Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபேஸ்புக் பயன்படுத்தும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை தெரியுமா?

 ஃபேஸ்புக் பயன்படுத்தாத நபரே இல்லை என்ற நிலைமை இன்னும் சில காலத்தில் வந்துவிடும். ஃபேஸ்புக் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே இருக்க, தற்போது அதுகுறித்து வெளிவந்துள்ள ஆய்வு முடிவு ஒன்று வியப்பாக இருக்கிறது. சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சமீபத்தில் ஆசிய-பசுபிக் கூட்டமைப்பிலுள்ள நாடுகளில் பேஸ்புக் பயனாளிகளை பற்றிய தகவல்களை வெளியிட்டது. அதில் இந்தியாவில் பேஸ்புக் உபயோகப்படுத்தும் நபர்களில் வெறும் 24 சதவீதம் பேர்தான் பெண்கள் என்கிறது அந்த ஆய்வு. ஃபேஸ்புக் பயன்படுத்தும் ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கைக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

             ஆசிய-பசிபிக் கூட்டமைப்பில் மொத்தம் 46 நாடுகள் இருக்கின்றன. அவற்றில் பேஸ்புக் உபயோகிக்கும் நபர்களின் பெண்களின் சரசாரி 38 % மட்டுமே. இந்த சராசரியை விடவும், இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை குறைவு என்கிறது அந்த ஆய்வு. இந்த வரிசையில் வங்காளதேசம் 23%, பாகிஸ்தான் 22% என இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. இதில் நியூசிலாந்து 59% பெண் பேஸ்புக் பயனாளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இங்குதான் அதிகமான பெண்கள் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். அதை தவிர, ஆஸ்திரேலியா, மங்கோலியா, பிலிப்பைன்ஸ் உட்பட பிற நாடுகளில் ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம் ஆண்களை விட அதிகம். இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, ஃபேஸ்புக்கின் பயன்பாடு தெற்கு ஆசியாவில் குறைவாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். 

                  இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக் பயன்படுத்தப்படும். கேட்ஜெட்கள் கருத்தில் கொள்ளப்படாமல், ஃபேஸ்புக் கணக்குகள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் பாலினம், வயது ஆகியவற்றை வைத்தே, இந்த முடிவுகள் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஃபேஸ்புக் மூலம் நடக்கும் வணிகம், கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள் அனைத்திலும் ஆண்களின் பங்களிப்பே, அதிகம் இருப்பதாகத் தெரியவருகிறது. 

-துரை.நாகராஜன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close