Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இதப் படிங்க... அக்டோபர் மாசம் 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்!

 

"உங்கள் சம்பளம் உங்களை பணக்காரர் ஆக்காது, உங்கள் செலவுப் பழக்கங்கள் தான் " ன்னு சார்லஸ் ஏ.ஜெப் என்கிற பொருளாதார மேதை சொல்லி இருக்கிறார்.

உங்க செலவை டிராக் பண்ண சொன்னா என்ன பண்ணுவீங்க? உடனே, ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்து பட்ஜெட் போடுவீங்க. அடுத்த நாள் அந்த பேப்பர் எங்க இருக்குன்னு கூட தெரியாது.

இதுக்காகத்தான் இந்த "ஃபேமிலி பட்ஜெட் டேபிள் "  தயார் செஞ்சிருக்கோம். இதுல நீங்க பெரும்பாலும் பயன்படுத்துற பொருட்களை கொடுத்திருக்கோம். குறிப்பிட்டிருக்கும் பொருட்களை விட கூடுதலாக நீங்கள் பொருட்களை வாங்குறீங்கன்னா தாராளமாக அதையும் இந்த பட்டியலில் சேர்த்துக்குங்க, 

உங்கள் செலவுகள் உங்களுக்கு நியாயமா தெரிஞ்சா அதை செய்ங்க. பாஸ், இந்த இடத்துல நாம கொஞ்சம் ஓவராத் தான் செலவு பண்றோம்-னு தோணுச்சுன்னாலே.... ப்ளீஸ் கண்டிப்பா  செலவ கொறச்சுக்குங்க.

அக்கார்டிங் டூ ரூல் 135 சப் செக்‌ஷன் 83 செலவுகளை 4 டைப்பா பிரிச்சிருக்கொம்.


1. கட்டுக்கடங்காத செலவு - காய்கறி விக்கிறவன்கிட்ட பேரம் பேசலாம், காலேஜ் நடத்தறவன்கிட்ட பேச முடியுமா? சீட்ட கிழிச்சி கைல கொடுத்துடுவாய்ங்க.  உங்க கட்டுப்பாட்ட மீறி உலகத்தோட உலகமா ஓடுற செலவுகளை தான் இந்த லிஸ்ட்ல சேத்துருக்கோம்.


2. கட்டுப்படுத்துற செலவுகள்  - உங்களால 800 ரூபாய்க்கு எடுத்துக்குற சட்டைய  500 ரூபாய்க்கு வாங்கிக்கலாம். டெய்லி கே.எஃப்.சி-ல சாய்ங்காலம் ஸ்நாக்ஸ் சாப்பிடுறதுக்கு பதிலா, ஆஃபீஸ் முனை கடைல சிம்பிளா சாப்பிடலாம். இது மாதிரி நம்ம ஏரியாவுல வர்ற செலவுகளைத் தான் இந்த லிஸ்ட்ல சேத்துருக்கோம்.

3. எதிர்பாக்காத செலவுகள் - எதிர்பாக்கலல்ல, ஆஃபீஸ் கெளம்புறப்ப அம்புட்டு பெரிய வண்டிய தள்ளிவிட்டு உடச்சிருப்பாங்கன்னு எதிர்பாக்கலல்ல, இப்புடி எதிர்பாக்காம நடக்குற விஷயங்களுக்கு நாம செய்யுற செலவுகளத் தான் இந்த லிஸ்ட்ல சேத்திருக்கோம்.

4. சீக்ரெட் செலவு - அட புரியாத மாதிரி நடிக்காதீங்க ப்ரோ. வீட்டுக்கு தெரியாம தம் அடிக்கிறது, சரக்கு அடிக்கிறது, லவ்வரோட பீச், ரெஸ்டாரண்டுன்னு சுத்துறது, எதுக்கு எடுத்தாலும் டிரீட் கேக்குற (அதே சமயத்துல ட்ரீட் வெக்குற) ப்ரெண்ட்ஸுக்கு செலவு பண்றது எல்லாம்.. எல்லாம் எந்த கணக்குல போகும். இந்த கணக்குல தான் வரும்

படிச்சி ஃபில்லப் பண்ணுங்க, அடுத்த மாசத்துல உங்களுக்கு ஒரு 2000 ரூபாயாவது மிச்சமாகும்.

உங்களுக்கு 2000 மிச்சமாக நான் கேரண்டின்னு சொல்லிட்டு போய்டுவேன், நீங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணுவீங்களா..... நோ சான்ஸ் டியூட்ஸ்.

 உங்க காச மிச்சப்படுத்த, நீங்க தான் கியாரண்டி எடுத்துக்கணும்.... போட்ட பட்ஜெட் படி ஒழுங்கா நடந்துக்கனும். உங்கள் பட்ஜெட் வெற்றி பெற  வாழ்த்துக்கள்.

நாங்க பேச்சுலர்... எங்களுக்கு இதுல ஏதாவது இருக்கான்னு கேட்டீங்கன்னா.... கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவு செலவு இருக்குன்னு பாருங்களேன்.

பட் இருதய நோயாளிகள், கர்பிணிப் பெண்கள், வயதானவர்கள், இத பாத்துராதீங்கப்பு... அப்புறம் நாளக்கி ஆஃபீஸுக்கு போக முடியாது...!

உங்க மாச பட்ஜெட்டை போடணுமா... இங்கே க்ளிக் செய்க... : bit.ly/2dys5uR

 

மு.சா.கெளதமன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close