Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”தோனி ஆட்டோகிராஃப் போட்டால் என்ன எழுதுவார் தெரியுமா?!” #MorningMotivation

இன்ஸ்பிரேஷன்... எங்க இருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். சரியான நேரத்துக்கு வரும் நம்ம பக்கத்து டேபிள் நண்பரிடம் இருந்தோ, தெள்ளத் தெளிவாக பேசும் மாணவரிடம் இருந்தோ, ஸ்மார்ட் வொர்க் செய்யும் நம்ம பாஸிடம் இருந்தோ...  எப்போதும் வேண்டுமானாலும் நமக்கான மோடிவேஷன் இருக்கலாம். அதை நாம புரிஞ்சு எடுத்துகிட்டா  நமக்கு சக்சஸ் தான் பாஸ்.

 

இங்க ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்ற நபர்களிடம் சக்சஸ் வார்த்தையை கவனமா நோட் பண்ணிக்கோங்க. உங்களுக்கான இன்ஸ்பிரேஷன் வார்த்தைகள் இவர்களிடம் கூட இருக்கலாம். 

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் : 

ரஹ்மான் எல்லா வகை இசையையும் விரும்புவார். ஒரே ஒருவருக்குப் பிடித்திருந்தாலும் அது நல்ல இசைதான் என நம்புபவர். பிற இசையமைப்பாளர்களைக் கண்டால் அவரது இசையில் தன்னைக் கவர்ந்த பாடலின் இசைக்கோர்ப்பைத் தயக்கம் இல்லாமல் பாராட்டுவார்! ஈகோ இல்லாதவர் ரகுமான். "ஓபன் மைண்டா இருங்க. உங்களை சுத்தி நடக்கறத கவனமா பாருங்க. எடுத்ததுமே எதுலயும் முழுமையா கத்துக்க முடியாது. உங்க டிராவலில் இருந்துதான் எல்லாத்தையும் கத்துக்கவே முடியும். கத்துகிட்டே இருங்க" என்கிறார் ரகுமான். 

 

எழுத்தாளர் அருந்ததி ராய் : 

அருந்ததி ராய் புக்கர் பரிசு வென்றதும், 'இது ஐந்து நீதிபதிகளின் தீர்ப்பு. ஒருவேளை வேறு ஐந்து பேர் நீதிபதிகளாக இருந்திருந்தால், வேறு ஒரு புத்தகம் தேர்வாகி இருக்கும். அதனால், என் புத்தகம் மட்டும்தான் சிறந்தது என்று நான் கருதவில்லை!' என்பது அருந்ததியின் பதில் மரியாதை!

"மற்றொரு மாற்று உலகம் சாத்தியமானது மட்டுமல்ல, நான் அதை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். ஓர் அமைதியான நாள் ஒன்றில், என் பயணத் தின் மூச்சுக் காற்றை நான் உணர்கிறேன்' என நம்பிக்கை வார்த்தைகள் விதைக்கிறார் ராய்.

 

நடிகர் ஷாரூக் கான் : 

இந்திப் பாடத்தில் அடிக்கடி ஃபெயில் ஆகும் மக்கு மாணவன். 'இந்தியில் முதல் மதிப்பெண் எடுத்தால்தான் படம் பார்க்க அழைத்துச் செல்வேன்’ என்ற அம்மாவின் தூண்டுதலில், இந்திப் பாடங்களில் பாஸ் பண்ணியவர் தான் இந்தி நடிகர் ஷாரூக் கான். "உங்ககிட்ட இருக்கும் பவரை கண்டுபிடிங்க. அந்த பவரை சார்ஜ் பண்ண வொர்க் பண்ணுங்க. தோல்வி அடைஞ்சு அடிப்பட்டு பயப்படாமா இருந்தீங்கன்னா தான் அந்த பவர் இன்னமும் அதிக சார்ஜ் ஆகும். நான் என் பவரை கண்டிபிடிச்சதால் ஒரு ஸ்டார் ஆனேன். நீங்க?" என்கிறார் ஷாரூக். 

 

இயக்குநர் ராஜமௌலி : 

பல வெற்றி படங்களை கொடுத்தும் ராஜமௌலி, தன் தலைக்கு மேல் ஒளிவட்டத்தை ஏற்றிக்கொள்ளவில்லை. 'எந்த சினிமா ஜெயிக்கும், எது ஜெயிக்காதுன்னு இங்கே யாருக்குமே தெரியாது; எனக்கும் தெரியாது. என்னை நம்பி தயாரிப்பாளர் பணம் போடுறார். படம் ஜெயிக்கணும்னு என்னோட உச்சபட்ச உழைப்பைக் கொடுக்கிறேன். அவ்வளவுதான் விஷயம். வேறு எந்த சக்சஸ் ஃபார்முலாவும் என்கிட்ட இல்லை!’ என்கிறார் ராஜமௌலி சிம்பிளாக!

 

செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் : 

ஆனந்தின் ரோல் மாடல், மகாத்மா காந்தி. அவரைப்போல, ஆனந்துக்கும் அன்புதான் ஆயுதம். இதுவரை எந்த செஸ் வீரரையும் விமர்சித்தோ, திட்டியோ பேட்டி கொடுத்ததே இல்லை. எப்போதும் பாஸிட்டிவ் பதில்தான். "விளையாட்டோ, வேலையோ எதையும் என்ஜாய் செய்து செய்தால் அதுவே நமக்கான வெற்றியின் வேட் வே." என்கிறார் ஆனந்த்.

 

நடிகை தீபிகா படுகோன் :

'சினிமாவுக்கு உன் முகம் செட்டாகாது' என சொல்லப்பட்டவர் தான் தீபிகா படுகோன்! "என் போட்டோவை பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்கிட்ட கொடுத்து நடிக்க வாய்ப்பு கேட்டேன். `இந்த முகத்துக்கெல்லாம் சினிமாவா..?’ என அவ மானப்படுத்தி கிண்டல் செய்தார்கள். ஆனாலும் விடாது முயற்சித்து வாய்ப்பு தேடி படிப்படியாகத்தான் முன்னேறினேன். நான் அவமானத்தை மட்டும் நினைச்சுட்டு இருந்தேன்னா.. உங்கமுன்னாடி நின்னுட்டு இருக்க மாட்டேன்." என்கிறார் இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை. 

 

கிரிக்கெட் பிளேயர் தோனி : 

செல்ஃபி சீஸனுக்கு முன் ஆட்டோகிராஃப் கேட்டால் 'Never Give Up' என எழுதிக் கையெழுத்திடுவார். தோனியை பற்றி விமர்சனம் வரும்போது எல்லாம் 'நான் வீட்டில் மூன்று நாய்களை வளர்க்கிறேன். நான் போட்டியில் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி, அவை என்னிடம் ஒரே மாதிரிதான் நடந்துகொள்கின்றன!’ என்பார். வெற்றியோ, தோல்வியோ எப்போதும் ஒரே மாதிரி இருங்க. இதுதான் இந்த ஸ்டெட்மென்ட் அர்த்தம். 

 

தொகுப்பு : நா.சிபிச்சக்கரவர்த்தி 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ