Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெள்ளத்தால் பழுதடைந்தால் தானாக சரியாகும் சாலை!

                        

மது ஊர்களில் உள்ள தார் சாலைகள் மழைகளாலும், கனரக வாகனப் போக்குவரத்தினாலும் சேதப்படுத்தப்பட்டு எப்போதும் பல்லைக்காட்டி கிடக்கும். அந்த சாலையில் பயணம்செய்யும்போது எப்பபோது இந்த சாலைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்மில் பெரும்பாலோனோர் நினைத்திருப்போம். எப்படா இதை சரிசெய்வீங்க எனும் எண்ணமும் மனதில் தோன்றாமல் இருக்காது. கிராமத்திலோ அரசு ஒருமுறை அமைக்கும் சாலைகள் ஒரு வருடத்திற்குகூட தாங்குவதில்லை. ஆனால் நகரத்திலோ சாலைமேல் சாலை அமைத்து சாலையின் உயரத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு என நாம் யோசிக்கும் நேரத்தில், இதுதான் தீர்வு என நிகழ்த்திக்காட்டியிருக்கிறார் நாக்பூரை சேர்ந்த, நேம்குமார் பந்தியா.

நேம்குமார் பந்தியா பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 34 ஆண்டுகளுக்கு முன்பு தரமான சாலைகளுக்கான தேடலை கனடாவில் தொடங்கியவர். தரமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் சாலை அமைத்தால் அதிக ஆண்டுகளுக்கு ஆயுள் நீடித்தும், நிலையானதாகவும் அமையும். இதனை நிரூபிக்கும் விதமாக பெங்களூருவில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில், கிராமவாசிகளின் உதவியுடன் தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் சாலையை அமைத்துள்ளார்.

    இத்தொழில்நுட்பம் குறித்து அவர் பேசும்போது, 'சாம்பலின் மூலம் 60% அளவு சிமெண்ட் அளவினை குறைத்து சாலையை அமைக்க முடியும். பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறையும். இந்தத் திட்டம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. நான்கு பருவக்காலங்களிலும் இந்த சாலை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில்  வெற்றியும் காணப்பட்டுள்ளது. இந்த சாலையின் தடிமன் பொதுவான இந்திய சாலையை காட்டிலும் தடிமன் குறைவாக இருக்கிறது. இதற்கு பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருட்களின் செலவும் குறைவுதான். இதில் பயன்படுத்தப்படும் வலிமைகொண்ட கான்கிரீட் நானோ பூச்சுகொண்ட பைபர் தொழில்நுட்பத்தால் அமைக்கப்பட்டுள்ளதால் அதிக தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருக்கும்.

                 

     இந்த சாலை மீது 'ஹைட்ரோஃபோனோபில் நானோபூச்சுக்கள்' இருப்பதால் தண்ணீரை உறிஞ்சும்போது சாலை சேதமடைந்தால் தானாக சிலிகேட் உற்பத்தியாகி தானாக சரி செய்துகொள்ளும். தற்போது இருக்கும் சாலைகளின் தரத்தினை விட 15 ஆண்டுகளுக்கு மேல் இந்த சாலைகள் நீடித்து இருக்கும். இந்த வகை சாலை அமைக்க ஆகும் செலவு, சாதாரண சாலையை விட 30% செலவும் குறைவு. 'நானோ பூச்சுகொண்ட பைபர்' சாலையானது கிராமப்புரத்தில் உள்ள 2.4 மில்லியன் தூரத்திற்கு சாலை அமைக்கப்படும். இந்த சாலையானது முதற்கட்டமாக ஹரியானா மற்றும் மத்திய பிரதேசம் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் இதிட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் கனடாவிலும் செயல்படுத்தப்பட உள்ளது' என்றார்.


                
      இந்த சாலைகள் பற்றி பேசிய கனடா-இந்தியா ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் துறை இயக்குநர், 'இந்திய சாலைகளை இந்த புதிய தொழில்நுட்பத்தில் அமைப்பது புதிய வழியாக இருக்கும். இவற்றின் செலவு குறைவு, சுற்றுச்சூழலுக்கும் உகந்தது' என்றார்.

 

     
 

 

- துரை.நாகராஜன்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ