Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

க்ராஷ் டெஸ்ட்டில் ஃபெயிலான க்விட் மற்றும் மொபிலியோ! #SaferCarsForIndia

நான்கு மாதங்களுக்கு முன்பாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களை (க்விட், செலெரியோ, ஸ்கார்ப்பியோ, எக்கோ, இயான்) க்ராஷ் டெஸ்ட் செய்த Global NCAP அமைப்பு, Adult Occupant Protection-ல் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கை வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மேம்படுத்தப்பட்ட கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் (1 காற்றுப்பை மற்றும் Seat Belt Pretensioner) கூடிய க்விட் மற்றும் மொபிலியோவின் 2 வேரியன்ட்களையும் க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதில் 1 ஸ்டார் ரேட்டிங்கை Adult Occupant Protection மற்றும் Child Occupant Protection-க்காக பெற்றது க்விட். பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும்கூட, ஓட்டுனரின் மார்பு பகுதியில் அதிக அளவு விபத்துக்கான பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

காற்றுப்பைகள் இல்லாத பேஸ் மாடல் மொபிலியோவை பரிசோதித்த Global NCAP அமைப்பு, Adult Occupant Protection-ல் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கை வழங்கியது. ஆனால் காரின் கட்டுமானம் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம். பின்பு ஹோண்டா நிறுவனம் கேட்டுக் கொண்டதன் பெயரில், 2 காற்றுப்பைகள் கொண்ட மொபிலியோவை க்ராஷ் டெஸ்ட் பரிசோதனை செய்தது Global NCAP அமைப்பு. இது Adult Occupant Protection-ல் 3 ஸ்டார் ரேட்டிங்கையும், Child Occupant Protection-ல் 2 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றது. இந்த கார்களின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகளைப் பற்றி, Global NCAP அமைப்பின் பொதுச் செயலாளர் டேவிட் வார்ட் கூறியதாவது,''ரெனோ மிகக் குறைந்த அளவில்தான் காரின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது (ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கில் இருந்து 1 ஸ்டார் ரேட்டிங்). பட்ஜெட் கார் என்றாலும், ஆரம்ப மாடலாக இருந்தாலும், 1 ஸ்டார் ரேட்டிங்காவது பெறும் வகையில் கார் இருப்பது மிகவும் அவசியம். காற்றுப்பைகள் எந்த அளவிற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்பது மொபிலியோவின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது. பாதுகாப்பான கார்களைத் தயாரிப்பது பற்றி அனைத்து நிறுவனங்களுக்கும் தெரியும் என்றாலும், ஏபிஎஸ், காற்றுப்பை, Seat Belt Pretensioner போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஆப்ஷனலாக இல்லாமல், ஸ்டாண்டர்டாகக் கார்களில் அளிக்கப்படுவதைக் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார்.

இந்திய அரசாங்கம் அக்டோபர் 2017-ல் கொண்டு வர இருக்கும் Bharat NCAP அமைப்பு, இதற்கான தீர்வாக அமையும் என்பது ஆட்டோமொபைல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

-ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ