Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலின் முதல் சிம்பு வரை.... சாமீஈஈஈ...எங்களுக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகணும்!

சென்ற வாரத்தில் சுத்தவிட்டு சுண்ணாம்பு அடிச்ச சில சந்தேகங்கள் இவை. ஒரு விஷயத்தை சொன்ன மாதிரியும் இருக்கணும்... சொல்லாத மாதிரியும் இருக்கணும். ஆனா, உண்மையை மட்டும் சொல்லிரக் கூடாது. அப்படி வாரா வாரம் மனசுல தோணும் சில சந்தேகங்களை இனி கேக்குறதுனு முடிவு பண்ணிட்டோம்யா. இதோ இந்த வாரத்துக்கான கோட்டா..!   

                                                                                                       

* காவிரி நீர் பிரச்னை தொடர்பாகப் போராட்டம் பண்ணி பல தலைவர்கள் கைது செய்யப்பட்டாங்க. அதுல த.மா.கா. தலைவர்     ஜி.கே.வாசனும் கைது செய்யப்பட்டார்.  விஷயம் அது இல்லை. அவரு கைது செய்யப்படுறதுக்கு முன்னாடியே கழகக் கண்மணிகள்  ஜி.கே.  வாசன் கைதுனு சிரிச்சமேனிக்கு இருக்கிற போட்டோவுடன் போஸ்டர் அடிச்சு ஊரெல்லாம் ஒட்டிட்டாங்க. விஷயம் அது இல்லை.  ஒருவேளை அவரைக் கைது பண்ணாம போயிருந்தாங்கனா அவரும், தொண்டர்களும் என்னத்தைச்  சொல்லி சமாளிச்சிருப்பாங்க?

 

*தி.மு.க. காவிரி மேலாண்மை அமைக்க வேண்டி போராடினது ஊரறிந்த விஷயம் ஆனா ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பின  விண்ணப்பத்துல 262(ஏ) சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்களாம். ஆக்சுவலா அப்படி ஒரு பிரிவே  இல்லையாம். 262 (1),  262 (2) இப்படித்தான் சட்டப்பிரிவுகளே இருக்குதாம். இல்லாத சட்டப்பிரிவில் இவங்க அனுப்பியது ஒருபக்கம்  இருக்கட்டும். சரியான விதியின் கீழ் அனுப்பியிருந்தா மட்டும் மறுநாளே மேலாண்மை வாரியம் அமைச்சிருப்பாங்களாங்கிறதுதான்  பில்லியன் டாலர் கேள்வி.

* எந்தத் தலைவர் யாரைச் சந்திச்சாலும் மரியாதை நிமித்தமாக சந்திச்சோம்னு சொல்லியே சமாளிக்கிறீங்களே அது என்ன எலெக்‌ஷன்  வரும்போது மட்டும் உங்களுக்கு மரியாதை நிமித்தம் இப்படி பொங்கி வழியுது. ஆமா, மரியாதை நிமித்தத்தை விடுங்க,அலுவல் நிமித்தமாகவாச்சும் உங்க தொகுதிப்பக்கம் போறீங்களா தலைவர்களே?


*தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் சர்ச்சைக்குரிய வேட்பாளர்களே திரும்பவும் நிறுத்தப்பட்டிருக்காங்க, அதனாலதான் மக்கள்நலக்  கூட்டணி இந்த இடைத்தேர்தலையே புறக்கணிக்கிறதுனு வைகோ சொல்லிருக்கார். சரி அது ஓகே, ஆனா திருப்பரங்குன்றம் தொகுதியில்  அப்படி யாரையும் நிறுத்தலையே அங்கேயும் ஏன் தேர்தலைப் புறக்கணிச்சாங்க? அங்கேயாவது  நின்னுருக்கலாமே!. ஏம்பா நான்  சரியாத்தான் பேசுறேனா?




*நடிகர் சங்க பிரச்னைனா கரெக்டா  உங்ககிட்ட இருந்து கருத்து வருது.  இனிமே 'தல' ங்கிற பேரை என்னோட படத்துல யூஸ்  பண்ணமாட்டேன்னு யாருமே கேக்காதபோதும் உங்ககிட்ட இருந்து பதில் வருது. சிவகார்த்திகேயனுக்கு பிரச்னைனா சொல்லிவச்சமாதிரி  கரெக்டா உங்ககிட்ட இருந்து அவருக்கு  சப்போர்ட் வருது ஆனா, சொன்னதேதிக்கு மட்டும் உங்க படம் வரவேமாட்டேங்குதே அதுமட்டும்  ஏன் சிம்பு ஏன்? 

 

-ஜெ.வி.பிரவீன்குமார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ