Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நம்ம எல்லாருக்கும் ஒரு பேர் இருக்கு! என்னன்னு தெரிஞ்சுக்கலாமா..!?

காலையில் நாலு மணிக்கே ரூம் கதவைத் தட்டி பேஸ்ட் கேட்கிறது, மச்சி கொஞ்சம் வைஃபை ஆன் பண்ண முடியுமானு கடன் கேட்கிறது, அவன் என்னை பார்க்கிறான்டினு  பொலம்புறது, எக்ஸாம்ல இஸ் இஸ்னு கூப்பிட்டு பிட் கேட்கிறதுனு எல்லாரோட ஃப்ரெண்ட் சர்க்கிள்லேயும் ஒரே மாதிரி கேரக்டர் உள்ள ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் இருப்பாங்க. காலேஜ்ல, ஆபீஸ்ல, ட்ரெயின்ல, பஸ் ஸ்டாண்ட்ல, ஹாஸ்பிட்டல்ல, சுடுகாட்டுல... இப்படி எங்கே போனாலும் இந்த மாதிரி ஒரு ஆளை நீங்க பார்த்துடலாம். ஏன் நீங்களேகூட இப்படி ஒரு ஆளா இருக்கலாம். உங்க எல்லோரையும் கூப்பிட என்ன மாதிரி பெயர் இருக்கு தெரியுமா.....? நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்குங்க மக்கழே.

டென்ட் கொட்டாய் :

இந்த டென்ட் கொட்டாய் டைப் மக்கள் வேற யாரும் இல்லங்க, உங்ககூடவே இருப்பாங்களே 'உலக சினிமா பைத்தியங்கள்' அவங்களேதான். எந்நேரமும் டொரன்ட்ல ஏதாவது படத்தை டவுண்லோட் பண்ணிப் பார்த்துட்டு, 'அந்த ஈரானியன் டைரக்டர் என்ன சொல்றார்னா, சூப்பர் சிங்கர்ல பாடினவரே ஒரு சூப்பர் சிங்கர்தாங்கிறாரு'னு புதுசு புதுசா தத்துவம் சொல்வானுங்க. இவங்களைலாம் நைட் ரெண்டு மணிக்கு எழுப்பிக் கேட்டாகூட 'என்னடா இது லைட்டிங்கே சரியில்லை'னு சொல்லிட்டுத் தூங்கிடுவாங்க. எந்தத் தமிழ்ப்படம் பார்த்தாலும் இது அதுல சுட்டது, அது இதுல பொறிச்சதுனு கம்ப்ளைன்ட் பண்ணி ஒரே டார்ச்சர்ஸ் ஆஃப் தண்ணிவண்டியா இருப்பானுங்க.

டவுசர் பாண்டிஸ் :

தங்களை எப்பவும் அப்டேடட் யூத்னு நினைச்சுக்கிட்டு காமெடி பண்ற எல்லாரும் டவுசர் பாண்டிஸ்தான். டிசைன் டிசைனா ஹேர் கட் பண்றது, பார்க்கவே சகிக்காத கலர்ல டிரெஸ் போடுறது, 'இப்ப விழுமோ அப்ப விழுமோனு' பயப்படுற அளவுக்கு பேன்ட் போடுறது, கிளாஸ் ரூமுக்குக்கூட ஸ்லிப்பர்ஸ் போடுறதுனு புதுசு புதுசா எதாவது ட்ரெண்ட் க்ரியேட் பண்றதுதான் இவங்க வேலை. கடைக்குப் பால் வாங்கப் போனாலும் சரி, டைம் பாஸ் பண்ண மாலுக்குப் போனாலும் சரி... எல்லா இடத்துக்கும் அரை டவுசர் போடுறவங்கதான் இவங்க. இதுதான் பெயர்க் காரணம். இவங்ககூடலாம் சேராதீங்க ஃப்ரெண்ட்ச். அப்பறம் நீங்களும்......பச்.

பாலா படம் :

நீங்க எங்கே இருந்தாலும் சரி, உங்ககூட இப்படி ஒருத்தர் கண்டிப்பா இருப்பார். காலையில் மூணு தடவைக் குளிச்சிட்டு வந்தாகூட மூணு மாசம் முன்னாடி குளிச்சிட்டு வந்த மாதிரி லுக்லயே இருப்பாங்க. பாலா பட க்ளைமாக்ஸ்ல வர ஹீரோ கணக்கா எப்போ யாரைக் கடிச்சுத் திங்கலாம்ங்கிற மாதிரியே இருப்பாங்க. தாடி வெச்சாலும் சரி, நாலு மாசம் ஜிம்முக்குப் போய் பாடி வெச்சாலும் சரி... இவங்களுக்கு மட்டும்  அந்த கெத்து லுக் வரவே வராது. அட வாட்ஸ் அப் ஸ்டேடஸ்கூட 'கேரளா முழுக்கா சேச்சி. எனக்கு என்னமோ ஆச்சி'னு ஃபீலிங்கா (???) வைப்பானுங்க. இப்படி வருத்தப்படுற வாலிபாஸ் எல்லாருமே பாலா படம்தான்.

நெட் பேக்கு :

எப்பவும் நெட் யூஸ் பண்ணிட்டே இருக்கீங்களா? பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவைதான் மொபைலை விட்டுக் கண்ணை எடுக்குறீங்களா? எந்நேரமும் நோட்டிஃபிகேஷன் செக் பண்றீங்களா? ஃப்ரெண்ட்கூட கடலை மிட்டாய் சப்பிட்டதுக்குக்கூட 'பீலிங் ஆஸம் வாங்கித் தந்தவனுக்கு எவ்ளோ பாசம்' அப்படினு ஸ்டேட்டஸ் போடுறீங்களா, இதோ இதைப் படிச்சிட்டு அதை அப்படியே காப்பி பண்ணி ஃபேஸ்புக்ல எழுதுறீங்களா? ப்ளூ டிக்குக்காக வெயிட் பண்றீங்களா? கை காசு எல்லாம் நெட் கார்ட் வாங்கியே காலி பண்றீங்களா? நீங்க.....நீங்க.....நீங்க ஒரு நெட் பேக்கு ப்ரோ. பேக் இல்ல ப்ரோ பேக்கு.

ஸ்லீப்பர் செல் :

கிளாஸ்ல எது நடந்தாலும் சரி, ஏன்... டீச்சர் அதிசயமா புரியற மாதிரி பாடம் நடத்தினாகூட சரி, எப்பவும் ஸ்லீப்பிங் மோட்லயே இருக்கிறவங்கதான் இந்த ஸ்லீப்பர் செல். நைட் ஃபுல்லா குல்லா போடாத கூர்க்கா கணக்கா நின்னு மொபைல் யூஸ் பண்ணிட்டு காலைல ஆபீஸ்லேயும், கிளாஸ்லேயும் தூங்குற பழக்கம் உங்களுக்கு இருக்கா... அப்படினா  நீங்களும் ஸ்லீப்பர் செல்தான். இப்படியே நைட்ல தூங்காம பகல்ல தூங்கினா சீக்கிரமே இன்சோம்னியா வருமாம் மக்கழே... 'ஸ்லீப்பர் செல்ஸ் எல்லோரும் நாட்டுக்குக் கெடுதல்'னு நம்ம விஜய் அண்ணா சொன்னதைக் கேளுங்க ஃப்ரெண்ட்ஸ்.

செல்ஃபி சேகர் :


ஒரு முகமோ இரு முகமோ அப்படினு  ஃபீல் பண்ணிட்டு விதவிதமா போஸ் கொடுத்து செல்ஃபி எடுக்கிறவங்க எல்லாரும் செல்ஃபி சேகர்தான். கோணவாய் செல்ஃபி, கொலை பண்ற செல்ஃபி, மலை மேல நிற்கிற செல்ஃபி, அப்படியே மலையிலேர்ந்து விழுற செல்ஃபினு விதவிதமா செல்ஃபி எடுக்கிற பொண்ணுங்க பசங்க எல்லோரும் செல்ஃபி சேகர் வகைதான். செல்ஃபி சேகர் அப்படினு உங்களை யார் கிண்டல் பண்ணாலும் கவலைப்படாதீங்க பாஸ்.......ஏன்னா உன் செல்ஃபி உன் உரிமை.

கல்யாண் ஜூவல்லர்ஸ் :

இது வேற யாரும் இல்லைங்க. ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல, வாட்ஸ் அப்லலாம் எப்பவும் புரட்சி மோட்லயே கம்பு சுத்திட்டு இருக்கிறவங்கதான் இந்த கல்யாண் ஜூவல்லர்ஸ். எது நடந்தாலும் சரி. (த்ரிஷாவுக்கு எறும்பு கடிச்சாகூட) உடனே போராளியா மாறி இது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அப்படினு ஃபேஸ்புக்ல நாலு ஸ்டேட்டஸ் போடுவாங்க. 'இட்லிக்கு காரப்பொடி இல்லை, இதுக்கு மேல நான் மனுசனே இல்லை'னு மொக்கை ரைமிங்கில் ஏதாவது பேசி கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு கணக்கா எப்பவும் 'இது ஒரு புரட்சிப் போராட்டம்' அப்படினு கத்திக்கிட்டு இருக்கிறவங்களைத் தாராளமா கல்யாண் ஜூவல்லர்ஸ்னு சொல்லலாம்.

பாம்பே பொண்ணு :

அட! இந்த மாதிரிப் பொண்ணுங்களை நீங்க தினம் தினம் பஸ் ஸ்டாண்ட்ல பார்க்கலாம். செவ்வாய் கிரகத்தில் செடி நட்டுக்கிட்டு இருக்கிறவன்கூட இவங்க ஹேர் ஸ்பிரே வாசத்துல மயங்கி விழுந்துடுவான். தமிழ்ப்பட பேய்கூட இவங்க மேக்கப் பார்த்து தெறிச்சி ஓடிடும், ஷங்கர் ரோட்டுல அடிக்கிற பெயின்ட் பூரா இவங்க முகத்துலதான் இருக்கும். இப்படி ஓவர் மேக்கப் போட்டுக்கிற பொண்ணுங்க எல்லோரும் 'பாம்பே பொண்ணு' தான். பார்த்த உடனே ப்ப்ப்ப்ப்ப்பா னு சொல்லத் தோனுதா அப்படின்னா கண்டிப்பா அவங்க பாம்பே பொண்ணுதான். இதே மாதிரி ஓவர் மேக்கப் போடுற பசங்களுக்கு ஆம்பள அனுஷ்கானு ஒரு பெயர் இருக்கு ஃப்ரெண்ட்ஸ்.

மங்கள்யான் :

கம்யூட்டரைக் கல்யாணம் பண்ணிட்டு ஹார்ட்வேர்கூட குடும்பம் நடத்திட்டு சாப்பிடறப்போகூட சாஃப்ட்வேர் பற்றிப் பேசுறவங்கதான் இந்த மங்கள்யான் டைப் பீப்பிள். எப்போதும் கம்ப்யூட்டர் கையுமா சிட்டி ரோபோட் கணக்கா புரியாத மாதிரி எதையாவது பேசிட்டே இருக்கிறவங்க எல்லோரும் இவங்கதான். கம்ப்யூட்டரே லைஃப், வைஃபையே வொய்ஃப் அப்படினு சின்சியரா தத்துவம் பேசிட்டு எப்பவும் சயிண்டிபிக் பேச்சு பேசுறவங்கதான் இந்த மங்கள்யான்ஸ்......ரொம்ப சிக்கலானவங்க.

அமெரிக்க மாப்பிள்ளை

காலையில் டீயில சுகர் இல்லைனாலும் சரி, பக்கத்து வீட்ல பார்க்கிற மாதிரி ஃபிகர் இல்லைனாலும் சரி எல்லாத்துக்கும் 'ச்சே இந்த இந்தியாவே இப்படித்தான் வெளிநாட்ல எப்படித் தெரியுமா'னு எப்போதும் 'ஃபீலிங் அமெரிக்கா' மோட்லயே இருக்கிறவங்கதான் இந்த அமெரிக்க மாப்பிள்ளை. அவங்க சவுதி, சிங்கப்பூர்னு  எங்கே வேலை பார்த்தாலும் ஃபாரீன் பெருமை பேசினா, அவங்க அமெரிக்க மாப்பிள்ளைதான். ஃபாரீன்ல பவர் ஸ்டார் கணக்கா காமெடி பீஸா இருந்தாலும் உள்ளூர்ல இட்லியைக்கூட ஸ்பூன்லதான் சாப்பிடுவாங்க. மிஸ்டர் அமெரிக்க மாப்பிள்ளைஸ்... நீங்க வேற நாடு நாங்க வேற நாடு இல்லை பாஸ். எல்லாம் ஒரே நாடு இந்தியா!

-லோ.சியாம் சுந்தர்
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close