Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த சீன் மட்டும் நடக்காம இருந்திருந்தா..!? - தமிழ் சினிமா கலகல!

நம்ம சினிமாவுல சில காட்சிகள்ல விதி விளையாண்டு அதாங்க 'பட்டர்ஃபிளை எஃபெக்ட்' டால மாறி இருந்துச்சுனா என்னா ஆகிருக்கும்? ஒரு சுபயோக சுபதினத்திலே உட்கார்ந்து யோசிச்சதில்....

`கில்லி’ படத்துல செல்லமே செல்லமே னு மதுரைல இருக்குற எல்லா முட்டுச்சந்துலயும் த்ரிஷாவைத் துரத்திகிட்டு இருப்பாரு பிரகாஷ்ராஜ். அந்த நேரத்துல  கரெக்ட்டா அந்த வழியாக  விஜய் ஜாகிங் போகும்போதுதான் த்ரிஷா விஜய்  கண்ணுல பட்டு கதையே மாறிப்போகும். அவர் மட்டும் அந்தவழியாக வராம பக்கத்துல இருக்குற எதோ ஒரு மூத்திர சந்துவழியாக ஜாகிங் போயிருந்தார்னா என்ன ஆயிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. அய்யய்ய்யோ திரிஷா.. திரிஷா..

புரட்சித்திலகம் சரத்குமார் நடிச்ச சூரிய வம்சத்துல படக்குனு சின்ராசை பிடிக்கலைனு ப்ரியாராமன் சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.  அவங்க மட்டும் மனசு மாறாம சின்ராசைத்தான் கட்டிப்பேன்னு சொல்லிருந்தாங்கனா நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பாக்குதுனு ஒரே பாட்டுல தேவயானி கலெக்டர் ஆயிருக்க முடியுமா என்ன? அட அவ்வளவு ஏன் இட்லியை உதிர்த்து உப்புமா பண்ற அரியவகை சமையல் குறிப்புதான் இந்த சமூகத்துக்கு கிடைச்சுருக்குமா? (உப்புமா னு சொன்னதும் யாருங்க அங்க அழறது? ஆர்டிகள் படிக்கிறவங்களாம் அழக்கூடாது ஓக்கே!)

அப்டியே அந்த அஜீத் நடிச்ச `காதல்கோட்டை’ படத்துக்குப் போனோம்னா கிளைமாக்ஸ் சீன்ல  யாரோ டைரக்டருக்கு வேண்டிய ஒருத்தரு அஜீத்தோட சாதா ஸ்வெட்டர்மேல டீ யை ஊத்தி டீ ஸ்வெட்டர் ஆக்கிட்டு போவாரு. அதுக்குப் பிறகு அதை கழட்டும்போதுதான் இது.. அதுல்ல! னு தேவயானிக்குத் தெரிஞ்சு க்ளைமாக்ஸ்  வந்திட்டதால ஒரு வழியாக சேர்ந்துடுவாங்க. அந்த டீ மட்டும் ஸ்லிப் ஆகி வேற யாரு மேலயோ கொட்டிருந்தா கொட்டியவர் கொட்டு வாங்கிருந்துருப்பாரு. இவங்க ரெண்டு பேரும் இன்னமும் நீ இங்கு சுகமே நான் இங்கு சுகமா னு கடுதாசி போட்டுகிட்டே இருந்துருப்பாங்கள் ல?..

அட இப்ப வந்த இந்த ராஜமெளலி இயக்கிய `பாகுபலி’யில  கூட பாருங்களேன். பிரபாஸ் இந்த நாட்டுல  ஒரு மலையில நின்னுக்கிட்டு பக்கத்து நாட்டு (!) மலைமேல இருக்குற ஒரு மரத்துல அம்பு விடுவாரு. அதுவும் கரெக்டா போயி செருகி நிக்கும். அதுக்கப்புறம்தான் பக்கத்துல ஒரு நாடு இருக்குறதே தெரியும். அந்த அம்பு மட்டும் லைட்டா விலகி போயிருந்துச்சுனா  கடப்பா தெரிஞ்ச நமக்கு கட்டப்பாங்கிற ஒரு பேரும் தெரியாமையே போயிருக்கும் பாகுபலிங்கிற ஆளும் தெரியாமயே போயிருக்கும். 

 

- ஜெ.வி.பிரவீன்குமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close