Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விமானப் படையில் புதிய ரக போர் விமானம்!

ம் நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் ஓர் அங்கமாக விளங்குவது இந்திய விமானப்படை. இது, போரின்போது எதிரி நாடுகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து நம் நாட்டைப் பாதுகாப்பதோடு, அதுபோன்ற தாக்குதலையும் நடத்தக்கூடியது. இது, 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப் படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று 84-வது விமானப் படை தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நம் நாட்டுப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவாக இந்திய விமானப் படை மாறியது.

இதில், சுமார் 1,130 போர் விமானங்களும், 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் உள்ளன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் இந்தப் படையில் உள்ளனர். உலகின் நான்காவது பெரிய விமானப் படையாக நம் இந்திய விமானப் படை திகழ்கிறது. இதற்கு ஜனாதிபதியே முதல் பெரும்படைத் தலைவராக உள்ளார்.

இந்திய விமானப் படைக்கு நவீன போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் நாட்டிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தினால் ஆன ‘ரபேல்’ ரக போர் விமானங்கள் வருகிற 2019-ம் ஆண்டு முதல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். பல்வேறு அதிநவீன வசதிகளுடன் துல்லியமாக இலக்கை தாக்கக்கூடிய வகையிலான ஏவுகணை மற்றும் பல வகையான போர் தளவாடங்கள் இதில் உள்ளன. இவை, பி.வி.ஆர் எனப்படும் கண்ணுக்கு எட்டாத வெகுதொலைவில் உள்ள இலக்குகளைச் சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. இந்த ஏவுகணை மூலம் வானத்தில் இருந்தபடியே 150 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்க முடியும். அதாவது, எதிரி நாட்டின் வான் எல்லைக்குள் போகாமலேயே அந்த நாடுகளின் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்த நிலையில், இந்தியா இந்தப் புது ரக போர் விமானங்களை வாங்குவது நம் விமானப் படைக்கு மேலும் பலத்தை அதிகரிக்க உதவும். தற்போது பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்திவரும் இந்த நேரத்தில் நவீன ரக போர் விமானங்களை நாம் வாங்குவது இந்தியாவின் பலத்துக்கு இன்னும் வளம் சேர்க்கும்.


1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது 50 கி.மீ. தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்தியா பயன்படுத்தியது. தற்போது அதைவிட வலிமையான இந்த ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், கார்கில் போரில் தோல்வியடைந்த பாகிஸ்தான் 80 கி.மீ. தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘‘இந்திய விமானப் படை வீரர்கள் எப்போதும் மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் நம் நாட்டுக்காக உழைத்து வருகின்றனர். அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. வான்வெளியாக நம்மைப் பாதுகாப்பதுடன், பேரிடர் காலங்களிலும் அவர்கள் முதன்மையாகப் பணியாற்றுகின்றனர்’’ என்று கடந்த ஆண்டு விமானப் படை கொண்டாட்டத்தின்போது தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார், பிரதமர் மோடி.

புதிய விமானப் படை போர் ரக விமானம் பலம் சேர்க்கட்டும் ! 

- ஜெ.பிரகாஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close