Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தப் பள்ளியில் ஹோம் வொர்க்கிற்கு தடை!


ள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபின் அனுபவிக்கும் மிகப்பெரிய தலைவலி இந்த ஹோம் வொர்க். அப்போது நம் யோசனை, “யாருடா இந்த ஹோம் வொர்க்-அ கண்டுபிடிச்சது. அவன் மட்டும் கையில மாட்டுனான்” என்றே இருக்கும். இந்த ஹோம் வொர்க் பிரச்சனையில் இருந்து தன் மாணவர்களை விடுவித்துள்ளது ஒரு பள்ளி. தன் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹோம் வொர்க் அளிக்க தடைவிதித்துள்ளது இந்த பள்ளி நிர்வாகம். அப்படி ஒரு பள்ளியா? எந்த பள்ளி அது? எங்கு இருக்கிறது? தெரிந்துகொள்ளலாம்.

பிரிட்டனின் கொல்செஸ்டர், எஸெக்ஸ் என்ற இடத்தில்தான் உள்ளது பிலிப் மோர்கன்ட் பள்ளி. இந்த பள்ளியில் தான் இந்த புதுவிதமான தடையை அறிவித்துள்ளனர். இந்த தடையை அறிவித்தது இந்த பள்ளியின் முதல்வர், கேத்தெரின் ஹட்லெ (Catherine Hutley). இந்த பள்ளியில் சுமார் 1650 பேர் பயில்கின்றனர். இந்த புதுமுறையின் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்கும் நேரத்தில் புதிதாக எதாவது கற்றுக்கொடுக்கலாம் என்று நம்புகிறார் ஹட்லெ. இது குறித்து அவர் கூறுகையில், “ஆசிரியர்களுக்கு ஒரு நாளில் தங்களின் வேலையைச் செய்ய போதுமான நேரம் இல்லை. அதனால் இந்த தடையை அறிவித்ததின் மூலம் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த போதுமான நேரம் கிடைக்கும்” என்கிறார்.

இது மட்டும் இல்லாமல் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள், வீட்டுப்பாடம் செய்யவிருக்கும் நேரத்தில் பள்ளியின் இணையதளம் வாயிலாக அவர்கள் புதிதாக எதையாவது கற்றுக்கொள்வார்கள் என்கிறார். இந்த இணையதளக் கல்வியில் ஆர்வமாக செயல்படுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும் என்கிறார் ஹட்லெ.

இந்த புதியமுறை குறித்து, பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் “நாங்கள் வீட்டுப்பாடம் அளிக்கும் முறையில் இருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். பாரம்பரிய முறையில் இருந்து சற்று விலகி சென்று சுதந்திரமாக பாடம் கற்கும் முறையை நோக்கி செல்கிறோம்” என்கிறது. இந்த புதிய முறைக்கு பெற்றோர்களிடம் இருந்த மிகுந்த வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கேத்தெரின் ஹட்லெ இறுதியில், “ஒரு ஆசிரியரின் வேலை இன்றியமையாதது” என்கிறார்.

இந்த பள்ளியின் அறிவிப்பு, “நான் படிக்கும்போது இப்படி ஒரு பள்ளி இல்லையே” என்று ஏங்க வைக்கிறது.

- முரளி.சு
(மாணவப் பத்திரிகையாளர்)

    
    

எடிட்டர் சாய்ஸ்

MUST READ