Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏலே சமாதானம்லே..! #HappyPeaceday

இன்னிக்கு முழுக்க உங்க காதுல.. பீஸ். பீஸ்னு தான் கேட்கனும்! புரட்டாசி மாசத்துல கேட்க கூடாத வார்த்தையா இருக்கலாம். பச்... வேற வழியே இல்லை. ஏன்னா! இன்னிக்குதான் சர்வதேச அமைதி தினம். இன்னிக்கு ஒருநாள் மட்டுமாவது யார் வம்புக்கு, தும்புக்கும் போகாமா டென்சன், ஸ்டிரெஸ், சண்டை, சச்சரவு இல்லாம சாந்த சொரூபத்தின் மொத்த உருவமா இருங்க ஜீ.

இந்த சர்வதேச அமைதி தினம் எப்படி வரலாற்றில் இணைந்தது என்ற சின்ன STD தெரியுமா? குட்டி பிளாஷ் பேக். யூகிக்கக் கூடிய பதில்தான். உலக சமாதானத்தை உருவாக்கும் முயற்சியில் முக்கியப் பங்காற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொது செயலாளர் ஹமர்சீல்ட், 1961 ஆம் வருஷம் இதேநாளில்தான் (செப்டம்பர் 21) விமான விபத்தில் உயிரிழந்தார். அமைதிக்காக போராடியவர் உயிர் துறந்த நாளை கௌரவப்படுத்துவதற்கும், ஐ.நா நாடுகளில் அமைதியை உருவாக்கும் முயற்சியில் உயிழந்தவர்களை நினைவுகூறும் விதத்திலும் சர்வதேச அமைதி தினமாக இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது. 

அண்டை நாடுகளுடன் போர்களால் உலக வரலாற்றில் இருக்கும் கசப்பான, அமைதியற்ற நிகழ்வுகளின் விளைவு கோடிக்கணக்கான மனிதர்களின் உயிர்கள் பறிபோனதும்.. உறவுகளை,  வாழ்வாதாரத்தை இழந்து நடை பிணமாக மீதமுள்ள மனிதர்கள் பூமியில் இருந்ததும் தான் மிச்சம்.

எல்லாம் சரிதான்.... ஹிஸ்ட்ரிலெல்லாம் ரொம்ப உருக்கமாத்தான் இருக்கு. இப்ப நாங்க எந்த நாட்டுக்கு இடையில இருக்கிற தகராறு தீர்த்து வைக்கனும்னு கேட்கிறீங்களா? அதெல்லாம் வேணாம் ஜீ. சமாதான நாள்ல உங்களைச் சுத்தி இருக்கிறங்கவளோட எப்படி நடந்துக்கலாம்னு சில ஐடியாஸ். 

 


இதுவரை சுற்றார், உறவினர்கள், சொந்த பந்தங்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் ஏதாவது வாய்க்கா தகாராறு இருந்தால்.. அவர்களிடம் சமாதானமாகி நல்லுறவை உண்டாக்க இதுதான் அந்த நல்ல நாள்.  சமாதானம்! சமாதானம்!

 


மினியன்ஸ் சைஸ் தப்புக்காக.. போர். ஆமா.. போர் என வம்பு பண்றவங்களிடம் வெள்ளைக் கொடி காட்டி தப்பித்து, உலகில் அமைதியை நிலைநாட்டுங்கள்!  


வெறுப்பேத்தி பார்ப்பதை ஒரு வேலையா வைத்திருக்கும் விஷ பூச்சிகளை அட்டாக் பண்ண, கையில் நாக்கு பூச்சி எட்டிப்பார்த்தால்.. அதனிடம்.. நோ வார்.. ஒன்லி லவ் என்ற சொல்லி தட்டிக்கொடுத்து தூக்க வைச்சுருங்க.


பேஸ்புக்கில் யார் என்ன ஸ்டேட்டஸ் போட்டலும் லைக் போட்டாமல், ரசித்துவிட்டு மட்டும் போகும் பாவிகளா நீங்கள்?.. இன்னிக்கு பார்க்கும் ஸ்டேட்ஸுக்கு எல்லாம் லைக்கு பதில் லவ் எமோசனைத் தூவி,  நீங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய இதுதான் உகந்த நாள்..



டிரீட் கொடுக்காம ஏமாதினா பக்கிகள், ப்ளூ டிக் காண்பித்தும் ரிப்ளே பண்ணாத சைத்தான்கள், நம்மளைக் கழட்டிவிட்டு ஹோட்டல், சினிமா, ட்ரிப் செல்லும் துரோகிகள் போன்ற சில  நட்பூகள் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பிளாக் செய்து இருந்தால்.. இன்னிக்கு அன் பிளாக் பண்ணி , அந்தப் பாவிகளை ரட்சித்து.. அமைதி தினத்தை கொண்டாடுங்கள்.. நட்பு சூழ் உலகு அழகானது தானே ப்ரெண்ட்ஸ்.


#Happy_peace_day
 

 
- கே.அபிநயா
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ