Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்னிங் டூ ஈவினிங் : சர்வம் டிஜிட்டல்மயம்

முழுக்க டிஜிட்டல்மயமான இந்த கலர்ஃபுல் யுகத்தில் செல்போனும், இன்டர்நெட்டும் இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவதுதான் இப்போது ஒருவனுக்கு உச்சபட்சத் தண்டனையாக இருக்கும். இன்றைய ட்ரெண்டி சமூகத்தின் மக்களிடம் டெக்னாலஜியின் வெளிப்பாடு எப்படி இருக்கிறதுன்னு லைட்டா... see more...

* 'என் போனுக்குக் காசு போடணும்'னு பத்து வருசத்துக்கு முன்னாடி யாராவது சொன்னால், நூறு ரூபாய்த் தாளை குறுக்குவாட்டில் மடிச்சு போனுக்குள்ள திணிக்கணும் போலன்னு நினைச்சுருப்போம். போன் லாக் ஓப்பன் ஆக மாட்டேங்குதுனு சொன்னதுக்காக, அதை அப்படியே வாங்கிக் கால் இடுக்கில் உட்கார வெச்சு சுத்தியலால் அடிச்சு பல துண்டாக்கிக் கொடுப்பாரே வடிவேலு. அந்த மாதிரி பேட்டரியைக் கழட்டுவதற்கு, ரெண்டு கையாலும் தூக்குச்சட்டி மூடியைக் கழட்ட முயற்சிப்பது போல போனை இழுத்துக்கொண்டு கிடப்பதும் ஒருகாலத்தில் நமக்கு நடந்திருக்கும். இப்போதெல்லாம் நிகழ்வு அப்படியே தலைகீழ். சின்னக் குழந்தைகளும் கேண்டி க்ரஷ் முதல் க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் வரை வருடக்கணக்காக விளையாடி விளையாடி டயர்டாகிப் போய்க் கிடக்கிறார்கள்.

 

* முன்னொரு காலத்தில் கம்ப்யூட்டரில், ' ஃபைல்ஸ் அனுப்பியாச்சா?'னு யாரிடமாவது கேட்கும்போது 'பீரோவில் பத்திரமா வெச்சுருக்கேன். எடுத்துட்டு வரவா'னு கேட்டுக் கிச்சுக்கிச்சு மூட்டிய அப்பாவிச் சமூகத்துக்கும், இப்போ 'வீட்டு விண்டோஸை க்ளோஸ் பண்ணிரும்மா'னு சொன்னாலே 'அப்பவே சிஸ்டம் ஷட் டவுன் பண்ணிட்டேனே' எனச் சொல்லும் டெக்னிக்கல் சமூகத்திற்கும் இடையே இருக்கும் ஈஃபிள் டவர் உயர வித்தியாசமே இந்தக் காலம் டிஜிட்டல் யுகமாகிப் போனதற்கான சான்று. கையகலக் கைபேசிக்குள் உலகமே ஒளிந்திருக்கும் விந்தைகள் தெளிவான பின்பு 'இத்துனூண்டு போனுக்குள்ளேயா இம்புட்டு இருக்கு?' எனச் சொல்லியபடியே பல் போன கிழவிகளும் காதில் செல்வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

 

* தனியாக இருப்பதாக நினைப்பதே இப்போதெல்லாம் கையில் மொபைல் இல்லாத தருணங்களிலும், மொபைல் இருந்தும் சார்ஜ் இல்லாத கையறுநிலைகளிலும்தான். யார் எவ்வளவு தொலைவில் இருந்தால் என்ன? கண்காணாத இடத்துக்குக் கண்ணைக்கட்டி கொரியரில் அனுப்பப்பட்டாலும் 'யாமிருக்க பயமேன்' எனத் துணை நிற்கின்றன தொலைத்தொடர்பு சாதனங்கள். நவீன கருவிகள் மனிதனைச் சோம்பேறியாக்குகின்றன என ஆங்காங்கே ஆய்வறிக்கைகளில் சொல்லப்பட்டாலும், பள்ளிக்கூடம் போகும் சிறுவர்கள் மெசேஜ் டைப் செய்யும் வேகத்தைப் பார்த்தாலே அந்தக் கருத்து நம் மனதில் ஒரு நிமிடத்தில் உடைபட்டுப் போகும். முடியும்ம்மா...?

 

 

* பிள்ளையாருக்கு எலி வாகனமானது போல இப்போது நம்மில் பலருக்குப் பேருதவி புரிந்துகொண்டிருப்பது மவுஸோ, ஸ்மார்ட்போனோதான். தூங்கி விழிக்கும்போதே மொபைல் போன், நோட்டிஃபிகேஷன் சத்தத்தோடு வெளிச்ச நட்சத்திரங்களைத் தூவி வரவேற்கின்றன. பல்லைக்கூட விலக்காமல் பெட் காபி சாப்பிடுவது போல் பெட்ஷீட்டுக்குள் புகுந்தபடி, வந்திருக்கும் வாட்ஸ்-அப், ஹைக் மெசேஜ்களுக்கு ரிப்ளைகளைத் தெறிக்கவிடுகிறோம். முதல்நாள் நள்ளிரவில் போட்ட செல்ஃபிக்கு வந்திருக்கும் போட்டோ கமென்ட்ஸ்களுக்கு பதில் கமென்ட்கள் இட்டு மனசைத் தேற்றிக்கொள்கிறோம். பத்து 'ப்ப்பா..' கமென்ட்களுக்கு மத்தியில் ஒற்றை 'ஆசம்' கமென்ட் தரும் பேரின்பம் ஃபேஸ்புக் வாழ் மக்களுக்கு மட்டுமே புரியும்.

* நல்ல விஷயங்களைப் பகிர வேண்டும்னு நமக்குப் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த விஷயத்தை 'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்'ங்கிற பார்த்திபன்-வடிவேலு காமெடிக் கதையாகிக் கடைசியில் 'பகிரப்படும்' எனும் வார்த்தையை மட்டும் கப்பெனப் பிடித்துக்கொண்டு நல்ல சேதி, கெட்ட சேதி, நாலு வருசத்துக்கு முன்னாடியே குழிதோண்டிப் புதைச்ச சேதினு எல்லாத்தையும் தோண்டியெடுத்துப் பகிரோ 'பகீர்'னு ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கோம். வாய்க்கு வந்த எதையாவது சொல்லிட்டு விவேகானந்தரையும், ஐன்ஸ்டீனையும் இழுத்துத் தெருவில் விட்டுக்கிட்டு இருக்கோம். 

* போஸ்ட் பிடிக்கலைனா கம்முனு அடுத்த பேஜை ஸ்க்ரோல் பண்ணிப் பார்த்துப் போய்க்கிட்டே இருப்போம்ல, வாழ்க்கையிலும் அதே மாதிரி நல்லது, கெட்டதுனு தினந்தினம் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கும். நமக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டும் சிம்பிளா லைக் பண்ணிட்டு, சில நேரங்களில் ஹார்ட்டின் சிம்பள் போட்டு அபரிமிதமான விருப்பத்தைத் தெரிவிச்சுக்கிட்டு மகிழ்ச்சியாக வாழப் பழகிக்கணும். விரும்பத்தகாத நிகழ்வுகளை நிறுத்தி நிதானமாகப் பார்த்து உணர்ச்சிவசப்படுறதுக்குப் பதிலா அப்படியே அப்பீட்டாகி அடுத்த நல்ல நிகழ்வுக்கு 'கிருட்டுக் கிருட்டு'னு ஜம்ப் பண்ணி ட்ராவல் ஆகிட்டே இருக்கணும்னு சுவாமி மார்க்கானந்தா தஞ்சாவூர் பக்கத்துல இருக்கிற தன்னோட டைம்லைன்ல எழுதி வெச்சுருக்கிறதா ஒரு ஷேரிங் ஸ்டேட்டஸ் சொல்லுது. 

* ஒரு டேப்லட் அளவு மூஞ்சியில் ஒன்பது ஃபில்டர் அப்ளிகேஷன்களைப் போட்டுப் படுத்தியெடுத்து ப்ரொஃபைல் பிக்சரை மாத்திட்டு அதை லைக் பண்ணச் சொல்லி ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் இருக்கும் மூவாயிரம் பேருக்கும் ப்ரைவேட் சாட்டில் லிங்க் அனுப்பி 'ஆதரவு தாரீர்!' எனக் காலில் விழுந்து போட்டோக்கள் போட்டாலும் தானாகக் கிடைக்கிற முப்பது லைக்தான் நம்ம டைம்லைன்ல ஒட்டும். நாம் செய்யும் சில பல நல்ல விஷயங்களுக்கு ( நல்ல விஷயமா அப்படின்னா...?) ப்ரோமோஷன் கொடுத்து அடுத்தவர்களையும் அதைச் செய்யுமாறு ஊக்குவிக்கணும். அதுக்குக் கிடைக்கிற வெகுமதியை எப்படி இருந்தாலும் மனதார ஏத்துக்கணும். பில்டப் பண்றமோ, பீலா விட்றமோ... அது முக்கியமில்லை. நாம என்ன பண்ணினாலும் இந்த உலகம் நம்மை உத்துப் பார்க்கணும். அவ்ளோதான்.

 

 

* சங்ககாலத்துல புறா விடு தூது, நாரை விடு தூதுன்னு பறக்கிற ஒரே காரணத்துக்காக பறவைகளோட காலில் லெட்டரைச் செருகி நாடுவிட்டு நாடு இதயங்களை அனுப்பி வாயில்லா ஜீவன்களை வதக்கி, வெயிலில் பறக்கச் சொல்லிப் பாடாய்ப்படுத்தியதெல்லாம் பழைய கதை. போகிறபோக்கில் பொண்ணைப் பார்த்தோமா பெயரைக் கேட்டோமா?, ஃபேஸ்புக் ஐடியைத் தேடினோமா? ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்தோமா? ப்ரோபோஸ் பண்ணினோமா?னு பலகட்டப் பரிமாற்றங்களையும் ஓவர் நைட்டிலேயே முடிச்சு அடுத்த நாள் பிக்கப் ஆகி, அதற்கடுத்த நாள் ப்ரேக்-அப் ஆனாலும் அசால்ட்டா அன்ஃப்ரெண்ட் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிடுவான் டிஜிட்டல் உலகத்து இளைஞன். 

* 4ஜி போன் இருக்கு. வீடியோ காலிங் ஆப்ஷனும் இருக்கு. பிறகென்ன, எல்லோருக்கும் கான்ஃபரன்ஸ் கால்ல மீட்டிங்கைப் போட்டுப் பத்துமணிக்கு மேல் சியர்ஸ் சொல்லிப் பார்ட்டியை ஆரம்பிக்க வேண்டியதுதான். தூரத்து நண்பனின் அருகில் இருக்கும் கடலை பர்பியையும், மிக்சர் பாக்கெட்டிலும்தான் நினைத்தவுடன் கைவைத்து அள்ள முடியாது. மற்றபடி, ஸ்கைப்பிருக்க ஜாலிக்கும் அரட்டைக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. வெட்டியாய்க் கிடக்கும் வாட்ஸ்-அப் குரூப்பில் அவ்வப்போது பழங்கதை பேசி சாவடிக்குபோது, மகான் சசிகுமார் 'மூடிக்கிட்டுப் படுங்கடா நொன்னைகளா...' எனச் சொன்னதைப்போல... 'குரூப்பைக் கலைச்சுத் தொலைங்கடா...' எனக் கதறும் தூரம் தொலைவில் இல்லை. 

ஆகவே மக்களே... எல்லாவற்றையும் டிஜிட்டல் யுகத்திற்கேற்றார்போல் மாற்றிக்கொண்டு ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஜெட்களில் பறந்துகொண்டிருக்கும் நாம் எதிரில் வருபவர்களை எனிமிகளாய்ப் பார்த்து எரிக்கும் சிவப்பு மூஞ்சி எமோட்டிகான் போட்டுத்தான் கடந்து செல்வோம் என அடாவடித் திட்டங்களாகவே வைத்திருந்தால் எப்படி? சின்னதாய் ஒரு ஸ்மைலி போடலாமே ஃப்ரெண்ட்ஸ்!

- விக்கி

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ