Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஆர் யூ ஓக்கே?'. இன்று உலக மனநோய் தினம்

 

 

னம் அலை பாயப்படுவதாலேயே அது குரங்கு என அழைக்கப்படுவது உண்டு. அந்த மனதைக்கூட நாம் ஒழுங்காய் வைத்துக்கொள்ளாவிட்டால், மனநோய்க்கு ஆளாகிவிடுவோம். ‘சிந்தனைக்கும் மனநோய்க்கும் தொடர்பு உண்டு’ என்கின்றனர் அறிஞர்கள். அந்த நோய்க்கு மனதை ஆட்படுத்திவிடாமல் இருப்பது நம்முடைய கடமை. கல்விக்குப் பெரும் தடையாக இருப்பது மனநோயே ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி மனநல தினம் கொண்டாடப்படுகிறது. 

எதிலும் நாட்டமின்மை, தூக்கமின்மை, தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், கட்டுப்படுத்த முடியாமல் திரும்பத் திரும்ப ஏற்படும் எண்ணங்கள் அல்லது செயல்கள், செக்ஸ் பிரச்னைகள், தானாகப் பேசுதல் அல்லது சிரித்தல், ஆக்ரோஷம் போன்ற காரணம் கண்டுபிடிக்க முடியாத நோய்களாலும், மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களாலும் மனநோய் ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் தானாகவோ, வாழ்க்கைச் சூழ்நிலைகளினாலோ அல்லது பல்வேறு நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களினாலோ உண்டாகலாம். இருந்தும் மனநோயை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். உலகில் காணப்படும் பலவகையான நோய்களுள் மனநோயும் ஒன்று. இதைத் தீவிர மனநோய், மனச்சிதைவு நோய் (சிசோபெர்னியா) என்பர்.   

2005-ம் ஆண்டின் இறுதியில், கிட்டத்தட்ட 1 கோடி முதல் 2 கோடி வரையிலான இந்தியர்கள், மனச்சிதைவு மற்றும் இருமுனைக் கோளாறு போன்ற மனநோய்களால் பாதிக்கப்படுவதாகவும், 5 கோடி இந்தியர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற பொதுவான மனநிலை பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ‘மனநோயின் தாக்கத்தால் மக்கள் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர்’ என மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. 2010-ல், 7 சதவிகிதமாக இருந்த மனநோயால் ஏற்படும் தற்கொலைகள், 2014-ல் 5.4 சதவிகிதமாக இருக்கிறது என்றாலும், 7,000-க்கும் அதிகமான மக்கள், மனநோய்களின் விளைவாக தற்கொலை செய்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரங்களின்படி, 18,100,000 பேருக்கு 5.6 உளவியல் நிபுணர்களே உள்ளனர். இது, பொதுநல வாரிய வரம்பைவிடக் குறைவாக உள்ளது. அதாவது, 10,00000 மக்களுக்கு 3 உளவியல் நிபுணர்கள் மட்டுமே உள்ளனர். இந்த மதிப்பீடு மூலம், இந்தியாவில் 66,200 உளவியல் நிபுணர்கள் குறைவாக உள்ளனர். இந்தியாவில், மனநல நிபுணர்களின் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய, சிறப்பான 15 மனநல சுகாதார மையங்கள் மற்றும் மனநல சுகாதாரத்தில் உள்ள 35 முதுகலை படிப்புகளுக்கான பயிற்சித் துறைகளுக்காக நாடு தழுவிய நிதியுதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மனநலத்தைப் பேணுவோம்... மனநோயாளிகளை அரவணைப்போம்!

- ஜெ.பிரகாஷ்


 


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ