Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திவான், தர்மதுரை, மக்கள் நலக் கூட்டணி - சாமீஈஈஈ... எங்களுக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகணும்!

வாராவாரம் மனசுல தோனுற மில்லியன் டாலர் கேள்விகளை, பதில் வருதோ இல்லையோ  கேட்டுட்டுப் போறது வழக்கம். அப்படி உதிச்ச இந்தவாரக் கேள்விகள்தான் இதெல்லாம், யாராவது க்ளியர் பண்ணுங்க ப்ளீஸ்.

                                                                                                                

இப்போலாம் எந்தப் படத்து டீசர், ட்ரைலர், பாட்டு வந்தாலும்  அட ஃபர்ஸ்ட் லுக்போஸ்டரே வந்தாலும் உடனே ஆஜராகி இதை நாங்க நாளைக்குதான் விடலாம் னு இருந்தோம் யாரோ திருட்டுத்தனமாக இன்னைக்கே வெளியில விட்டுட்டாங்கனு சொல்லிவச்சாமாதிரி எல்லாருமே சொல்லுறீங்களே நிஜமாகவே அதையெல்லாம் திருட்டுத்தனமாக ரிலீஸ் பண்ணப்படுதா, இல்லை பப்ளிசிட்டிக்காக நீங்களே பண்ணிக்கிறீங்களா? இல்லை ஒரு சந்தேகத்துக்காகதான்.
                                            

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் எந்தத்தொகுதியிலும் போட்டியில்லை யாருடனும் கூட்டணி இல்லைனு சொன்ன திருமாவளவன் மதவாதச் சக்திகளுக்கு எதிராகச் செயல்படும் காங்கிரஸை ஆதரிக்கிறேன்னு புதுச்சேரிக்குப் போயி அங்கே முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக களத்துல இறங்கியிருக்காரு. அப்போ இங்கே இருக்குற காங்கிரஸ் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படலைனு சொல்ல வர்றாரா இல்லை இங்கே இருக்குறது காங்கிரஸே இல்லைனு சொல்ல வர்றாரானு சத்தியமாத் தெரியலை.
                                                                                                               
                                         

தீபாவளிக்கு மறுநாள் சரத்குமார் நடிச்ச திவான் படம் டீவியில ஓடிக்கிட்டு இருந்துச்சு. அந்தப்படத்துல சரத்குமார் ஜெயிலுக்குள்ளேயே செத்துடுறாரு. ஆனா தான் செத்ததை வெளியில யாருக்கும் சொல்லக்கூடாதுனு கேட்டுக்கிட்டதால அவரை லாக்கப்புக்குள்ளேயே புதைச்சு சமாதியாக கட்டி மாலைலாம் போட்டு கும்பிட்டுக்கிட்டு இருக்குறாங்க. ஆத்தீ, தீபாவளிக்கு சாப்பிட்ட மொத்த சாப்பாடும் இந்த ஒரே சீன்ல ஜீரணமாயிடுச்சு. ஆமா, இந்த மாதிரி ஜெயிலு, லாக்அப்லாம் தமிழ்நாட்டுல எந்த ஊர்ல பாஸ் இருக்குது?

விஜய் சேதுபதி நடிச்ச 'தர்மதுரை' படத்தைப் பாராட்டி சீனுராமசாமிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்குறாரு. இது மாதிரி பல நல்ல படங்கள்லாம்கூட வந்திருக்கு. அதையெல்லாம் ஏன் பாராட்டினதே இல்லைங்கிற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும். ஆக்சுவலா படம் வந்து பல மாசம் ஆச்சு. இப்போ வந்து எதுக்கு கடிதம் எழுதிருக்கார்? நிஜமாவே பாராட்டணும்னுதான் பாராட்டினாரா... இல்லை திருமாவளவன், ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் னு எல்லோருமே பாராட்டிட்டாங்கங்கிறதுக்காகப் பாராட்டியிருக்காரா?

மக்கள் நலக் கூட்டணிக்குள்ள எந்தப் பிரிவும் இல்லை; கருத்து மோதலும் இல்லைனு அதில் இருக்கிற எல்லாத் தலைவர்களுமே சொல்லிக்கிறாங்க ஆனா, இடைத்தேர்தலில் விஜயகாந்த் தனித்துப் போட்டிங்கிறார், ஜி.கே. வாசன் போட்டி இல்லைங்கிறார், திருமாவளவன் புதுச்சேரியில் காங்கிரசுக்கு ஆதரவுங்கிறார், வைகோ மக்கள் நலக் கூட்டணியே இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறதுனு சொல்றார். இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிட்டு எங்களுக்குள் பிரிவே இல்லைனு சொல்றீங்களே... இதையெல்லாம் நம்பலாமா இல்லை நம்பக் கூடாதா உண்மையைச் சொல்லுங்க.

-ஜெ.வி.பிரவீன்குமார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ