Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அலைபேசி மூலமே விந்துதானம் சாத்தியம். எப்படி?

 

நம்மூரில் கருமுட்டை தானம் போல, வெளிநாடுகளில் உயிரணு தானம் பிரபலம்.

திருமணம் செய்யாமலோ அல்லது கணவரிடம் உள்ள குறைபாடுகளுக்காகவோ உயிரணு தானம் பெற்றுக் குழந்தை பெற்றுக் கொள்கிற பெண்களின் எண்ணிக்கை வெளிநாடுகளில் அதிகரித்து வருகிறது.

தானம் கொடுக்கத் தயாராக உள்ளவர்களிடம் இருந்து சட்டெனக் கேட்டுப் பெற்றுக் குழந்தை பெற்றுக் கொள்கிற மாதிரியான ஈஸி மேட்டர் இல்லை இது. தானம் கொடுக்கக் காத்திருப்பவரின் ஆதி முதல் அந்தம் வரை ஜாதகத்தையே அலசி ஆராய்ந்து, கலர் முதல் உயரம் வரை பிடித்திருந்தால் மட்டுமே அடுத்தக் கட்டத்துக்குப் போவார்கள். 

 லண்டன் ஸ்பெர்ம் பேங்க் டோனர்ஸ் என்கிற பெயரில் இந்த வேலையை சுலபமாக்க ஒரு ஆப்ஸ் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் உயிரணு தானம் செய்யக் காத்திருப்பவர்கள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருப்பார்கள். உதாரணத்துக்கு 'கலகலப்பானவன்... எல்லோருக்கும் பிடித்தமானவன்...  அன்பானவன்.... பெண்கள் விரும்பும் பர்சனாலிட்டி...'' என்றெல்லாம் சுய பில்டப் பலமாக இருக்கும். டாக்டர், இன்ஜினியர், பிசினஸ்மேன்.... என தனித்தனி பிரிவுகளில் தேடலாம்.

தானம் பெற விரும்புவோர், இந்தத் தகவல்களுடன் தங்களது எதிர்பார்ப்புகளை மேட்ச் செய்து பார்த்து ஓ.கே என்றால் யெஸ் சொல்லலாம். அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு தொகையை அதே ஆப்ஸ் மூலம் செலுத்தினால், உயிரணு சாம்பிளானது தானம் கேட்ட பெண் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற மருத்துவமனைக்கே அனுப்பப்படும். அதன் பிறகே அடுத்தக்கட்ட சிகிச்சைகள்.... இந்த சிகிச்சை இங்கிலாந்தின் சட்டத்திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பிரத்யேக மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது. 

'மொபைல் மூலமே இனப்பெருக்கமா...? இது அப்பாக்களை இழிவுப்படுத்துகிற செயல்' என எதிர்ப்புக் குரல்கள் ஒரு பக்கம் வலுத்துக் கொண்டிருக்கின்றன.

''இதை அப்படிப் பார்க்கத் தேவையில்லை. பெண்கள் தங்களது விருப்பத்துக்கேற்ற குழந்தையைத் தேர்வு செய்து பெற்றுக் கொள்ளச் செய்கிற சுதந்திரச் செயலாகப் பார்க்கலாமே...'' என பெண்ணிய ஆதரவுக் குரல்களுக்கும் பஞ்சமில்லை.

- ஆர்.வைதேகி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ