Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹேட்ச்பேக் கார் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்...!


இந்தியாவின் போட்டிமிகுந்த காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில், கடந்த 2011-ல் பிரியோவைக் களமிறக்கியது ஹோண்டா. டிரைவர்ஸ் கார் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான பிரியோ, நீண்ட காலமாக பேஸ்லிஃப்ட் செய்யப்படாதது குறையாகவே இருந்தது. எனவே வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, ஸ்போர்ட்டியான டிஸைன், பிரிமியமான இன்டீரியர், மாடர்ன் சிறப்பம்சங்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பிரியோ ஹேட்ச்பேக்கைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது ஹோண்டா. பழைய காரில் இருந்த EX மற்றும் V ஆகிய வேரியன்ட்கள், புதிய பிரியோவில் இல்லை. தவிர ஆரம்ப மற்றும் டாப் வேரியன்ட்டுக்கு ஏற்ப சீட் ஃபேப்ரிக் மாறுகிறது. 88bhp பவர் - 10.9kgm டார்க் - 18.5கிமீ அராய் மைலேஜை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் i-VTEC இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/AT கியர்பாக்ஸில் எந்த மாறுதல்களும் இல்லை. 87,000-க்கும் அதிகமான பிரியோ கார்களை, இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக்காக, ABS, EBD, Seat Belt Pretensioner, Impact Mitigating Headrest, ACE பாடி வழங்கப்பட்டுள்ளது.

காரின் வெளிப்புறத்தில் என்னென்ன மாற்றங்கள்?

க்ரோம் ஃபினிஷ் உடனான கறுப்பு நிற கிரில் 
புதிய முன்பக்க பம்பர் மற்றும் டெயில் லைட், 
LED விளக்குகள் உடனான பின்பக்க ஸ்பாய்லர்
Taffeta White, Alabaster Sliver, Urban Titanium, Rally Red, White Orchid Pearl - கலர் ஆப்ஷன்கள்.

காரின் உட்புறத்தில் எவையெல்லாம் புதிது?

கார்பன் ஃபினிஷ் மற்றும் சில்வர் வேலைப்பாடுகளைக் கொண்ட புதிய டேஷ்போர்டு 
வெள்ளை பேக்லிட் உடன் மூன்று டயல்களைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் 
USB, Aux-in, Bluetooth Connectivity, Hands Free Telephony ஆகிய வசதிகளுடன் கூடிய 2 DIN ஆடியோ சிஸ்டம் 
டிஜிட்டல் ஏசி கன்ட்ரோல்கள்
E, S வேரியன்ட்டில் கறுப்பு - பீஜ் நிற இன்டீரியர் 
VX வேரியன்ட்டில் கறுப்பு நிற இன்டீரியர்.
 


2 ஆண்டுகள்/40,000 கிமீ வாரன்டியுடன் வரும் பிரியோவின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள் பின்வருமாறு;

E MT - 4.69 லட்சம்

S MT - 5.20 லட்சம்

VX MT - 5.95 லட்சம்

VX AT - 6.82 லட்சம்

- ராகுல் சிவகுரு

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ