Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இவங்ககிட்ட இந்த கேள்விகளை எல்லாம் கேட்கவே கூடாது...!

தப்பித்தவறிக்கூட இவங்ககிட்ட இந்தக் கேள்விகளைக் கேட்டுடாதீங்க! அட நிஜமாதான் பாஸ் கேட்கவே கேட்காதீங்க!

ராகுல்காந்தி: ஜி, தமிழ்நாட்டுல கோபாலபுரம்னு ஒரு ஏரியா இருக்கு. அது எங்கே இருக்குனு தெரியுமா?

கருணாநிதி: ரெண்டுல ஒண்ணு இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே?

மோடி: என்ன ஜி, உடம்பு சரியில்லையா? இவ்ளோ நாள் இந்தியாவில் இருக்கீங்க?

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: எப்போ சார் சண்டையை ஸ்டார்ட் பண்ணுவீங்க?

ஓ.பன்னீர்செல்வம்: இப்பவும் நாற்காலி நுனியில்தான் உட்கார்றீங்களா?

கவர்னர்: நிரந்தர முதல்வர், தற்காலிக முதல்வர், மக்களின் முதல்வர், இடைக்கால முதல்வர், இலாகா இல்லாத முதல்வர்னு இத்தனையும் பார்த்துட்டோம். இன்னும் எதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கும்?

வைகோ: விசிட்டிங் கார்டெல்லாம் வெச்சிருக்கீங்களாமே, எக்ஸ்கியூஸ் மீ, தாவூத் இப்ராஹிம் அட்ரஸ் எங்கேயிருக்கு?

விஜயகாந்த்: ’பாலும் பழமும்’ படத்தில் உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன?

சீமான்: முப்பாட்டன்களை எல்லாம் உங்க வீட்டு ரேஷன் கார்டில் சேர்த்திருக்கீங்களா?

ஜி.கே.வாசன்: இப்போ நீங்க தோப்பா, தனிமரமா?

மதுரை ஆதினம்: மடத்தில் காத்து வரலைனா கதவைத் திறப்பீங்களா?

சிவகார்த்திகேயன்: ‘அழுதாப் போச்சு’னு ஒரு புரோகிராம் நடத்தினா காம்பியரிங் பண்ண வருவீங்களா?

டி.ராஜேந்தர்: கடையில இருக்கு பஜ்ஜி, காரித் துப்பினா எச்சி, எங்கே சார் இருக்கு உங்க கட்சி? எப்போ சார் பிடிப்பீங்க ஆட்சி?

சிம்பு: ‘தள்ளிப் போகாதே’னு பாட்டு மட்டும் இருக்கு, பட ரிலீஸ் எல்லாம் தள்ளிப்போகுதே?

அனிருத்: உண்மையில் அந்த பீப் பாட்டுக்கு யார்தாங்க மியூஸிக் போட்டது?

- கொஸ்டீன் கோயிந்து.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close