Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட்டகாச இன்டீரியருடன் அறிமுகமானது ஃபியட் அர்பன் க்ராஸ். விலை?

அவென்ச்சுராவைத் தொடர்ந்து, ஃபியட்டின் மற்றோரு க்ராஸ்ஓவர் ஹேட்ச்பேக்காக அவென்ச்சுரா அர்பன் க்ராஸ் காரை, 7.01 - 9.85 லட்சத்துக்கு (சென்னை எக்ஸ் ஷோரும் விலை) அறிமுகப்படுத்தியுள்ளது ஃபியட் நிறுவனம். இந்த காரின் டெலிவரி, அக்டோபர் 1, 2016 முதலாகத் துவங்கும் என ஃபியட் தெரிவித்துள்ளது. Active, Dynamic ஆகிய இரு டீசல் வேரியன்ட்களில், 93bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.3 லிட்டர் மல்ட்டிஜெட் டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. Emotion (powered by Abarth) எனும் ஒரே பெட்ரோல் வேரியன்ட்டில், 140bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் லிட்டர் T-Jet டர்போ பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

காரின் வெளிப்புறத்தில், 205மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பாடி கிளாடிங், பியானோ பிளாக் கிரில், ஸ்கிட் பிளேட் உடனான டூயல் டோன் பம்பர்கள், டைமண்ட் கட் ஃபினிஷ் கொண்ட 16 இன்ச் அலாய் வீல்கள், பின்பக்க ஸ்பாய்லர், ரூஃப் ரெயில் ஆகியவை கவர்கின்றன. காரின் உட்புறத்தில், பிரிமீயமான டூயல் டோன் இன்டீரியர் ஃப்ரெஷ்ஷாக உள்ளது. இதில் சென்ட்ரல் மற்றும் ஆட்டோமேட்டிக் டோர் லாக்கிங், பின்பக்க ஏசி வென்ட், ‘Delay’ மற்றும் ‘Auto-Down’ வசதிகளைக் கொண்ட முன்பக்க பவர் விண்டோஸ், நேவிகேஷன் - ப்ளுடூத் ஆடியோ - டெலிஃபோன் வசதிகளைக் கொண்ட Smartech 5.0 இன்ச் டச் ஸ்கிரீன் மியூசிக் சிஸ்டம் ஆகிய சிறப்பம்சங்கள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. 

பண்டிகை காலத்தை முன்னிட்டு, குறுகிய காலச் சலுகையாக, பிரிமீயம் Burgundy டிஸைனர் இன்டீரியர், கதவுகளில் Burgundy கலர் வேலைப்பாடுகள், பியானோ ஃபினிஷ் கதவு ஆர்ம்ரெஸ்ட், பேட்ஜிங் உடனான டிஸைனர் இருக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய டிஸைனர் இன்டீரியர் பேக்கேஜ், Dynamic டீசல் மற்றும் Emotion பெட்ரோல் வேரியன்ட்களில் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இந்த காரின் அறிமுக விலைகள் பின்வருமாறு;

1.3 லிட்டர், 93bhp மல்ட்டிஜெட் Active (டீசல்) - 7.01 லட்சம்

1.3 லிட்டர் 93bhp மல்ட்டிஜெட் Dynamic (டீசல்) -. 7.85 லட்சம்

1.4 லிட்டர் 140bhp T-Jet பெட்ரோல் Emotion (Powered by Abarth) - 9.85 லட்சம்

 

-ராகுல் சிவகுரு

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close