Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரச்சாமான்கள் பாதுகாப்பும்....பராமரிப்பும்!

                                                          

 

மரச்சாமான்களுக்கான எப்போதுமே தேவையும் விலையும் அதிகம்தான். அதற்கேற்றால்போல் அவற்றை முறையாக பராமரிக்காவிட்டால் கரையான், பூஞ்சைகளால் வரும் பாதிப்புகளையும் அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டும். கவலை வேண்டாம். உங்கள் வீட்டு மரச்சாமான்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் தேவையான ஆலோசனைகள் இதோ!

* செங்கலிலேயே துளையிட்டு உள்ளே நுழையைக்கூடியவை கரையான்கள். மரச்சாமான்களை விரும்பிச் சாப்பிடும். கரையான் வீட்டுக்குள் வந்துவிட்டால், தொடர்ந்து அனைத்து மரச்சாமான்களையும் நாசம் செய்யும். எனவே புது மரச்சாமான்களை வாங்கியதும் முன்னெச்சரிக்கையாக அவற்றின் மேற்புறத்தில் ‘டெர்மைட் கன்ட்ரோல்’(termite control) என்ற பூச்சிக்கொல்லியை பூசிவிடுங்கள். இதனால் கரையான் மற்றும் பூஞ்சைகளின் வரவு தடைபடும்.

* வாரத்திற்கு ஒரு முறை உலர்ந்த துணியால் மரச்சாமான்களை துடைத்து சுத்தம் செய்து, மீண்டும் ஒரு முறை வெள்ளை வினிகரில் நனைத்த ஈரமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். பிறகு, இரண்டு மணி நேரம் வெயிலில் உலர வைத்து, மீண்டும் சுத்தமான துணியில் துடைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கரையான் அரிப்பு முற்றிலுமாகக் குறையும்.

* வேப்பிலைப் பொடியை, கரையான் படிந்த மரச்சாமான்களில் தூவிவிட, வேப்பிலையின் கசப்புத்தன்மை காரணமாக கரையான்கள் அழிந்துவிடும். வேப்பிலையை நன்கு அரைத்து தண்ணீரில் கலந்து, அதனை துணியில் நனைத்து வாரம் இருவாரங்களுக்கு ஒருமுறை துடைத்துவர மரச்சாமான்கள் எவ்வித அரிமானமும் இன்றி பாதுகாப்பாக இருக்கும்.

 

                                                               


 
* மிளாய்த்தூள் மற்றும் உப்பு கரையான்களை அழிக்கும் சக்தி கொண்டது. இவற்றை மரச்சாமான்களில் தூவிவிட, கரையான்கள் இருப்பின் அவை அழிந்து போகும். 

* குளிர் மற்றும் மழைக்காலங்களின்போது, மரச்சாமான்களில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதால் பூஞ்சைகள் வளரும். இதனால் ஆங்காங்கே வெள்ளை வெள்ளையாகத் தோன்றி மரச்சாமான்களின் அழகும், தரமும் கெட்டுப்போகும். நீரில் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, மரச்சாமான்களின் மேல் ஒரு கோட்டிங் போல தேய்க்க, பூஞ்சைகளின் வரவைத் தடுக்கலாம். 

* மர மேஜை மற்றும் நாற்காலிகள் ஈரமாக இருந்தால் வெயிலில் சில மணி நேரம் உலர வைத்து எடுக்க, பூஞ்சைகள் இருந்தால் இறந்துபோகும். மேலும் தவறுதலாக மரச்சாமன்களின் மீது தண்ணீர் பட்டால் அவற்றைத் துடைத்துவிட எத்தகைய அரிமானங்களும் வராமல் தடுக்க முடியும்.

* மர எண்ணெய் மற்றும் தேன் மெழுகு இரண்டும் சம அளவில் கலந்த கலவையைக் கொண்டு மர ஃபர்னிச்சர்களைச் சுத்தம் செய்தால் பளபளப்பாக ஆவதுடன், கரையான்களும் ஃபர்னிச்சரில் தங்காது.

* ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மெலமைன் பாலீஸ் (Melamine Polish) செய்து மரச்சாமான்களை புதுப்பொளிவுடன் பாதுகாக்கலாம். 

* மரச்சாமான்களை வேறு இடத்திற்கு மாற்றும்போது தேவையான நபர்களை பயன்படுத்தி தூக்கி வைக்க வேண்டும். தரையில் அப்படியே நகர்த்தி வைப்பதால் தரையில் கீரல்களும், மரச்சாமான்களின் கீழ்பகுதியும் பாதிக்கும் வாய்ப்பிருக்கிறது.

* வேம்பு மற்றும் தேக்கு மரங்களில் இயல்பாகவே கரையான்கள் தங்காது என்பதால் அவற்றில் மரச்சாமான்களை செய்வது சிறந்தது.

- கு.ஆனந்தராஜ்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ