Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் தரணி, இனி அல்பேனி, நியுயார்க்கிலும்! sponsored content

தரணி, அல்டாமவுண்ட் ரெஸ்டாரன்ட் குழுமத்தின் அங்கம் இந்த நவம்பர் 5 முதல், பொருளாதார வளர்ச்சியும், பண்பாடும் நிறைந்த நியுயார்க்கின் தலைநகரான அல்பேனியில் தனது புதிய கிளையைத் துவங்க இருக்கிறது.


இந்தப் புதிய உணவகத்தில் நிஜாம் கிச்சன் முதல் மலபார் உணவுகள் வரை,
கடல் உணவுகளிலிருந்து செட்டிநாடு கைவண்ணம் வரை பலதரப்பட்ட தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளது.

தரணி, ட்வென்டி மால், எம்பயர் ஸ்டேட் கட்டடங்கள், மாநில வளாகக் கட்டடங்கள், GE அலுவலகங்கள் மற்றும் கிராஸ் கேட் மாலுக்கு சில மணித்துளிகள் தொலைவில் அமைந்துள்ளது. 6000 சதுர அடியும், 200 பேர் அமரக்கூடிய கூடத்தை விலைக்கு வாங்கி, தரமான இந்திய உணவுகளை நாடி வரும் இந்தியர்களின்  ரசனைக்கேற்ப  வடிவமைத்துள்ளனர். இதைப் பற்றி தரணியின் இணை மேலாளர் அஸ்வனி ஸ்ரீதர் தோட்டக்குரா கூறுகையில் “1980 முதல் இருக்கும் இந்தக் கட்டடத்தின் வரலாற்று சிறப்பு கெடாமல் புதுப்பிக்கப்பட்டிருப்பதை இங்குள்ள அல்பேனி மக்கள் நன்கறிவர்.”

தரணி, அல்பேனி நகரத்தில் முதன்முதலாக உலகப் புகழ்பெற்ற ஹைதராபாத் பிரியாணிக்கென துவங்கப்பட்டிருக்கும் தென்னிந்திய உணவகம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும். இதுதவிர தரணியில் நா ஊறும் சுவை மிகுந்த உணவு வகைகள் உங்கள் சுவை நரம்புகளை மகிழ்விக்க வருகிறது. இதில் கரையோர ஆந்திர புகழ் பெசரட்டு கோர்மா, நெல்லூர் மீன் புலுசு, கொடி இகுரு, சிக்கன் டம் பிரியாணி, பேப்பர் ரோஸ்ட் 70mm தோசை, எண்ணெய் கத்திரிக்காய், செட்டிநாடு கார உணவுகள் மற்றும் இந்தோ-சைனீஸ் உணவு வகைகளும் அடங்கும். தக்க்ஷின் என்ற பொருத்தமான அடைமொழியோடு தென்னிந்தியாவின் எல்லா ஊர்களின் சிறப்பு உணவுகள் மட்டுமல்லாது பாரம்பரிய உணவுகளும் இங்கே கிடைக்கின்றன.  

துவக்க விழாவில் பேசிய அல்டாமவுண்ட் குழுமத்தின் நிறுவனர் பாஸ்கர் ரெட்ணம், இந்த உணவகத்தின் சுவையும் தரமும் மாறாது இதன் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதியளித்ததுடன், இந்த உணவகம் வட அமெரிக்கா முழுவதும் தொடர் உணவகமாக விரிவடைய வேண்டும் என்ற தன் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார்.  

“தற்போது எங்கள் கிளைகள் அனைத்தும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாஸ்டன் மற்றும் வட கேரலினாவில் உள்ள எங்கள் உணவகங்களுக்கு வாடிக்கையாளர்களிடம் பேராதரவு கிடைத்திருக்கிறது.
மேலும் பல தென்னிந்திய பாரம்பரிய உணவு வகைகள், தின்பண்டங்கள் மற்றும் பல்வேறு ஊர்களின் சிறப்பு உணவுகளை அமெரிக்க வாழ் இந்திய மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே எங்கள் குறிக்கோள். இந்த பலத்த வரவேற்பைக் கண்ட பிறகு நாங்கள் லதம், நியுயார்க் மற்றும் மாசேசூசட்ஸ், கனேட்டிகட், நியுயார்க், நியு ஜெர்சி, வர்ஜீனியா மற்றும் வட கரோலினா ஆகியவற்றின் பல பகுதிகளிலும் எங்கள் கிளைகளை விரிவு செய்யப் போகிறோம்.” என்றார்.

இந்த வார இறுதியில் தரணி, அல்பேனியின் “கிராண்ட் மெகா பஃபே”விற்கு
வருகை தாருங்கள்.

முகவரி:

DHARANI ALBANY
2050 WESTERN AVENUE
GUILDERLAND, NY 12084
 
தொடர்புக்கு:

Sudeep Srinivas
603-921-4350
info@dharanius.com
www.DharaniUS.com

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ