Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை - ஏர் இந்தியா புதிய சாதனை

உலகின் நீண்ட தூர இடைநில்லா விமான சேவை இப்போது ஏர் இந்தியாவிடம்! டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோவுக்கு பசிஃபிக் பெருங்கடல் ரூட் வழியாக 14.5 மணிநேரத்தில், 15,300 கிமீ தூரம் ஏர் இந்தியா விமானம் ஒன்று இடையில் நிற்காமல் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எமிரேட்ஸ் இயக்கிய துபாய் - ஆக்லாந்து ட்ரிப்தான் உலகின் தொலைதூர நான் - ஸ்டாப் ட்ரிப்பாக கருதப்பட்டது. 

அட்லான்டிக் கடல் வழியாக செல்வதைவிட பசிஃபிக் ரூட் 1,400 கிமீ அதிக தூரம். ஆனால், இரண்டு மணி நேரம் விரைவாகவே விமானம் சான் ஃப்ரான்சிஸ்கோவை சென்றடைந்தது. காரணம், அட்லான்டிக் கடல் வழியாக சென்றால் எதிர்காற்று மிக அதிகம் என்கிறது ஏர் இந்தியா. பசிஃபிக் வழியாக சென்றால், காற்றின் போக்கிலேயே வேகமாக விமானத்தை இயக்கி, அதிக தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்க முடியுமாம். 

நான்கு பைலட்டுகள்,  ராஜ்னீஷ் ஷர்மா, கௌதம் வர்மா, எஸ்.எம்.பலேக்கர், எம்.ஏ.கான் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் இதற்காக உழைத்திருக்கிறார்கள். போயிங் 777-200 லாங் ரேஞ்ச் ரக விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு மணிநேரம் பறப்பதற்கு 9,600 லிட்டர் எரிபொருளை 'குடிக்கும்!' 

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குத்தான் இந்த சாதனை நிற்கும். காரணம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூரில் இருந்து நியூயார்க் நகருக்கு இடையில் நிற்காமல் 19 மணிநேரத்தில் 16,500 கிமீ செல்லக்கூடிய விமான சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

பல்சுவை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close