Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தெலுங்கானா, லட்சுமி நரசிம்மர் கோயிலில் காதல் திருமணத்துக்குத் தடை!


தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள தாபலா லட்சுமி நரசிம்மர் கோயிலில் காதல் திருமணங்கள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரசித்திப்பெற்ற இந்த கோயிலில் திருமணம் செய்தால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இக்கோயிலுக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற பல பகுதிகளில் இருந்து காதல் ஜோடிகள் வந்து திருமணம் செய்வது வழக்கம். இக்கோயிலில் ஏராளமான பெற்றோர்கள் பார்த்து நடத்தும் திருமணங்களும் நடைபெற்றுள்ளன. இந்த தடைக்குக் காரணம், மக்கான்களி பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் பணிபுரிந்து வரும் அனில் என்பவர், ஹஸ்தாபுரத்தைச் சேர்ந்த மவுனிகா என்ற 18 வயது பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 19-ம் தேதியன்று இந்த காதல் ஜோடி லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கோவிலுக்குச் சென்று அணிலை கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதைத் தொடர்ந்தே தற்போது அந்த கோயிலில் காதல் ஜோடிகள் திருமணம் செய்வதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ