Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அபாய அளவைத் தாண்டிய Co2..விஞ்ஞானிகள் எச்சரிக்கை! #climatechange

புவி வெப்பமயமாதல், இன்று நம் தலைமுறை சந்தித்துவரும் மிக முக்கியமான பிரச்னை. அதற்கு காரணமான ஒரு வாயுவான கார்பன்-டை-ஆக்சைடின் அளவு வரலாறு காணாத அளவு வளிமண்டலத்தில் உயர்ந்துவிட்டது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 400 பி.பி.எம் என்ற அளவிற்கு அதிகரித்துவிட்ட இந்த கார்பன்-டை-ஆக்சைடின் அளவு இனி குறையவே வாய்ப்பு இல்லை. நிரந்தரமாக தங்கிவிடும் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி.

கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்களால் வெளிவிடப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் மூலக்கூறுகளின் பெரும்பகுதி பூமியின் வளிமண்டலத்திலேயே தங்கிவிட்டது. தொழிற்புரட்சி தொடங்கப்படுவதற்கு முன்பு வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவு 180 பி.பி.எம் (பி.பி.எம் என்பது  Parts Per Million ). அதாவது, வளிமண்டலத்திலுள்ள மொத்த வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம் பங்குகளாகப் பிரித்தால், அதில் 180 பங்கு கார்பன் உள்ளது. தற்போது வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவு 400 பி.பி.எம்-ஐ நெருங்கிவிட்டது. சாதாரணமாக 350 பி.பி.எம் என்பதே பாதுகாப்பான கார்பனின் அளவு. ஆனால், 400 பி.பி.எம் என்பது மிகவும் அபாயகரமான அளவு. செப்டம்பர் மாதமே இந்த அளவு எனில், அடுத்த மாதமான அக்டோபரில் எவ்வளவு உயரும் என்பது தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் இந்த வருட கடைசிக்குள் வளிமண்டலத்திலுள்ள கார்பனின் அளவு 410 பி.பி.எம்-ஐ தொட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஆனால், ஹவாயிலுள்ள, மோனா லோவா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், ‘’கடந்த 2013-லேயே கார்பனின் அளவு 400 பி.பி.எம்-ஐ தாண்டி விட்டது’’ என்கின்றனர். ‘’பல ஆண்டுகளுக்கு கார்பன் டை ஆக்ஸைடை வெளிவிடாமல் இருந்தால்கூட 400 பி.பி.எம் அளவு குறைய வாய்ப்புகள் குறைவுதான். இதே போன்ற நிலை கடந்த 8 லட்சம் வருடத்திற்கு முன்பே ஏற்பட்டுள்ளது. கார்பனின் அளவை சரிசெய்யலாமே தவிர குறைப்பது கடினம்’’ என நாசா காலநிலை ஆராய்ச்சியின் முதன்மை விஞ்ஞானி கவின் கூறியுள்ளார். 
2009-ல் வெளியிடப்பட்ட கார்டியன் பேப்பர் ரிப்போர்ட்டில், ’’கார்பன்-டை ஆக்ஸைடின் அளவு பாதுகாப்பு அளவை விடத் தாண்டினால் 15 முதல் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு இந்த அளவு குறையாது ‘’ என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. இப்படி ஆராய்ச்சிகளும், ஆராய்ச்சியாளர்களும் வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பனின் அளவினால் ஏற்படும் பாதிப்புகளை அடுக்கினாலும், இதற்கு தீர்வுதான் என்ன? தொழிற்சாலை, வாகனங்கள் என மனிதனின் சக்திக்கு உட்பட்ட எல்லா வழிகளிலும் புவியை மாசுபடுத்திவிட்டோம். எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை உண்டுதானே? 

- இ.கார்த்திகேயன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close