Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லீவ் முடிஞ்சதேன்னு அழக்கூடாது!

லீவ்ல ஊருக்குப்போய் சொந்த பந்தங்களோட தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்து கொண்டாடியிருப்போம். திரும்ப ஊரைவிட்டுக் கிளம்பும்போது முகத்தை விறைப்பா வச்சுக்கிட்டாலும், ஸ்கூலுக்குப் போற குழந்தைங்க மாதிரி மனசு ஃபீலிங் காட்டும். எப்படியெல்லாம் குமுறலா இருக்கும்னு கண்ணீரைத் துடைச்சிக்கிட்டே யோசிச்சதுல...

'லீவ்ல சகல வசதிகளோட எவ்வளவு ஜாலியா இருக்கோம். ஊரவிட்டுப் போனா வாழ்க்கை மல்லாக்கப்படுக்கப்போட்டு கும்மாங்குத்து குத்துமே! இந்த வாழ்க்கைதான் எவ்வளவு மோசமானது இல்ல!' அப்படின்னு யோசிச்சிக்கிட்டே பொட்டியக் கட்டுவோம்.

ஊருக்குப் போனவங்க திரும்பும்போது சிங்கிள் பேக்கோட வந்ததா எஸ்.டி.டீயே கிடையாது. ஆள் வச்சு தூக்கிப் போற அளவுக்கு தீபாவளிப் பலகாரம், ஊறுகாய், இட்லிப்பொடி இன்னும் சில பல இத்யாதிகள் சேர்ந்து லக்கேஜ் பல்க்கா இருக்கும்.

பொதுவா மூணு வேளையும் வஞ்சகமில்லாம சாப்ட்ற நம்ம பசங்கள, அஞ்சு வேளை சாப்பாடு போட்டு அன்புத்தொல்லை பண்றவங்க பேர் தான் அம்மா! இது பத்தாதுன்னு ஊருக்குப் போறப்ப 2 தோசையாவது சாப்பிட்டுப் போடானு உட்காரவச்சு 5 தோசை சாப்பிட வைப்பாங்க. நமக்கு சோறு தான் முக்கியம் பாஸூ!

 

கர்மா மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? ரெண்டு நிமிஷத்துக்கு மேல எந்த சேனலையும் பார்க்கவிடாம ரிமோட்ட கதறவிட்ட நம்மள... விதியானது பஸ்ல மொக்கைப்படத்த பார்க்கவச்சு பழிவாங்கும்! 

ரூம் வந்தா ஜட்டிய எங்க தூக்கி எறிஞ்சோம், ஐடி கார்ட எங்க வச்சோம்ன்னு தேடியெடுத்து டயர்டா ஆபிஸ் கிளம்புனா... ரூம்மேட் லீவ் சொல்லிட்டுத் தூங்குவான். பாத்ரூம் போய் 'சென்னை-28' ஜெய் மாதிரி அழுதுட்டு வருவோம்.

கோமா ஸ்டேஜ்லருந்து எந்திருச்சு வந்தமாதிரி ஆபிஸ் ப்ராஜக்ட், மீட்டிங், டார்கெட் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா ஞாபகம் வந்து இயல்புநிலைக்குத் திரும்புவோம். உங்களுக்கும் இஸ்கு இஸ்கு என்றா கேட்கிறது?!

- கருப்பு

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close