Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒவ்வொரு செல்ஃபியும் ஒவ்வொரு ஓட்டு! நீங்களும் செல்ஃபிக்கு ரெடியா? #SelfieContest

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக்காலம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதோ நவம்பரில்  நடக்கவிருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரம் அமெரிக்காவில் நடந்துவருகிறது. டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையான போட்டி தான் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் வைரல். 

இருவரில், ஹிலாரிக்குத்தான் ஆதரவு அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக ஹிலாரி கிளிண்டன்  தான் வருவார் என்பதே அனைவரின் கருத்து. அமெரிக்க இளைஞர்கள் மனதில் இவர் இடம்பெற முக்கிய காரணம் என்ன தெரியுமா? 

ஹிலாரி பற்றியான செய்திகளும்,  தேர்தல் நடவடிக்கைகள், பேச்சுகள் அனைவரையும் ஈர்த்ததற்கான முக்கிய காரணமே, அவை சமுக வலைதளமாங்களில் பகிரப்பட்டது தான். அதில் ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் முதன்மையானது என்பதற்கு  சமீபத்தில் வெளியான  ஹிலாரியின் படமே சான்று. 

நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிறைந்திருந்த ஒரு அறையில், ஹிலாரியும் இருக்கிறார். அனைத்து இளைஞர்களுமே ஹிலாரியை நோக்காமல், திரும்பியே நிறுக்கிறார்கள். காரணம், அனைவரும் திரும்பி நின்று ஹிலாரியுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பதே. அந்த நிகழ்வை அப்படியே படமாக்குகிறார், ஹிலாரியின் புகைப்படக்காரர் Barbara Kinney. அப்புகைப்படம் ட்விட்டரில் பதியப்படுகிறது. ஒரு மணிநேரத்தில் 8000 முறை பகிரப்பட்டிருக்கிறது. 1000க்கும் மேற்பட்ட கமெண்டுகள் என்று வைரலடித்தது புகைப்படம்.

தேர்தல் பிரச்சாரத்தில் இன்றைய இளைஞர்களின் வசிப்பிடங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் தான் ஹிலாரியின் டார்கெட். கூடவே இந்த செல்ஃபி புகைப்படங்கள். தேர்தல் பிரசாரத்திற்காக எங்கு ஹிலாரி சென்றாலும், அங்கிருப்பவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளத் தவறுவதில்லை. ஒவ்வொரு செல்ஃபியும் ஒவ்வொரு ஓட்டு என்பதே தற்போதைய கருத்துக்கணிப்பு.

பல்லாயிரம் அடி உயரத்திலிருக்கும் கோபுரத்தின் மீது தொடங்கி, நடுக்கடல் செஃபி வரையிலும் நம்ம இளசுகள்  செல்ஃபிக்காக எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயங்குவதில்லை. அந்த அளவிற்கு செல்ஃபி மோகம் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கிறது.  நின்றால், நடந்தால், உருண்டால் என்று எங்கும் செல்ஃபி மயம் தான். 

அதுவும் ஒரு பிரபலத்துடன் செல்ஃபி என்றால் சும்மாவா..... ரஜினி, கமல் என்று நம்முடைய செல்ஃபி லிஸ்டும் எகிறிக்கிடக்கும். நமக்குப் பிடித்தமான நடிக/நடிகையோ, அரசியல் தலைவரோ, பிரலமான பிரமுகர்களோ யாருடனாவது செஃபி எடுக்கதோன்றும் அல்லது எடுத்திருப்போம். 

அப்படியான புகைப்படங்கள் உங்களிடம் இருந்தால், photocontest@vikatan.com என்ற இணையதளத்திற்கு மெயில் அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் செல்ஃபி படங்கள் எங்கள் விகடன் தளத்தில் ஆல்பமாக இடம் பெறும். 

உங்க ஸ்பெஷல் செல்ஃபிக்காக காத்துக்கிட்டிருக்கோம் பாஸ்!

-பி.எஸ்.முத்து-

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ