Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

BE முடிச்சாதான் உளுத்தம் பருப்பு தருவியா #NationalEngineersDay

 

இன்னைக்கு நேஷனல் எஞ்சினியர்ஸ் டே. பாரத ரத்னா விருதுபெற்ற திரு.விஸ்வேஸ்ரய்யாவோட பிறந்த நாளதான் இந்தியால பொறியாளர்கள் நாளா கொண்டாடறாங்க.. தெருவுல எறங்கி “டேய் எஞ்சினியர்”ன்னா 8 தலையாவது திரும்பும். நம்ம நாட்டுல இவங்க பாடுதான் பாவம். நல்ல நாள் அதுவுமா சோக கதையான்னு யோசிக்காதீங்க.. இதுதான் எங்க கலவர நிலவரம் என்கிறார்கள் BE பாய்ஸ்.

கல்யாணம் பண்ணிட்டு குழந்தைக்கு வெயிட் பண்றவங்க நிலைமையை விட மோசம் எஞ்சனியரிங் முடிச்சிட்டு வேலைக்கு வெயிட் பண்றவன் நிலைமை. நைட்டு 9 மணிக்கு டிஎன்பிஎல் கிரிக்கெட் மேட்ச் பார்த்தா “தொர வேலைக்கு போயிட்டு டயர்டா வந்திருக்காரோ”ன்னு திட்டுற அக்காக்கு பயந்து காலைல ஹைலைட்ஸ் பாத்துட்டு இருப்போம். ஃபோன் அடிக்கும். “சும்மாதான இருக்க. ஃபோன எடேன்”ன்னு உள்ள இருந்து அப்பா சவுண்டுவிடுவாரு.. இந்த வார்த்தை தாங்க. “சும்மாதான இருக்க”. ஏன் வேலைக்கு போறவங்க ஃபோன எடுக்க கூடாதா?

கிரெடிட் கார்ட்காரந்தான் கூப்பிடுவான், பேசிட்டு வச்சிடலாம்னு எடுத்தா நம்ம நேரம் சுந்தரமூர்த்தி அங்கிள் பேசுவாரு. அப்பாவ கூப்பிடுறேன் அங்கிள்னு சொன்னா “இருடா தம்பி. உங்கிட்டதான் பேசணும். என்ன பண்ற”ன்னு ஒரு 20 மார்க் கேள்வி கேட்பாரு.

பதில் சொல்ல மைக்ரோசெகண்ட்தான் டைம். இல்லைன்னா அவரே சொல்லிடுவாரு ”சும்மாதான இருக்க?உங்கப்பா ரொம்ப ஃபீல் பண்றாருப்பா. இப்பலாம் எலக்ட்ரீஷியன கூப்பிட்டாலே 4 நாளு கழிச்சுதான் அப்பாய்ன்மெண்ட் தர்ரான். நீ எஞ்சினியரிங் படிச்சிருக்க”ன்னு ஒரு pause விடுவாரு. என்னன்னு பாத்தா அந்த எலக்ட்ரிஷியன் வேலைக்காச்சும் போகலாமேன்னு சொல்வாரு. 50 வயசுக்கு மேல ஆனவங்களுக்கு காஃபி குடிச்சிட்டு நியூஸ்பேப்பர் படிக்கிறது தவிர வேற எந்த உரிமையும் இல்லைன்னு சட்டம் கொண்டு வரணும்.

பேசினவரு டயர்ட் ஆகுறாரோ இல்லையோ, கேட்ட நம்ம டயர்டாகி ஹக்காடான்னு உக்காந்தா அம்மா ஆஜர்.”கொஞ்சம் உளுத்தம் பருப்பு வாங்கிட்டு வாடா.. சும்மாதான இருக்க”. அந்த வார்த்தைய கொஞ்சம் இரக்கத்தோடு சொல்றது அம்மா மட்டும்தான்னாலும் நமக்கு பிபி அதிகமா எகிற வைக்கறதும் அவங்கதான். 16 வருஷமா படிக்கிறப்ப கூடத்தான் கடைக்கு போனோம். என்னவோ சும்மா இருக்கிறப்ப மட்டும்தான் வேலை வாங்குற மாதிரி டயலாக். வீட்டுல இருந்தா வேலைக்காரி வந்து “சும்மாதான இருக்க.வா.பரண க்ளீண் பன்ணுவோம்”னு சொல்லாம இருக்கவாச்சும் கடைக்கு போலாம்னு கிளம்புவோம்

அண்ணாச்சி மாதிரி சிரிச்ச முகத்த ஆதித்யா சேனல்ல கூட பாக்க முடியாது. அவர பாத்தாலே இருக்கிற கவலை எல்லாம் பறந்துடும். ஆனா நம்ம நேரம் பாருங்க. “வா தம்பி. படிப்பு முடிஞ்சிடுச்சா”னு கேட்டுடுவாரு. .. BE முடிச்சாதான் உளுத்த பருப்பு தருவியாடா மதன்பாப் மண்டையான்னு….. மைண்ட் வாய்ஸ் பேசும். சொல்ல முடியுமா?

“ஆமா அண்ணாச்சி. வேலைக்கு வெயிட்டிங்.”

வருஷத்துல 365 நாளும் கடைல இருக்காரு. தெனம் 16 மணி நேரம். எந்த கேப்புல சினிமா பாப்பாருன்னு தெரில. நமக்குன்னு ஒரு பன்ச் எடுத்து விடுவாரு பாருங்க “வேலையும், பொண்ணும் நமக்காக வெயிட் பண்ணனும்ப்பா. நாம அதுக்காக வெயிட் பண்ண கூடாது”. பருப்பு வாங்க போன இடத்துல செருப்புல அடி வாங்கிறதுக்கு பேசாம நாம பத்தாவதுல ஃபெயில் ஆயிருக்கலாம்.

குடும்பமும் சமூகமும் நம்மள வெறுக்கறப்ப நமக்கிருக்கிற ஒரே ஆறுதல் ஃப்ரெண்ட்ஸ்தான். கிளம்பி அவனுங்கள பாக்க போனா கொஞ்சம் ஜாலியா அரட்டை போகும். பொங்கல் மிளகுக்கு நடுவுல கிடக்கிற கல்லாட்டம் ஒருத்தன் வருவான் பாருங்க...

“ஹாய் guys.. Am flying to sweden for MS. All set”

வாவ்டான்னு கோரஸா சொல்வானுங்க கூட இருக்கிற பக்கிங்க. இதுல என்ன வாவ்னே புரியல. 60%மார்க்ஸும் 6 லட்ச ரூபா காசும் இருந்தா எவன் வேணும்னாலும் ஸ்வீடன்ல படிக்கலாம். நாமலாம் 87% வச்சிருப்போம். அந்த ஸ்வீடன்காரனுக்கு அட்டடெண்டன்ஸ் கூட அவ்ளோ இருக்காது. இந்த லட்சணத்துல வாவ்டான்னா கோவம் வருமா வராதா? கோவத்த கண்ட்ரோல் பண்ணி congrats டான்னு சொன்னதுக்கு அவன் வைப்பான் பாருங்க ஆப்பு

“Eve சும்மாதான இருக்கிங்க. Lets go clubbing. My treat”

இந்த சும்மா இருக்கிறத +2 முடிச்சிட்டே செஞ்சிருக்கலாம்.

-கார்க்கிபவா

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close