Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருக்குறளுக்கு ஒரு ட்ரெண்டி உரை! #WednesdayWisdom

பேஸ்புக்கில் பக்கம்பக்கமாக ஸ்டேட்டஸ் போட்டு சொல்லவேண்டிய மிகமுக்கிய கருத்துகளை இரண்டு வரி ட்வீட்டுகளாக கொடுத்தவர் திருவள்ளுவர். என்றைக்குமே எக்ஸ்பைர் ஆகாத  குறளடிகளில், இன்றைய ட்ரெண்டிற்கான சில சாம்பிள் உரை இதோ! 


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு.  #423 


இன்றைய இணையசூழலில் யார் எதைவேண்டுமானாலும் கிளப்பிவிடலாம். அதில் பல நம் காதுகளையும் எட்டலாம். வாட்ஸ்ஆப்பில் வரும் அனைத்தையும் நம்பும் சிகமணியாக இல்லாமல், உண்மை என்னவென்று கண்டுபிடிப்பதே உணமையான புத்திசாலித்தனம்.இல்லைன்னா அப்பல்லோ மாதிரி கேஸ்களில் மாட்டவாய்ப்புண்டு பாஸ்! 


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின். #292 


ஆயிரம் பொய்சொல்லி கல்யாணம் பண்ணலாம்னு சொல்றமாதிரி, யாரையும் பாதிக்காத நன்மைக்காக பொய் சொல்வது தவறில்லை. கோ கிளைமாக்ஸ்ல கே.வி ஆனந்த் இதைதான் சொல்லவருகிறார்! 


அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது 
அஞ்சல் அறிவார் தொழில்.#428 


பயப்படவேண்டிய முக்கியமான விஷயங்களுக்கு “பயமா எனக்கா? நாங்கலாம் சுனாமிலயே ஸ்விமிங்க போடுறவைங்க"னு வெட்டிவசனம் பேசாம, பயப்பட்டு சிறந்த தீர்வு என்னவென்று கண்டுபிடிப்பதே செம்ம கெத்து! ஒகேவா சுனாமி பாய்ஸ்? 


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.#151 


இப்போலாம் நீங்க சின்னதா வளர்ந்துட்டா கூட, கழுவி ஊத்துறதுக்குனு,  யூடியூப்லையும், ட்விட்டர்லையும் நாலு பேர் கண்டிப்பா கிளம்பி வருவாங்க. அவங்க மேல கோபப்படாம பொறுமையா இருங்க. என்னைக்கும் சூரியன் நாயை பார்த்து திருப்பிகுலைக்காது. 

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 
அகநக நட்பது நட்பு.#786 


பேஸ்புக்கில் மட்டும் போலியாக ஸ்மைலி அனுப்புவது உண்மையான நட்பில்லை, இருவர் மனதிலும் அதே ஸ்மைல் நிலைபெற்றிருப்பதே உண்மையான நட்பாம். பேஸ்புக்கில் போலி அக்கௌன்ட்களும் அதிகம் ப்ரோ, ஜாக்கிரதை! 

காதல் அவரிலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழியென் நெஞ்சு#1242 


நாம் காதலிக்கும் பையனோ/பொண்ணோ நம்மிடம் காதல் இல்லாமல் இருக்க, நாம் மட்டும் அவர்களை நினைத்து பீல் பண்ணுவது நம்முடைய அறியாமை தானாம்! நோட் பண்ணுங்க சூப் பாய்ஸ்! 


இனிய உளவாக இன்னாத கூறல் 
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.#100 


இங்கிலீஷ்னாலும் சரி, தமிழ்னாலும் சரி நல்ல வார்த்தைகள் ஆயிரம் இருந்தும் நுனிநாக்கில் WTF, STF போன்ற வார்த்தைகளை வைத்துகொண்டே அலைவது , ப்ரீ வை-ஃபை இருக்கும்போதும் மொபைல் டேட்டா யூஸ்பண்றதுக்கு சமம்! 

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 
அன்றே மறப்பது நன்று.#108 


லைக் பண்ணவன மறக்காம இருக்கணும், ட்ரோல் பண்ணவன உடனே மறந்துறணும். 

திருக்குறள் மீம்ஸ் கலெக்‌ஷன்ஸ் பார்த்திருக்கீங்களா???? இங்க க்ளிக்குங்க.


-ம.காசி விஸ்வநாதன்

மாணவப் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close