Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பீடு 250 டெராஃப்ளாப்ஸ்..மெமரி 300 டெராபைட்..அசரடிக்கும் இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்! #Paramishan

பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும், திறன்வாய்ந்த “சூப்பர் கம்ப்யூட்டர்”  எனப்படும் அதிநவீன கணினியை, அசாம் மாநிலத்திலுள்ள ஐ.ஐ.டி - கவுகாத்தியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சமீபத்தில் திறந்து வைத்தார். 

பரம்-இஷான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டரை பயன்பாட்டுக்கு திறந்து வைத்த பின் பேசிய அமைச்சர் ஜவடேகர், “நாட்டின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்பிராந்தியம் என அனைத்து பகுதிகளிலும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ள இத்தருணம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நாட்டினுடைய வளர்ச்சியின் குறியீடாக, அந்நாட்டிலுள்ள தரமான ஆராய்ச்சி மற்றும் அதன் சார்ந்த முன்னேற்றம் என்று கருதப்படும் வேளையில், நம் நாட்டின் நவீன கோவில்களான ஐ.ஐ.டி.க்களை, அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றுவது என்னும் சவாலை நிறைவேற்றுவதன் மூலம் இங்குள்ள கல்வி நிறுவங்களின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் கற்றல் திறன்கள் மேம்படும்” என்று அவர் மேலும் கூறினார். 

ஐஐடி-கவுகாத்தியின் இயக்குநர், பேராசிரியர் கவுதம் பிஸ்வாஸ் பேசும்போது, “புதியதாக நிறுவப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரான பரம்-இஷான் 250 டெராபிளாப்ஸ் வேகம் மற்றும் முந்நூறு டெரா பைட்டுகள் மெமரி கொண்டது. மேலும் இந்த சூப்பர் கம்ப்யூட்டரானது வெறும் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமின்றி தகுதி வாய்த்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் மற்றும் ஈர்க்கும் இடமாகவும் இருக்கும்” எனக் கூறினார்.

இந்த சூப்பர் கம்ப்யூட்டரானது வேதியியல் கணக்கீடுகள், திரவ இயக்கவியல், மின்காந்தம், கட்டிட பொறியியல் கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தேர்வுமுறைகளில் மட்டுமல்லாது வானிலை, சீதோஷ்ணநிலை மற்றும் நில அதிர்வு கண்காணிப்பு போன்றவைகளிலும் பயன்படுமென்பது குறிப்பிடத்தக்கது. நிலம் முதல் ஆகாயம் வரை, ஒரு செல் உயிரிகள் முதல் மனிதன் வரை பல்வேறுபட்ட தகவல்களை திரட்டுவதற்கும் அதை பகுப்பாய்வு செய்வதற்கும் சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் அதிநவீன கணினிகள் அவசியமானது. சூப்பர் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், சீனா  மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா அந்த பட்டியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் 73 சூப்பர் கம்ப்யூட்டர்களை அமைப்பதற்காக 4500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.சாய்ராம்,
மாணவப் பத்திரிகையாளர் 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict
placeholder

தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

MUST READ