Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் டாப் பிராண்ட்கள்: தமிழகத்தின் பவண்டோ 200 இடங்கள் முன்னேறி சாதனை!

இந்தியாவின் அதிக கவர்ச்சியான பிராண்ட்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பவண்டோ, டிவிஎஸ், ஆச்சி ஃபுட்ஸ், ராம்ராஜ் காட்டன் ஆகியவை கணிசமான இடங்கள் முன்னேறி அதிக கவர்ச்சியான பிராண்ட்களாக இடம்பிடித்துள்ளன.

"இந்தியாவின் அதிகக் கவர்ச்சியான பிராண்ட்கள்" எனும் தலைப்பில் டிஆர்ஏ ரிசர்ச் நிறுவனம் 2016-ம் ஆண்டுக்கான நாட்டின் பிராண்ட் கவர்ச்சி குறித்த ஆய்வினை சென்னையில் வெளியிட்டுள்ளது.

 

இதில் இந்தியாவின் அதிக கவர்ச்சியான பிராண்டாக எல்ஜி முதலிடத்தைப் பிடித்துள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்தப் பிரபல மின்னணு பிராண்ட் கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்து நடப்பு ஆண்டு 1-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. 

சோனி முந்தைய ஆண்டைப் போன்றே இவ்வாண்டும், 2-வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல்ஸ் 3-வது, ஹோண்டா 4-வது இடங்களைப் பிடித்துள்ளன. ட்யூரபிள் பிரிவில் சாம்சங் 2015ல் 87-ம் இடத்திலிருந்து நடப்பு ஆண்டு அதிரடியாக 5-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. 

வெளிநாட்டு பிராண்ட்களுக்கு இடையே முழுக்க முழுக்க இந்திய பிராண்டான பஜாஜ் மட்டுமே இந்தப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இந்திய பிராண்டான டாடா கடந்த ஆண்டு 10-ம் இடத்திலிருந்து நடப்பு ஆண்டு 7-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. மாருதி 8-வது, ஏர்டெல் 9-வது, நோக்கியா 10-வது இடங்களை வகிக்கின்றன. 

டாப் 10 இந்திய பிராண்ட்கள்!

1. எல்ஜி
2. சோனி
3. சாம்சங் மொபைல்ஸ்
4. ஹோண்டா
5. சாம்சங் டியூரபிள்ஸ்
6. பஜாஜ்
7. டாடா
8. மாருதி 
9. ஏர்டெல்
10. நோக்கியா

இதில் சென்னையைச் சேர்ந்த பிராண்ட்கள் குறிப்பாக டிவிஎஸ், எம்.ஆர்.எஃப், மெடிமிக்ஸ், ப்ரீதி அப்ளையன்ஸ், பட்டர்ஃப்ளை அப்ளையன்சஸ் ஆகியவை  குறிப்பிடப்பட்டுள்ள இடங்களைப் பிடித்துள்ளன. சென்னையைச் சேர்ந்த 44 பிராண்ட்கள் பட்டியலிடப்பட்டுள்ள 1,000 கவர்ச்சி பிராண்ட்களுள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் 16 நகரங்களில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பதை அடைப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

நாட்டின் முக்கியத் தொழில்துறைக் குடும்பங்கள் பல சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வருகின்றன. சென்னையைச் சேர்ந்த 14 பிராண்ட்கள் சராசரியாக 87 இடங்களுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளன. மற்றொரு மகத்தான சாதனையாக குளிர்பானப் பிரிவில் ஒரேயொரு பிராண்டான பவண்டோ மட்டுமே கடந்த ஆண்டு பெற்ற இடத்திலிருந்து 200க்கும் அதிகமான ரேங்குகள் முன்னேறி நடப்பு ஆண்டு 231-வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிராண்டுகளின் நம்பகத்தன்மையையும், நாணயமுமே அவற்றை அதிக கவர்ச்சியான பிராண்டாகத் திகழ வைத்துள்ளதாக டிஆர்ஏ நிறுவனத்தின் ரிசர்ச் ஹெட் சச்சின் போஸ்லே தெரிவித்துள்ளார்.

சோ.கார்த்திகேயன்

படம்: தி.குமரகுருபரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close