Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜாகுவரின் முதல் எஸ்.யூ.வி. விலை என்ன தெரியுமா? #Fpace

 

டாடாவைச் சேர்ந்த ஜாகுவார் நிறுவனம், தனது 70 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக F-Pace எனும் எஸ்யூவியைத் தயாரித்துள்ளது. CX-17 கான்செப்ட் மற்றும் F-Type காரை அடிப்படையாகக் கொண்டு, அலுமினியக் கட்டுமானத்துடன் கூடிய பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை வரும் அக்டோபர்20, 2016 அன்று அதிரடியான முறையில் களமிறக்க முடிவு செய்திருந்தது. லண்டனில் 1,016 அடி உயரத்துடன், 95மாடிகளைக் கொண்ட Shard Skyscraper கட்டிடம் உலகளவில் பிரசித்தம். பிரிட்டிஷ் நாட்டின் பொறியியல் திறமையைக் காட்டும்படி அமைந்திருக்கும் இந்த கட்டிடம் போல, தனது கட்டுமானத் திறமையை பறைசாற்ற எண்ணியது ஜாகுவார் நிறுவனம். எனவே அந்த கட்டிடத்தின் மாதிரியை மும்பையில் உருவாக்கி, அங்கேயே காரை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை,இந்த எஸ்யூவியின் டெல்லி எக்ஸ்ஷோரும் விலைகள் வெளியாகிவிட்டன. 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட ஜாகுவார் F-Pace, Pure, Prestige எனும் இரண்டு வேரியன்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றின் டெல்லி எக்ஸ்ஷோரும் விலைகள் முறையே 68.40 லட்சம் மற்றும் 74.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பெர்ஃபாமென்ஸ் வேண்டும் என்பவர்களுக்காக, 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட ஜாகுவார் F-Pace, R-Sport, First Edition எனும் இரண்டு வேரியன்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. 

இவற்றின் டெல்லி எக்ஸ்ஷோரும் விலைகள்முறையே 1.02 கோடி மற்றும் 1.12 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும், 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் புக்கிங் துவங்கிவிட்ட நிலையில், CBUமுறையில் இந்த எஸ்யூவி இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருப்பதே, இதன் அதிக விலைக்குக் காரணம். 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட F-Pace, 

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெர்சிடீஸ் பென்ஸ் GLC, ஆடி Q5, பிஎம்டபிள்யூ X3, போர்ஷே மக்கான், வால்வோ XC60 ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டியிடும் ஜாகுவார் F-Pace எஸ்யூவியின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள் பின்வருமாறு;

 

ஜாகுவார் F-Pace Pure: 68.4 லட்சம்

ஜாகுவார் F-Pace Prestige: 74.5 லட்சம்

ஜாகுவார் F-Pace R-Sport: 1.02 கோடி

ஜாகுவார் F-Pace First Edition: 1.12 கோடி

 

 

இன்ஜின் விபரங்கள்:

2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்: 180bhp பவர் - 43kgm டார்க் (0-100 கிமீ: 8.7 விநாடிகள், டாப் ஸ்பீடு: 208 கிமீ)

3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின்: 300bhp பவர் - 70kgm டார்க் (0-100 கிமீ: 6.2 விநாடிகள், டாப் ஸ்பீடு: 241 கிமீ)

 

சிறப்பம்சங்கள்: Pure

க்ரூஸ் கன்ட்ரோல்

18 இன்ச் அலாய் வீல்கள்

2 Zone ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல்

10 Way பவர் அட்ஜஸ்ட் வசதியுடன் கூடிய முன்பக்க இருக்கைகள்

InControl 8 இன்ச் டச்ஸ்கிரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

All-surface Progress Control System & Brake Pad Wear Indicator

 

Prestige:

Taurus லெதர் அப்ஹோல்சரி

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா

ஹெட்லைட் வாஷர்கள்

க்ரோம் வேலைப்பாடுகள்

ஆட்டோ Dimming ரியர் வியூ மிரர்

 

R-Sport:

பாடி கிட்

LED ஹெட்லைட்

19 இன்ச் அலாய் வீல்கள்

மூட் லைட்டிங்

கூடுதல் திறன்மிக்க பெரிய முன்பக்க பிரேக்ஸ்

Gesture Control முறையில் இயங்கக்கூடிய டெயில்கேட்

சீட் மெமரி உடனான முன்பக்க இருக்கைகள்

எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங்

Recline வசதியுடன் பின்பக்க இருக்கை

InControl Pro டச்ஸ்கிரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

Surround கேமரா சிஸ்டம்

 

First Edition:

பனராமிக் சன்ரூஃப்

Meridian ஆடியோ சிஸ்டம்

Windsor Leather Upholstery

20 இன்ச் அலாய் வீல்கள்

 

பாதுகாப்பு:

LED ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்

ABS & Dynamic Stability Control (DSC)

Torque Vectoring Technology

Activity Key

4 வீல் டிரைவ் சிஸ்டம்

 

-ராகுல் சிவகுரு

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்