Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கப் கேக் -ன் சுவையான வரலாறு தெரிஞ்சுக்கணுமா?

 

பலரும் விரும்பிச் சாப்பிடுவதில் சாக்லேட், ஐஸ்கிரீம் ஆகியவற்றுக்கு தனி இடம்தான். அதேபோலதான் கப் கேக்-கும். கப் கேக் என்றால், கேக்கைவிட சம்திங் ஸ்பெஷல். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 18ம் தேதி, உலகம் முழுக்க சாக்லேட் கப் கேக் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆம்... இன்று கப் கேக்குக்கு ஹேப்பி பர்த்டே. இந்த கேக்கின் வரலாறும் சுவையானதுதான்.

1796-ம் ஆண்டுவாக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த குக்கரி எக்ஸ்பர்ட் அமெலியா சைமன்ஸ்(Ameliya Simmons) என்பவரால் கப் கேக் செய்யும் முறை கண்டறியப்பட்டது.    1828-ல் வெளியான  'எலிஸா லெஸ்லீஸ்' என்ற சமையல் குறிப்புப் புத்தகத்தில் இடம்பெற்ற 75 ரெசிப்பிக்களில் இந்த கப் கேக்கும் ஒன்று. 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சின்னச் சின்ன கப்கள் மற்றும் மண்ணால் ஆன பாண்டத்தில் கேக் கலவையை வைத்து பேக் செய்தார்கள். ஃபேரி கேக், பட்டி கேக் , கப் கேக் என்ற பெயர்களில் தயாரிக்கப்பட்ட கப் கேக், பல சுவைகளிலும் செய்யப்பட்டது. சாக்லேட் பிரியர்களின் சந்தோஷத்தை அள்ளும் விதமாக, சாக்லேட் கப் கேக்குகளும் செய்யப்பட்டன.



ஆரம்பத்தில், 'கப்  கேக்' என்பதை ஒரு விதமாகவும், 'கப்கேக்' என்பதை மற்றொரு விதத்திலும் தயாரித்தனர். அதாவது, கேக் செய்யத் தேவையான மூலப்பொருட்களை, குறிப்பிட்ட கொள்ளளவு உள்ள கப்பினால் அளந்து அளந்து செய்வது முதல் வகை.  கப் போன்ற சின்னச்சின்ன மண் பாண்டத்தில் மூலப்பொருட்களை நிரப்பி, வெப்பப்படுத்தி எடுப்பது இரண்டாம் வகை.

நான்கு பொருட்கள் சேர்த்துச் செய்யப்பட்டதால் கப் கேக் 1 2 3 4  கேக் என்றும், குவார்ட்டர் கேக் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு கப் வெண்ணெய், ரெண்டு கப் சர்க்கரை, மூன்று கப் மாவு, நான்கு முட்டை கலந்த கலவையைச் சூடாக்கினால்... மஞ்சள் நிறத்தில் கேக்  ரெடி.

கப் கேக்கில் நட்ஸ், பெர்ரி, உலர் திராட்சை சேர்க்கப்பட்டு சுவை கூட்டப்பட்டதுடன், க்ரீம், ஐஸ்க்ரீம், பழங்கள் என கண்ணைக் கவரும் அலங்கார வேலைகளும் மேக்கிங்கில் சேர்க்கப்பட்டன. நாட்டுக்கு நாடு இதன் வகை, சுவை, அலங்காரம்  வேறுபடும்.

உலக சாக்லேட் பிரியர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் சாக்லேட் கப் தினத்தை!

 


-கே.ஆர்.ராஜமாணிக்கம்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close