Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்க ஆஃபீஸ் வாழ்க்கையை பத்து GIFல ஜாலியா பாக்கலாம் வாங்க!

1. வேலை கெடக்கலங்குற வேதனையில இருந்து விடுபட்டு... மொதமொதல்ல ஒரு வேலை கிடைக்கும் போது, மனசுல நமக்கு வேலை கொடுத்த கம்பெனிய நினைப்போம் பாருங்க....

2. ஒரு மூணு மாசம் வரை ஒன்னும் தெரியாது. எல்லாம் நல்லாத் தான் போய்க்கிட்டு இருக்கும். அதுக்கு அப்புறம் தான் நமக்கு சம்பளம் இன்னும் கொஞ்சம் கூடக் குடுக்கலாம். ரொம்ப கொறச்சி குடுக்குறாங்களோன்னு தோணும், இல்ல நம்ம பிரண்ட்ஸ் அப்டி நெனைக்க வெப்பாய்ங்க. நண்பேண்டா... அதுக்கு அப்புறம் நம்ம சம்பளத்த பத்தி மத்தவங்க கேக்குறப்போ... எல்லாம் அலுத்துக்கிட்டு ஒரு பதில் சொல்வோமே... நோட் தட் ரியாக்‌ஷன் மை லார்ட். 

 3 அய்யா சாமி ஒரு வேலைய உருப்படியா முடிக்கிறதுக்கு உள்ள, அடுத்த வேலைய கொடுத்து சாவடிக்கிறாங்க ன்னு நிம்மதியா பொலம்ப கூட முடியாம வேலை பாக்குறப்போ இப்புடித்தானே இருக்கும்...!

 

 

4. நாம ஓவர்டைம் பாத்து, ஓவர் டைத்துக்கு சம்பளமும் கிடக்காம... வேலையை கச்சிதமா முடிச்சுக் கொடுத்திருப்போம். ஆனா முடிச்ச வேலைக்கு வேற ஒரு பழம் ஆஃபீஸ்ல எல்லார் கிட்டயும் பேர் வாங்குறப்போ.... அப்புடியே....

 

5. நம்ம உயர் அதிகாரி, மேனேஜர் இல்லங்க, அவருக்கும் மேல இருக்குற புலி, சிங்கம் எல்லாம் நம்ம கிட்டயே ஸ்ட்ரைட்டா வந்து "Come to My cabin  Right now" ன்னு சொன்னா.... வெளிய காட்டிக்காம உள்ளுக் குள்ளேயே ஒரு பதறு பதறும் பாருங்க.... காலைல சாப்ட்ட செரிக்காத பொங்கல் எல்லாம் அப்ப செரிக்கும்.... அந்த ரியாக்‌ஷன்.

6. பாஸுக்க்கெல்லாம் பாஸ், அன்னக்கி பாத்து டெல்லில இருந்து வந்திருப்பார். அது வரைக்கும் சூப்பரா பிரசன்ட் பண்ணிக்கிட்டிருந்த நம்மளத் தான், அவர் முன்னாடியும் பிரசண்ட் பண்ண சொல்லி இருப்பாங்க. எல்லாம் நல்லாத் தான் போய்க்கிட்டு இருக்கும். நம்ம பிரசன்டேஷனை முடிக்கிறப்போ தான் கிஷான் ஜாம விட சூப்பரா நமக்கு ஜாம் ஆகும் பாருங்க. அன்னக்கி தோணும் ஆண்டவன் இல்லடான்னு.
 

7. நாம படிச்சி படிச்சி " இந்த கம்பெனிக்கு வராத டா, அவ்வளவு சரி இல்ல. நல்ல வேலைய நானே பாத்து வாங்கிக் குடுக்குறேன்னு சொல்லி இருப்போம். அப்புடியும், நம்மளை மீறி வேற ஒருத்தன் மூலமா " நாம வேல பாக்குற அதே வெளங்காத கம்பெனில வந்து வேலைக்கு சேர்ந்துக்கிட்டு புலம்புறப்போ... நமக்கு என்ன சொல்றதுன்னு தெரியாம ஒரு ரியாக்‌ஷன் கொடுப்போமே. அத பாத்து அவனே ஓவரா அழ ஆரம்பிச்சிடுவான்.

8. சார், ஊர்ல மகாமகம், 12 வருஷத்துக்கு ஒரு தடவ வர்ற திருவிழா எனக்கு 5 நாள் லீவ் வேணும் சார்ன்னு கேட்ட உடனே, "வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்"ன்னு விஜய்காந்த் கணக்கா  நம்ம லீவ் அப்ளிகேஷனாலேயே தூக்கி அடிப்பாரே நம்ம மேனெஜர். அத வாங்கிக்கிட்டு வெளிய வர்றப்ப... 

9. லீவ் கெடக்கிலங்குற கடுப்புலேர்ந்து வெளியவே வந்திருக்க மாட்டோம். அதுக்குள்ள இன்க்ரிமென்ட் பாத்தா 1,500 ரூபாய் போட்டிருப்பாங்க. டேய் நான் கம்பெனிக்கு உழைச்சுக் கொடுத்தத, வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போயிருந்தா கூட சம்பளத்த மாதிரி 10 மடங்கு சம்பாதிச்சிருப்பேன்னு கடுப்பா வரும்.

அப்ப தான் ஹெச்ஆர் " உங்கள் உரிமைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் கடமைகளயும் மறந்துவிட வேண்டாம் "ன்னு டயலாக் விட்டிருப்பாங்க. அட ரொம்ப நல்லவங்களா இருக்காங்களேன்னு சொல்லி, நேர்மையாக நான் போன வருஷம் இவ்ளோ உழைச்சிருக்கேன்னு  ப்ரூஃபோட விளக்கம் கொடுத்திட்டு வருவோம்.

அதுக்கு அப்புறம் அவங்க பதிலுக்காக ஏங்கி காத்துக்கிட்டிருக்குறப்ப "Definitely we will consider Your hard work in next appraisal " ன்னு சொல்வாங்க. அதுக்கு பிறகு தான் இவங்க கிட்டருந்து லீவையும் வாங்க முடியாது, சம்பளத்தையும் வாங்க முடியாதுன்னு புரியும். அதுக்கு அப்புறம் நம்ம மேனேஜர், ஹெச்ஆர்-ன்னு  எவன பாத்தாலும் நாம வேணும்னே சீண்டுவோம்ம்ம்ம்ம்ம்ம் பாருங்க.......

 

10. இப்புடி ரெண்டு தடவ உக்காந்த போதும், கட்டம் கட்ட ஆரம்பிச்சிருவாங்க. அது நமக்கு புரிய வந்த உடனேயே, அடுத்த வேலைக்கு டிரை பண்ணி ஒரு வேலையும் கெடச்சிடும். அதுக்கு அப்புறம், நம்ம பழைய ஆஃபீஸ்ல ரிசைன் பண்றப்ப ஒரு ரியாக்‌ஷன் காட்டுவோமே...! உன் வேலையும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம்-ன்னு.. அப்ப...

-மு.சா.கெளதமன்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ