்படுத்திய ஆடி A4 காரில் தங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன?

Phone box எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் எனது மொபைலை பத்திரமாக வைத்திருக்கலாம் என்பதுடன், வயர் இல்லாமல் சார்ஜ் ஏற்றிக் கொள்ளவும் முடிகிறது. தவிர Smartphone Interface மற்றும் Speech dialogue system இருப்பதால், வாய்ஸ் கமாண்ட் மூலமாக மொபைலைத் தொடாமலேயே என்னால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப முடிகிறது. எனவே கார் ஓட்டும்போது நமது கவனம் முழுதும் சாலையில் தான் இருக்கும். என்னைப் பொறுத்தவரை, ஆடி A4 காரை ''Speaking Car'' என்பேன்.

-ராகுல் சிவகுரு
படங்கள்- சொ.பாலசுப்ரமணியன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ