Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போதும்டா சாமி... மிடில! உலக தகவல் மழை தினம் #InformationOverloadDay!

நம்மில் பலரும் வேலை செய்துகொண்டிருக்கும்போது வாட்ஸ்அப் நோட்டிஃபிகேசன் ஒலி கேட்டால், செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே விட்டுவிட்டு மொபைலைக் கையில் எடுப்பவர்கள்தான். Information Overload எனப்படும் செய்திச்சுமையால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதற்கான அறிகுறி இது.

உலகின் பல நாடுகளில் அரசு சார்ந்த துறைகளும், தனியார் நிறுவனங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்த வேளையில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் இருந்து மொபைலில் வரும் சோசியல் மீடியா நோட்டிஃபிகேசன் வரை பெரும்பாலானவை செய்திச் சுமையாகக் கருதப்படுகிறது. நமக்கு நினைவுபடுத்தும் இவையெல்லாம் நல்லதுதானே என நாம் யோசித்தாலும், மனிதனின் மூளையானது ஒரே நேரத்தில் குறிப்பிட்ட செய்திகளை மட்டுமே நினைவில் ஏற்றிக்கொள்ளக்கூடிய சக்தி படைத்தது. அதையும் மீறி அதிகத் தகவல்களைப் பதியவைக்கும்போது ஞாபகமறதி, செயல்திறன் குறைவு போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நமக்கு உணர்த்தவே உலகம் முழுவதும் வருடந்தோறும் அக்டோபர், 20-ம் தேதியை செய்திச்சுமை தினமாகக் (Information Overload Day) கடைப்பிடிக்கிறார்கள்.

இந்தச் செய்திச்சுமையால் நாம் பாதிக்கப்படுவது நமக்கே தெரியாது என்பதுதான் உண்மை. அலுவலகம் சார்ந்த வேலைகளைப் பெயரளவில் முடிப்பது, புதிய ஐடியாக்களை செயல்படுத்தாமல் வழக்கமான வேலைகளை மட்டும் செய்து ஒப்பேற்றுவது போன்ற பாதிப்புகள் செய்திச்சுமையால் ஏற்படுவதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தப் பிரச்னையை சமாளிப்பதற்காகத்தான், எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்த முடியாத காட்டுக்குள் ஊழியர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்வது, டீம் மீட்டிங் என வெளியே அழைத்துச் செல்வது போன்றவற்றைத் தொடர்ந்து செய்கிறார்கள். இது மூளைக்குப் புத்துணர்ச்சி தருவதோடு ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதாகவும் அமைகிறது.

இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது?

பெரும்பாலும் நோட்டிஃபிகேசன்கள் மூலமாகத்தான் நமக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. வெவ்வேறு விதமான செய்திகள் இன்பாக்ஸில் கொட்டும்போது ஒன்றைக் கவனித்துவிட்டு இன்னொன்றில் கவனம் செலுத்தாமல், மறந்துவிடும் சம்பவங்கள் நடக்கின்றன. மிக அவசியமான விஷயம் தவிர்த்து, மற்றவைகளை நோட்டிஃபிகேசனிலோ, இன்பாக்ஸிலோ வராதபடிக்கு ஃபில்டர் செய்வதால் பாதி செய்திச்சுமைகள் குறைகின்றன.

தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிருங்கள். உங்கள் மூளைக்கும் ஓய்வு தேவை. உடற்பயிற்சி மேற்கொள்வது, புத்தகம் வாசிப்பது போன்றவற்றில் உங்கள் கவனத்தைத் திசைதிருப்புங்கள்.

மாதத்தில் ஒருநாள் சோசியல் மீடியாவிற்கு விடுமுறை அளியுங்கள். வார இறுதியில் நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்.

இனிமேல் அலுவலகத்தில் தேவை இருந்தால் மட்டும் சிசி போட்டு மெயில் அனுப்புங்கள். அப்புறம் அனுப்பிய மெயில் போய்ச் சேருவதற்குள் 'நான் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன். பார்த்து உடனே ரிப்ளை பண்ணு' என்று சீட் முன்னால் போய் நிற்காதீர்கள். 

சொல்லவரும் விஷயத்தை சுருங்கச் சொல்லுங்கள். நன்றி, மகிழ்ச்சி, மாதிரி ஒரு வரியில் ரிப்ளை அனுப்புவதும் வேண்டாம். பக்கம் பக்கமாக சம்பந்தமில்லாமல் எழுதுவதும் வேண்டாம். மேக் இட் சிம்பிள்.

இது பற்றிய தகவல்களைச் சுருக்கமாக இந்த வீடியோவில் காணலாம்...

 

 

- கருப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close