Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பார்த்ததையெல்லாம் திங்காது ஓநாய்!’ சிங்கம் டீமின் கவனத்துக்கு ஓநாயின் இயல்புகள் #S3 #Singam3

                        

 

 

சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடித்த சிங்கம்-3 டீசர் யூடியூபில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. சிங்கம் -3 டீசரில் சூர்யா பேசும் "நான் பார்த்ததையெல்லாம் திங்குற ஓநாய் இல்ல, பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம்" என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. உண்மையாலுமே ஓநாய் பார்த்ததையெல்லாம் திங்குமா? அதோட  இயல்புகள் என்னனு தேடினோம். விளையாட்டா தேடினப்ப சிக்குன சில விஷயங்கள் வாவ் சொல்ல வைத்தது. அதுகுறித்து விளக்குகிறார் உயிரியல் துறை பேராசிரியர், டாக்டர் ராமசுப்பு. சிங்கம்-3 டீம் ப்ளீஸ் இத கொஞ்சம் கவனிக்கலாமே...

ஓநாய் நாய்க்குடும்பத்தை சேர்ந்தது. வீட்டு நாயை விட உருவத்தில் பெரியது. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியக்காடுகளிலும் அதிகமாக காணப்படுகின்றன. கூட்டமாகவே வாழும் பழக்கப்பட்ட ஊனுண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்தது.

ஓநாயை பழக்கி வேறு இனமாக திரித்து உருவாக்கியதுதான் வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.

ஓநாய்களில் வெண் ஓநாய், செந்நாய் என இரண்டு வகைகள் மட்டுமே இன்று உயிரோடு உள்ளன. செந்நாய் இன்று காடுகளில் முற்றிலும் அழிந்துபோனதாக சொல்லப்படுகிறது.

சிங்கத்தைப் போலவே ஓநாயும் பசித்தால் மட்டுமே உணவை உண்ணும். ஓநாய் தன்னுடைய நாய் குடும்ப வழக்கப்படி தன்னை விட சிறிய மிருகங்களை வேட்டையாடி உண்ணும்.

ஓநாய் வேட்டையாடும் முறையில் ஒரு நேர்த்தியும், தந்திரமும் இருக்கும். எப்போதும் 'U' வடிவ முறையில் ஓநாய் கூட்டமாக வேட்டையாடும். ஒருமுறை குறிவைத்துவிட்டால் சிங்கத்தின்  பார்வையில் மட்டுமல்ல, ஓநாயின் பார்வையிலிருந்தும் தப்பிக்கவே முடியாது.

 ஓநாயானது 35 முதல் 55 கிலோ எடையும், 75 செ.மீ உயரமும் இருக்கும். பெண் ஓநாய்கள் சற்று சிறியதாக இருக்கும். பெண் ஓநாய்களுக்கும் தனது குட்டிகளுக்கும் ஆண் ஓநாய் உணவினை வேட்டையாடி கொண்டு வரும். தன்னை விட உயரமான விலங்குகளை ஓநாய் வேட்டையாடுவதில்லை.

அதேபோல் தான் வேட்டையாடிய உணவினை மிச்சம் வைப்பதில்லை. மான், காட்டு முயல் என்றால் ஓநாய்களுக்கு வேட்டையாடுவதில் ஆர்வம் அதிகம். காட்டு விலங்குகளில் சிங்கம் மட்டும் தான் வேட்டையாடும், மற்ற விலங்குகள் வேட்டையாடுவதில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது" என்றார்.

டீசருக்கும், படத்துக்கும் ரைம்ஸ், ரைமிங், டைமிங் எல்லாம் முக்கியம்தான், ஆனா லாஜிக் ரொம்ப முக்கியம் பாஸ்!

 

 

 

- துரை.நாகராஜன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close