Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் ஃபிளிப்கார்ட்டின் ‘தி பிக் பில்லியன் டேஸ்’..! சொதப்புமா... சொல்லி அடிக்குமா? #bigbillionday

ள்ளுபடி விற்பனை என்ற பெயரில் ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்கள் செய்யும் அலப்பறை சொல்லி மாளாது. இந்த முறையும் விழாக்காலத்தை முன்னிட்டு இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃபிளிப்கார்ட் 'தி பிக் பில்லியன் டேஸ்' என்ற பெயரில்  5 நாள் புதிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. 

கவர்ச்சி சலுகைகள்! 

இந்த முறை 2016, அக்டோபர் 2 தொடங்கி 6 வரை ஃப்ளிப்கார்ட்டின் ‘தி பிக் பில்லியன் டேஸ்’ விற்பனை நடைபெறுகிறது. ஏராளமான பிரிவுகளில், குறைந்த விலையில் அதிகமான பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு மகத்தான வாய்ப்பு கிடைக்கும்; ஃபேஷன் பிராண்ட்கள் தொடங்கி சமீபத்திய ஸ்மார்ட்போன்கள், மின்னணு சாதனங்கள், டிவி, வீட்டு அலங்கார மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை இந்த பிக் பில்லியன் விற்பனையில், கவர்ச்சியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வாங்கி மகிழலாம் என ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்! 

ஃபிளிப்கார்ட் கடந்த 2014ம் ஆண்டு 'தி பிக் பில்லியன் டேஸ்' என்ற மாபெரும் தள்ளுபடி அளிப்பதாக அதிரடியான விளம்பரங்கள் செய்தது. இந்த அறிவிப்பால் இணையவாசிகள், எதிர்பார்ப்புடன் அன்று காலை முதலே ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் பொருட்களை வாங்க காத்திருந்தனர் . ஒரே சமயத்தில் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் ஃபிளிப்கார்ட் தளம் முடங்கியது. பொருட்களை தேர்வு செய்த சிலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. பொருட்களுக்கான டெலிவரி சேவை உங்கள் பகுதிக்கு இல்லை, விற்று தீர்ந்துவிட்டது என பலருக்கும் ஏமாற்றமான பதில்களே கிடைத்தன. இதனால் ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனம் முறையற்ற ரீதியில் விளம்பரம் செய்து ஏமாற்றியதாக மத்திய அரசிடமும் புகார்களை அளித்தனர். 

மன்னிப்பு கோருகிறோம்! 

'தி பிக் பில்லியன் டேஸ்' முடிவில் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்ததால் ஃபிளிப்கார்ட் நிறுவனர்கள் தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்தனர். அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் இது தொடர்பாக கூறும்போது, "எங்கள் நிறுவனத்தின் அறிவிப்பால், நிஜமாகவே அந்த தினம் பிக் பில்லியன் டேவாக இருந்தது. ஆனால் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாதது வருத்தம் அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்காததும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கும் மனதார மன்னிப்பு கோருகிறோம்" என்றனர். 

மூன்றாவது எடிஷன்! 

இந்த நிலையில் இந்த ஆண்டும் 'தி பிக் பில்லியன் டேஸ்' என்ற பெயரில் இந்தியாவின் மிகப் பெரிய ஷாப்பிங் திருவிழாவாக ஃபிளிப்கார்ட் கொண்டாட உள்ளது. இது இந்த நிறுவனத்தின் மூன்றாவது எடிஷன் ஆகும்.  முந்தைய தி பிக் பில்லியன் டேஸ் விற்பனையைப்போல இந்த முறையும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் விற்பனையில் சொதப்புமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அன்றைய தினத்தில் சமூக வலைத்தளங்களில் மக்கள் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தைப் பற்றித் தாறுமாறாகக் கருத்துகளைத் தெரிவித்த ஒரு சில மீம்ஸ்கள் உங்கள் நினைவுக்காக... 

மலரும் மீம்ஸ் நினைவுகள்!  

 

 

சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ