Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 மீட்டர் நீள பொலெரோ அறிமுகம்! விலை 6.95 லட்சம்!

 

 

பொலெரோ பவர் + என்ற பெயரில், 4 மீட்டர் நீளத்துக்குள்ளான பொலெரோவை, சென்னை எக்ஸ் ஷோரும் விலையான 6.95 லட்சத்துக்கு அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது மஹிந்திரா. இது தற்போது விற்பனையில் இருக்கும் பொலேரோவைவிட 1 லட்ச ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 4 மீட்டருக்குள் நீளம் மற்றும் 1,500சிசிக்கும் குறைவான டீசல் இன்ஜின் இருந்தால், கலால் வரி விதிப்பு குறைவாக இருக்கும் என்பதே இதற்கு முக்கிய காரணம். பொலெரோ பவர் + காரில், TUV3OO மற்றும் நுவோஸ்போர்ட் ஆகிய கார்களில் இருக்கும் அதே 1,493சிசி, 3 சிலிண்டர் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இங்கு mHawkD70 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இன்ஜின், 71bhp பவர்-19.5kgm டார்க்-16.5kpl அராய் மைலேஜ் ஆகியவற்றை வெளிப்படுத்தும் விதமாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் பொலேரோவைவிட 13 சதவிகிதம் அதிக பவர் மற்றும் 5 சதவிகிதம் கூடுதல் மைலேஜ் கொடுக்கும் என்கிறது மஹிந்திரா. மேலும் பொலெரோ பவர் + காரின் நீளம், தற்போது விற்பனையில் இருக்கும் பொலேரோவைவிட 112மிமீ குறைக்கப்பட்டிருந்தாலும், காரின் அகலம்-உயரம்-வீல்பேஸ்-கேபின் ஆகியவற்றில் மாற்றங்கள் இல்லை. எனவே இதிலும் 7 இருக்கைகள் இருக்கின்றன என்பது பெரிய ப்ளஸ். SLE, SLX, ZLX எனும் மூன்று வேரியன்ட்கள் மற்றும் Diamond White, Rocky Beige, Java Brown, Silver ஆகிய 4 நிறங்களில் கிடைக்கும் பொலெரோ பவர் + காருக்கு, 3 வருடம்/1 லட்சம் கிமீ வாரன்டி அளிக்கிறது மஹிந்திரா. 2005 தொடங்கி 2015 வரை டாப் செல்லிங் எஸ்யூவியாக இருந்த பொலேரோ, க்ரெட்டா மற்றும் விட்டாரா ப்ரெஸ்ஸா ஆகிய கார்களின் வரவால் தனது இடத்தை இழந்தது. எனவே 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட பொலெரோ பவர் + கார் வாயிலாக, தான் விட்ட இடத்தைக் கைப்பிடிக்கும் முயற்சியில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. இந்த காரின் சென்னை எக்ஸ் ஷோரும் விலைகள் பின்வருமாறு;

SLE BS4 Power +: 6,95,364
SLX BS4 Power +: 7,60,837
ZLX BS4 Power + 7,95,876



முக்கிய சிறப்பம்சங்கள்: 

New Front and Rear Bumpers
Revised Body Graphics & Grille
Blue Vision Headlamps
Micro Hybrid system
Dual-Tone Interior
Bluetooth/USB/AUX/CD - Audio Player
Body-Boloured Rear View Mirrors
Rear Washer & Wiper
Driver Information System (DIS) 
Digital Instrument Cluster
Voice Messaging System
Better Cushioning for Seven Seats
Engine Immobiliser

- ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ