Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.வி.பிரகாஷ், சீமான், ராஜ்கிரண், ராமராஜன்... இவர்களுக்கு என்ன அசைன்மென்ட் கொடுக்கலாம்?

லேட்டஸ்ட் பகீர் - பாபா ராம்தேவ் தனது பதஞ்சலி நிறுவனம் மூலமாக ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதோடு முடிந்த அளவிற்கு அவற்றை பற்றி புரமோட் செய்யவும் தொடங்கியிருக்கிறார். ஆடைகளைத் துறந்த சாமியார், வெஸ்டர்ன் ஜீன்ஸை பிஸினஸ் புரமோட் செய்யும் முரட்டு கான்ட்ராஸ்ட் காமெடி எல்லாம் இங்கு மட்டுமே காணக் கிடைக்கும். இதுபோல வேறு என்னவெல்லாம் கான்ட்ராஸ்ட்டாய் நடக்கலாம் என்ற கருப்புக் காமெடி( அதான் ஜி பிளாக் ஹியூமர்) பதிவுதான் இது.

ஜி.வி.பிரகாஷ்:

உங்களுக்கு அறவே பிடிக்காத எதிரியை எக்ஸாமில் பெயிலாக்க ஒரு கேள்வி இருக்கிறது. ஜி.வி பிரகாஷின் முந்தைய பட டீசருக்கும் அடுத்தப் பட டீசருக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியே அது. சகட்டுமேனிக்கு குளுகுளு ஜிலுஜிலு படங்களை சுட்டுத்தள்ளும் ஜி.வியை கான்ட்ராஸ்ட்டாக பக்திப்படங்களின் புரொமோஷனுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். தேனாண்டாள் பிலிம்ஸ் கவனத்திற்கு...

திருநாவுக்கரசர்:

இத்தனை நாட்களாக ஒரு துண்டு ஆக்‌ஷன் சீன் கூட இல்லாமல் வெறிச்சோடி இருந்த சத்தியமூர்த்தி பவன் இப்போதுதான் களை கட்டியிருக்கிறது. இனி கிழிந்து தொங்கப் போகும் தாரை தப்பட்டைகளை ரிப்பேர் பார்க்கும் வேலை திருநாவுக்கரசருக்குத்தான். காஷ்மீரில் கூட வெள்ளைக் கொடி வேலை செய்துவிடும். ஆனால் கதர் கட்சியில் வாய்ப்பே இல்லை. எனவே வெள்ளைத்துணியை புரொமோட் செய்ய திருநாவுக்கரசரை அணுகலாம்.

ராமராஜன்:

மத்திய கிழக்கு நாடுகளுக்கு முன்னதாகவே பெல்லி டான்ஸை கண்டுபிடித்த பெருமை நம்மூர் வசூல் சக்ரவர்த்தி ராமராஜனையே சேரும். துண்டு, ட்ரவுசரோடு ஆடி தயாரிப்பாளர்களை கோட் சூட் போட வைத்த 'மேன் ஆஃப் சிம்பிளிசிட்டி'. இவரை பில்லா அஜீத் காஸ்ட்யூமில் கற்பனை செய்ய எவ்வளவோ முயன்றும் மூளை மூர்ச்சையாகிறது. எனவே ராமராஜனுக்கு கான்ட்ராஸ்ட் கோட் சூட்தான். புரொமோஷன் செய்தால் பிசினஸ் சும்மா பிச்சுக்கும்.

ராஜ்கிரண்:

ஓடுவது, பறப்பது, குதிப்பது, பாய்வது என டைனோசர் முட்டை தொடங்கி டபுள் ஆம்லேட் வரை சகலவற்றையும் கடைவாயில் மென்று அரைத்து உள்ளே தள்ளும் பெருமைக்குச் சொந்தக்காரர் நம்ம தல ராஜ்கிரண். மாட்டுவண்டியில் வரும் அவரை கான்ட்ராஸ்ட்டாக புல்லட் பைக்கிற்கு புரொமோஷன் செய்யச் சொல்லலாம்தான். தனுஷ் முந்திவிட்டார். எனவே இவரை ஆர்கானிக் ஃபார்மிங் புரொமோஷன்களுக்கு பான்படுத்திக் கொள்ளலாம். 

சிவா:

ஆல் ஓவர் வேர்ல்டிலும் மிர்ச்சி சிவாவைப் போல டான்ஸ் ஆட ஆள் கிடையாது. பேட்டாராப்பில் ஆடும் வடிவேலுவையும் சேற்றில் இறங்கி காலால் சோறு பிசையும் 'இந்தியன்' கமலையும் இணைத்து புது பியூஷனை உருவாக்கி நம்மை கதற விடுவதற்காகவே அவருக்கு அவார்ட் கொடுக்கலாம். இந்த ஜென் Z மைக்கேல் ஜாக்சனை வைத்து ஹிப்ஹாப், பாப்பிங், பிரேக் உள்ளிட்ட டான்ஸ் வகைகளுக்கு புரொமோஷன்கள் செய்யலாம்.

சீமான்:

எதிர்த்து இருப்பவரின் முகத்தில் எச்சில் தெறிக்க தெறிக்க பேசுவது, கோபத்தில் மைக்கை கடித்து வைப்பது, மின்னல்வேகத்தில் கை காலை ஆட்டி அந்தரத்தில் மியூசிக் போடுவது என ஆண்டு முழுவதும் பிஸியாகவே இருக்கிறார் சீமான். அவரை வைத்து ஆழ்நிலை தியானத்தை புரொமோட் செய்யலாம். அன்புத்தம்பிகள் கூட்டங்கூட்டமாக ஆதரவளித்து அதிரடிப்பார்கள்.

மன்மோகன்:

இவரின் சாபம்தான் மொத்த இந்தியாவையும் எங்கே நம்ம பிரதமர் என இப்போது தேட வைக்கிறது. ஆட்சியில் இருந்தபோது இவர் பேசிய டயலாக்குகளை கோர்த்து 'ஒரு' பக்க புத்தகமே போடலாம். இவருக்கு கான்ட்ராஸ்ட் சப்ஜெக்ட்... வேறு என்ன மைக்கும் லவுட் ஸ்பீக்கரும்தான். மைக்கை வைத்து மைக்கிலேயே புரொமோஷன் செய்ய சர்வ லட்சணங்களும் பொருந்திய இவரால் மட்டுமே முடியும். 

-நித்திஷ்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ