Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பைஸி பலாக்காய் பிரியாணி (sponsored content)

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - ஒன்னரை கப்
நறுக்கிய பலாக்காய் - 2 கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
தயிர் - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
பிரியாணி மசாலா - ஒன்னரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3-4
புதினா இலைகள் - 15
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

அரைக்க:

முந்திரி - 8
பட்டை - ஒரு இஞ்ச் துண்டு
கிராம்பு - 2
பூண்டு - 8 பல்
இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு

தாளிக்க:

எண்ணெய்/நெய் - 5 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
ஏலக்காய் - 2
சீரகம் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவிடவும். வெங்காயத்தை ஸ்லைகளாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்துக்கு அரைத்தெடுக்கவும்.

இளசான பலாக்காயாக தேர்ந்தெடுத்து அதனுடைய தோலை நீக்கிவிட்டு காய்ப்பகுதியை நீளமாக நறுக்கி வைக்கவும். பிறகு எண்ணெயில் பொரித்தெடுத்து டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை அவை உறிஞ்சியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

அடுப்பில் சின்ன குக்கரை வைத்து எண்ணெய்/நெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்வரை வேகவிடவும்.

இத்துடன் தக்காளி, உப்பு, பிரியாணி மசாலா, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும்.பிறகு புதினா இலைகள், கொத்தமல்லித்தழை, தயிர் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இத்துடன் பொரித்தெடுத்த பலாக்காயைச் சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வேகவிடவும். பிறகு ஒண்ணே முக்கால் கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு வேகவிடவும். இத்துடன் ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு விசில் பொருந்திய குக்கர் மூடியை சேர்த்து மூடி, தீயை முற்றிலும் குறைத்து 14 நிமிடம் வேகவிடவும். இடையில் லேசாக திறந்து அடிப்பிடிக்காதவாறு கிளறிவிட்டு பிறகு மூடிப்போட்டு வேகவிடவும்.

 

 

 


பிறகு திறந்து கொத்தமல்லித்தழை தூவி ஆனியன் ரைத்தாவுடன் சேர்த்துப்பரிமாறவும்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ