Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோஃப்தா ரைஸ் சுவைத்து இருக்கிறீர்களா? (Sponsored content)

காலம் காலமா வெஜிடபிள் ரைஸ், ஃப்ரைடு ரைஸ், வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு பழகின உங்களுக்கு ஏதாவது ஒண்ணு புதுசா டிரை பண்ணனும்னு ஆசைப்பட்டீங்கனா  கோஃப்தா ரைஸ்தாங்க பெஸ்ட் சாய்ஸ். அத எப்படி செய்யணும்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க.

 

 

காலிஃப்ளவர் கோஃப்தா மசாலா ரைஸ்

தயாரிப்பு நேரம்: 10 நிமிடம்
சமைக்கும் நேரம் - 30 நிமிடம்
2 பேர் சாப்பிடலாம்.

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 1 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

கோஃப்தா செய்ய:

துருவிய காலிஃப்ளவர் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசித்துக் கொள்ளவும்)
பிரெட் கிரம்ப்ஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

பவுடராக்க:

மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கிராம்பு - 2
பட்டை - 1 இஞ்ச் நீளத்துக்கு
உலர்ந்த தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - கால் கப்

தாளிக்க:

நெய் - 1 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
முந்திரி - 10

கோஃப்தா செய்முறை:

உருளைக்கிழங்கை பிரஷர் குக்கரில் 2 விசில் வைத்து வேகவைத்து எடுக்கவும். அதிகம் வேகவைத்துவிட வேண்டாம். அடுப்பில் ஒரு பேனை வைத்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் காலிஃப்ளவரைச் சேர்த்து அவை மிருதுவாகும் வரை வதக்கவும். இனி, கோஃப்தா செய்யக் கொடுத்துள்ளவற்றில் எண்ணெய் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் இத்துடன் சேர்த்து வதக்கவும்.பிறகு அடுப்பை அணைத்து ஆறியதும் சிறிய எலுமிச்சை அளவுக்கு மாவை உருண்டையாக பிடித்து வைக்கவும். பிறகு அடுப்பில் பணியாரக்கல்லை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டியவற்றை சேர்த்து பொன்னிறமாக வேகவைத்து  எடுக்கவும். பிறகு ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை எடுத்துவிடவும்.

சாதம் செய்ய:

பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் ஊற வைக்கவும். பவுடர் செய்யக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து பவுடராக்கவும். அடுப்பில் பிரஷர் குக்கரை வைத்து நெய் சேர்த்து சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்து தாளித்து, அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து கிளறவும். அரிசியில் உள்ள தண்ணீர் வற்றும்வரை மெதுவாக கிளறவும். இத்துடன் அரைத்த மசாலா பவுடரைச் சேர்த்து ஒரு கிளறு கிளறி ஒன்னரை கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி, மூடிப்போட்டு மிதமான தீயில் 2 விசில் வேகவிடவும். இல்லை என்றால் 14 நிமிடம் வேகவிடவும். பிரஷர் நீங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு பவுலில் சாதம், கோப்தா, சாதம் என்கிற லேயர்களை அமைத்து கொத்தமல்லித்தழை தூவி ஆனியன் ரைத்தா வைத்து பரிமாறவும்.

இவ்வளவுதாங்க இந்த கோஃப்தா ரைஸ். இதை செய்ஞ்சு பார்த்து உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு மட்டும் ஷேர் பண்ணாம, இங்க இருக்கிற வீடியோவையும் ஷேர் பண்ணுங்க...

எடிட்டர் சாய்ஸ்

MUST READ