Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”ஸ்பிலிட்...அஸ் ககாங்...சென்டல்!” - இதெல்லாம் என்ன தெரியுமா?

ஸ்க்ரீம்...

கிபி 16-வது நூற்றாண்டில் மொகாலய அரசர்கள், பழக்கலவைகளில் இந்துகுஷ் மற்றும் இமயமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஐஸ் கட்டிகளைத் துருவி  ஒரு கட்டு கட்டியிருக்கிறார்கள்.. பண்டைய கிரேக்க மக்கள், பழங்களையும் தேனையும் ஐஸ் கலவையுடன் இணைத்து ரிப்பீட்’ அடித்திருக்கிறார்கள்.


எல்லா வயசையும் அசைச்சு பார்க்கும் இந்த ஐஸ்க்ரீமிற்காகவே, நியூயார்க் நகரில் ஒரு மியூசியம் கட்டப்பட்டுள்ளது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

லிக்விட் சாக்லெட் உருகி வழிவது போன்ற சுவர், கோன் ஐஸ் விளக்குகள், ஐஸ்க்ரீம் ஸ்கூப்பர் கரண்டி போன்ற சீ-சா விளையாட்டு, ஸ்பிரிங்கிள்ஸ் பொங்கி வழியும் விளையாட்டுக் குளம், சாக்லெட் நீர்வீழ்ச்சி, சுவைக்க விதவிதமான ஐஸ் வகைகள் என்று இந்த மியூசியம் முழுக்க ஐஸ் க்ரீம்...ஐஸ் க்ரீம்..ஐஸ் க்ரீம் மட்டும்தான்.

சரி...மியூசியம் தாண்டி கலர்புல்லான ஐஸ்க்ரீம் வகைகள் என்னவெல்லாம் இருக்கு?  நாமும் கண்ணால் பார்த்து சுவைக்கலாம். அப்புறமா கடையில் போய் வாங்கியும் சாப்பிடலாம்.

ஸ்பிலிட்:


நீளமான வாழைப்பழத்தை நடுவில் வெட்டி, அதில் இன்னும் கொஞ்சம் வாழைப்பழத் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, சாக்லெட் ஐஸ்க்ரீம்களை அதில் கொட்டி, சாக்லெட் துண்டுகளைப் பரப்பி, கேரமல் சாஸையும் மேலே ஊற்றி படகு வடிவில் பரிமாறப்படும் ஒரு ஐஸ்க்ரீம் வகை.

ப்ளோட்ஸ்:


 

ஆப்பிள் சாறு, ஆரஞ்சுச்சாறு போன்ற பழச்சாறுகளுடன் ஐஸ்க்ரீமையும் தம்ளருக்குள் போட்டு, பழச்சாற்றில் ஐஸ்க்ரீம் மிதக்க, மிதக்க சுவைக்கக் கொடுக்கப்படுவதுதான் இந்த ஃப்ளோட்ஸ்.

அஸ் ககாங்:


வடிவேலுவின் ‘ஆஹான்’ இல்லை. மலேசியாவின் பிரபலமான ஐஸ்க்ரீம் ரெசிப்பி இது. சிவப்பு பீன்ஸ், சாதம், ஜெல்லி, தேங்காய்ப்பால், ஐஸ்க்ரீம், மேலே தூவப்பட்ட ஸ்வீட் கார்ன், வேர்க்கடலை. இதுதான் இந்த ஐஸ் ககாங் ஐஸ்க்ரீம். இதன் இன்னொரு வடிவம் சென்டல்.

சண்டே:


கரண்டிகளில் அள்ளியெடுத்த உருண்டு, திரண்ட ஐஸ்க்ரீமை ஒரு கப்பில் போட்டு அதன்மீது நட்ஸ், கேரமல் சிரப் எல்லாம் வடிவேலு சொல்வது போல மழைச்சாரலாக போட்டுக் கொடுத்தால் அதுதான் சண்டே. 

குக்கீ சாண்ட்விச்:

ரெண்டு பிஸ்கெட்களை எடுத்து, ஒன்றின் நடுவில் ஐஸ்க்ரீமைக் கடைப்பரப்பி, மற்றொரு பிஸ்கெட்டால் மூடி, மேலே கொஞ்சம் கலர்ஃபுல் ஸ்பிரிங்கிள்களைத் தூவிக் கொடுத்தால் அதுதான் குக்கீ சாண்ட்விச்.

ஹாலோ ஹாலோ:

ஹலோனு கூப்பிடறோம்னு நினைக்காதீங்க. இது வேற. பிலிப்பைன்ஸின் பேவரைட். துருவிய ஐஸ், கன்டென்ஸ்டு மில்க், இனிப்பு பீன், அகர் ஜெல்லி, பழத்துண்டுகள் இணைந்த ஒரு ரகமான ஐஸ்க்ரீம் வகை.

மட்சா ஐஸ்க்ரீம்:

க்ரீன் டீ, பால், முட்டை, சர்க்கரை எல்லாம் சேர்த்து செய்யப்படும் ஐஸ்க்ரீம் வகை இது. இதை சாப்பிட்டால் அதன் சுவைக்கே மோட்சம் கிடைத்துவிடும், அவ்வளவு டேஸ்ட்.

பாப்சிகிள்ஸ்:

நம்ம ஊர் குச்சி ஐஸ்சின் மறுவடிவம்தான் இந்த பாப்சிகிள்ஸ். நமக்குத் தெரிந்ததெல்லாம் பால் ஐஸ், ஜவ்வரிசி ஐஸ், சேமியா ஐஸ் குச்சிகள்தான். இன்று இந்த பாப்சிகிள்ஸ், சாக்லெட், வெண்ணிலா, ரெயின்போ, யோகர்ட், ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பட்டர் மில்க் என்று விதவிதமான சுவைகளில் கிடைக்கிறது.

பான் ஐஸ்க்ரீம்:

இது ஹைடெக் இண்டியன் ஐஸ் க்ரீம் ரெசிப்பி. வெற்றிலை, குல்கந்து, சர்க்கரை, ஐஸ்க்ரீம், டூட்டி ஃப்ரூட்டி ஆகியவை இணைந்த பக்கா பான் ஐஸ்க்ரீம்.

அடுத்தது....? வேறெதுவும் இல்லை பாஸ். குதூகலமா நீங்களும் ஐஸ்க்ரீமை சுவைக்க வேண்டியதுதான் பாக்கி...!

- பா.விஜயலட்சுமி

 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close