Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக நாடுகளுக்கு ஒபாமாவின் மிகப்பெரிய சவால் இது தான்!

அமெரிக்க அதிபர் ஒபாமா உலக நாடுகளிடம் மிகப்பெரிய சவால் ஒன்றை வைத்துள்ளார். அதில் அமெரிக்கா தனது அறிவியல் வளர்ச்சியால் 2030க்குள் வெற்றி காணும் என்று அறிவித்துள்ளார். மார்ஸ் மிஷன் என்ற வார்த்தையை முன்னணி நாடுகளும் அடைந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் துவங்கியுள்ளன. செவ்வாய் கிரகத்தில் மனிதனை தரையிறங்க வைக்க நடக்கும் போட்டியில் அமெரிக்கா வெற்றி பெறும் என ஒபாமா அறிவித்துள்ளார்.

மனிதர்களை 2022க்குள் அனுப்புவோம் என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. எலான் மஸ்க்கும் இது ஒரு பிரைவேட்-பப்ளிக் பார்ட்னர்ஷிப்பாக இயங்கும் என அறிவித்திருந்தார். இவர் அறிவித்த இரண்டு வாரங்களில் ஒபாமா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மார்ஸ் பயணம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

ஒபாமாவும் இது நாசாவும், ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை நிறைவேற்றும் என அறிவித்துள்ளார். 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்கப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும். அதனை அமெரிக்கா சிறப்பாக செய்து முடிக்கும் என்றும் பெட் கட்டியுள்ளார்.

ஒபாமாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் தற்போது அதிபர் போட்டியில் இருக்கும் ஹிலரி, ட்ரம்புக்கு கடும் சவாலாகவும் மாறியுள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதை பற்றி ட்ரம்ப் அதுவுமே அறிவிக்காததும் குறிப்பிடத்தக்கது. 

 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close