Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

61,800 ரூபாய்க்குக் களமிறங்கியது ஹீரோ அச்சீவர் 150சிசி!

 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், பிரிமீயம் கம்யூட்டர் செக்மென்ட்டில், தனது அச்சீவர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்யூட்டர் செக்மென்ட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ள இந்த நிறுவனம், 125சிசி பைக்கிலிருந்து கூடுதல் பெர்ஃபாமென்ஸ்க்காக அப்கிரேடு ஆக விரும்புவர்களுக்கு ஏற்றபடி இந்த பைக்கை வடிவமைத்துள்ளது தெரிகிறது. இதன் டெல்லி எக்ஸ் ஷோரும் விலை, 61,800 (டிரம் பிரேக்) தொடங்கி 62,800 (டிஸ்க் பிரேக்) வரை செல்கிறது.

இதில் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள TOD (Torque On Demand) 150சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஹீரோவின் ஸ்ப்ளெண்டர் பைக்குகளில் பயன்படுத்தப்பட்ட i3s (Idle-stop-start system) தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜின், 13.4bhp@8,000rpm பவரையும், 1.28kgm@5,000rpm டார்க்கையும், 50கிமீ ஆன் ரோடு மைலேஜையும் வெளிப்படுத்துகிறது. 0 - 60 கிமீ வேகத்தை 5 விநாடிகளில் எட்டிவிடும் அச்சீவர் பைக்கில், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆன் வசதி (AHO) மற்றும் 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் இடம்பெற்றுள்ளது. இதனுடன் ட்யுப்லெஸ் டயர்கள், Maintanence Free பேட்டரி, Viscous ஏர் ஃபில்டர், டேக்கோமீட்டர் மற்றும் சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் உடனான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவற்றை முக்கிய சிறப்பம்சங்களாகக் குறிப்பிடலாம். Panther Black Metallic, Candy Blazing Red, Ebony Grey Metallic ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த பைக்கின் எடை 139 கிலோ. இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையில், ஹீரோ 70 மில்லியன் டூவீலர்களைத் தயாரித்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக, இந்திய கொடியில் இருக்கும் கலர்களுடன், ஸ்பெஷல் வெள்ளை - கறுப்பு நிறத்திலான அச்சீவர் பைக்கை வெளியிட்டுள்ளது ஹீரோ. வெறும் 70 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. ஹீரோ அச்சீவர் 150, பஜாஜ் டிஸ்கவர் 150 மற்றும் V15, ஹோண்டா யூனிகார்ன் 150, யமஹா SZ-V2 ஆகிய பைக்குகளுடன் போட்டியிடுகிறது. நடப்பு நிதியாண்டில், மொத்தம் 15 புதிய பைக்குகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது ஹீரோ. எனவே அச்சீவருக்கு அடுத்தபடியாக, i3s தொழில்நுட்பத்துடன் கூடிய சூப்பர் ஸ்ப்ளெண்டர் மற்றும் பேஷன் ப்ரோ பைக்குகளை, வரும் பண்டிகை காலத்தில் களமிறக்குகிறது ஹீரோ.

-ராகுல் சிவகுரு

எடிட்டர் சாய்ஸ்

MUST READ