Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வழுக்கைதான் இப்போ கெத்து... எப்படி? #baldandfreeday

இன்று உலக வழுக்கை தினம். இதுக்கெல்லாம் ஒரு தினமா என யோசிப்பவரா நீங்கள்? எனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். 35 வயதுக்குட்பட்ட 40 சதவிகித ஆண்களுக்குத் தலையில் வழுக்கை ஏற்படுகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இப்போது இல்லாவிட்டாலும் 'ஏய் தப்பிக்கவா பார்க்கிறே?' என உங்கள் தலையிலும் வாழ்க்கை விளையாடும் வாய்ப்பிருக்கிறது.

 

* இன்றைய இளைஞர்களுக்குத் தலையாய பிரச்னையாக இருக்கிறது வழுக்கைதான். 20 வயசுக்கு மேல லைட்டா தலைமுடி உதிர ஆரம்பிச்சாலே... இருக்கிற கொஞ்சநஞ்ச முடியையும் பிச்சுக்கிற அளவுக்குப் பலமா யோசிக்க ஆரம்பிச்சிருவோம். அந்த அளவுக்கு இந்த வழுக்கைத் தலைங்கிறது பலரையும் ஆட்டிப்படைக்கும் ஒரு பிரச்னையா வளர்ந்து நிற்குது. 

 

* இந்த வழுக்கை பல காரணங்களால் ஏற்படுது. அப்பாவோட பாக்கெட்ல இருந்து பணத்தை எடுக்கிறது நம்ம குணநலன்னா... அப்பாவோட குணநலன்களையும் சேர்த்துக் கடத்திட்டு வர்றது இந்த மரபணுக்கள். அப்படி வர்றதுல இந்த வழுக்கையும் முக்கியமானது. அது மட்டுமில்லாம நீண்டநாள் கவலை, ஊட்டச்சத்தில்லாத உணவுமுறை, தைராய்டு பிரச்னை, மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள், புற்றுநோய் அறிகுறி, இப்படிப் பல காரணங்களாலயும் முடி உதிர்வு ஏற்படுவதா அறிவியல் விளக்கம் சொல்லப்படுது.

 

* உயிரே போகின்ற அபாயம் இருந்தும் அலட்சியமாக பைக்கில் பறக்கும் இளைஞர்கள், முடி உதிர ஆரம்பித்ததும் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். நம்மைப்பற்றி பிறர் கேலி செய்வார்களோ என்ற அச்ச உணர்வுதான் இதற்குக் காரணம். வழுக்கை விழ ஆரம்பித்ததும் தன்னம்பிக்கைக் குறைவு ஏற்பட்டதாகவும், நண்பர்களைக்கூட தவிர்க்க ஆரம்பித்ததாகவும் ஓர் ஆய்வில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்களைக் குறிவைத்துதான் அமேசான் காட்டில் இருக்கும் அரிய மூலிகைகளைப் பயன்படுத்தியதாகச் சொல்லும் ஹேர் ஆயில் விளம்பரங்கள் தயாராகின்றன. எதையாவது செய்து இந்தப் பிரச்னையை சமாளிக்க வேண்டுமென்று இளைஞர்களும் கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். முடிவில் அவர்களுக்கு மிஞ்சுவதென்னவோ ஏமாற்றம்தான்.

 

* சரி, இந்தப் பிரச்னையைச் சமாளிக்க என்ன செய்யலாம்? செயற்கை முடிவைத்து உலகத்துக்கு நம்மை மறைக்காமல் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் மனநிலைக்கு மாறும்போது மன அழுத்தத்திலிருந்து எளிதாகத் தப்ப முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 'இதுல என்ன இருக்கு?' என்ற மனநிலைக்கு வரும்போதுதான் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் கேலி செய்யும்போது அதை எளிதில் சமாளிக்க முடியும். அதையும் மீறிக் கலாய்ப்பவர்களை விட்டுத்தள்ளுங்கள்!

 

* வழுக்கைத்தலை என்பது அழகுக்குறைவா என யோசிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கு மற்றவர்களைவிட வழுக்கைத்தலை ஆண்களை அதிகம் பிடிக்கிறதா ஒரு டாக் இருக்கு ப்ரோ. மனசத் தளரவிடாதீங்க!

 

* டென்னிஸ் பிரபலமான ஆன்ட்ரே அகாசி 90-களில் சிங்கத்தின் பிடரி போன்ற தோற்றமுடைய ஹேர்ஸ்டைல் வைத்து டென்னிஸ் ஆடியதை யாரும் மறந்திருக்க முடியாது. பின்னாளில் அகாசிக்கு வழுக்கை ஏற்பட்டு மொட்டைத்தலையுடன் ஆடினார். தனது சுயசரிதையான 'ஓப்பன்' புத்தகத்தில், அந்த சிங்கம் பிடரி ஹேர்ஸ்டைலே விக்குதான் எனப் போட்டு உடைத்தார்.  'ஃபைனல்ல ஜெயிக்கணும்னு நினைச்சு ஆடியதைவிட தலையில் வைத்திருக்கும் விக் தனியாகக் கழண்டு விடக் கூடாதுனு பயந்ததுதான் அதிகம்' எனத் தனது விக் அனுபவம் பற்றிப் பேசியது அவரது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி. யார் என்ன நினைச்சாலும் பரவால்லைனு முடிவெடுத்து மொட்டை போட்டதும்தான் அவருக்கு நிம்மதியே வந்தது. இந்தப் பக்குவம் வர ஆரம்பித்தாலே எப்பேர்ப்பட்ட கேலியையும் சமாளிக்க முடியும்.

 

இனிமே யாராவது 'கிளார் அடிக்குது மச்சி. கொஞ்சம் விலகிக்க’ன்னு கலாய்க்கும்போது ''நாங்கள்லாம் தலைக்கு மேலே உள்ளதை நம்பி வாழ்றவய்ங்க கிடையாது... தலைக்கு உள்ளே உள்ளதை நம்பி வாழ்றவய்ங்க'' மாதிரி சமாளிக்கக் கத்துக்கோங்க பாஸ்!

 

இந்த வீடியோல இருக்குறவங்க எல்லாம் வழுக்கைத் தலையோட கலக்கியவர்கள் தான் பாஸ். டோன்ட் வொர்ரி!

 

- கருப்பு

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

எடிட்டர் சாய்ஸ்

MUST READ